Jayamohan's son Marriage 
வெள்ளித்திரை

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மகனின் திருமண விழா... பிரபலங்கள் நேரில் வாழ்த்து!

விஜி

பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் மகன் திருமண வரவேற்பு விழாவில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

நாவல்கள், சிறுகதை, இலக்கிய விமர்சனம், இலக்கிய வரலாறு, பயணக் கட்டுரைகள், பண்பாடு, மரபு, மதம், தத்துவம், என பல தளங்களில் தன்னுடைய வரிகள் மூலம் கவனம் ஈர்த்தவர் ஜெயமோகன். இவரது கதைகளை தழுவி நான் கடவுள், கடல், வெந்து தணிந்தது காடு போன்ற தமிழ் படங்களும், ஒழிமுறை போன்ற மலையாள படங்களும் எடுக்கப்பட்டுள்ளது. இவரது எழுத்துக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. பள்ளி சிறுகதை முதல் பெரிய பெரிய நூல் வெளியீட்டு விழா வரை ஜெயமோகன் என்ற பெயரை நீங்கள் கடந்து செல்லாமல் இருந்திருக்க மாட்டீர்கள்.

Jayamohan's son Marriage

இவரது மகன் அஜிதனுக்கு, மீனாட்சி என்பவருடன் கோவையில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியானது சென்னையில் நடந்தது. இதில், நடிகர்கள் சிவகுமார், விஜய் சேதுபதி, இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், வசந்த், ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் வாசுதேவ் மேனன், லிங்குசாமி, வசந்தபாலன், மிஷ்கின், சீனுராமசாமி, சுப்பிரமணிய சிவா, மித்ரன் ஜவஹர், சுகா, தனா மற்றும் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான செழியன் உட்பட பல கலைஞர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ஜெயமோகனின் மகன் அஜிதனும் ஒரு எழுத்தாளர் என்பதும், இதுவரை இரண்டு நாவல்களை அவர் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT