Painting
Painting 
கலை / கலாச்சாரம்

ஓவியக் கலை ரசிகர்களுக்கான ஓவியக் கலைக்களஞ்சியத் தளம்!

தேனி மு.சுப்பிரமணி

வியக்கலை என்பது வண்ணங்களைப் பயன்படுத்தி, வரைபவரின் எண்ண ஓட்டத்தையும், நோக்கங்களையும் வெளிக்கொணரும் ஒரு கலை ஆகும். ஓவியம் ஒருவரின் பல்வேறு தகவல்களை ஆவணப்படுத்துவதற்கும், வெளிப்படுத்துவதற்குமான ஓர் ஊடகமாகச் செயல்படுகிறது. இந்த ஓவியக்கலை குறித்த பல்வேறு தகவல்களைக்கொண்டு ஓவியக் கலைக்களஞ்சியமாக ஓர் இணையதளம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது தெரியுமா உங்களுக்கு?

இந்த இணையதளத்தில் ஓவியர்களைப் பெயர் வழியில் தேடல் (Artists by Name), ஓவியவேலைகளைத் தலைப்பு வழியில் தேடல் (Artworks by Title), ஓவிய அருங்காட்சியகங்கள் (Art Museums) என்று மூன்று முதன்மைத் தலைப்புகள் வழியாகத் தேடுவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்தத் தேடுதல் மூலம், இந்த இணையதளத்திலிருக்கும் ஓவியம் குறித்த செய்திகளை விரைவில் கண்டறிந்து அதுகுறித்த செய்திகளை முழுமையாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.

இது தவிர்த்து, இங்கு ஆங்கில எழுத்துக்களின் அகரவரிசையில் ஓவியர்கள் (Name, alphabetically), இயக்கம் (Movement), ஊடகம் (Medium), பொருள் (Subject), தேசியம் (Nationality), பெண் ஓவியர்கள் (Women Artists) எனும் தலைப்புகளிலான வழிமுறைகளில் எளிமையாகத் தேடிக் கண்டறிவதற்கான வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் குறிப்பிட்ட ஓவியர்கள் குறித்த செய்தியுடன், அவர்களின் சில ஓவியங்களையும் பார்வையிட முடிவதுடன், அவர்களைப் பற்றிய முழுமையான செய்திகளை அறிந்துகொள்வதற்காக, அவரைப் பற்றிய செய்திகள் இடம் பெற்றிருக்கும் பிற தளங்களுக்கான இணைப்பு வசதியும் அளிக்கப்பட்டிருக்கின்றன.   

இவைகளைத் தவிர்த்து, கட்டுரைகள் (Articles), ஓவியச் செய்திகள் (Art News), உலகளாவிய ஓவிய அருங்காட்சியகங்கள் (Art Museums Worldwide), இணைப்புகள் (Links), சொல்லடைவுகள் (Glossaries) எனும் முதன்மைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

கட்டுரைகள் எனும் தலைப்பில் சொடுக்கினால் ஓவியம் தொடர்புடைய ஒன்பதாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன.

ஓவியச் செய்திகள் எனும் தலைப்பில் சொடுக்கினால், ஓவியம், ஓவியப் போட்டிகள் போன்ற ஓவியத் தொடர்புடைய செய்திகள் தொகுத்துத் தரப்பட்டு வருகின்றன.

ஓவிய அருங்காட்சியகங்கள் (Art Museums) எனுமிடத்தில் சொடுக்கினால், உலக வரைபடம் (World Map) ஒன்று பார்வைக்குக் கிடைக்கிறது. இப்படமானது ஏழு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த மண்டலங்களின் பெயர்களில் சொடுக்கினால், அந்த மண்டலப்பகுதியில் இருக்கும் நாடுகள், மாநிலங்கள், நகரங்கள் வாரியாக அருங்காட்சியகங்கள் குறித்த பட்டியல் ஆங்கில எழுத்துக்களின் அகரவரிசைப்படி இடம் பெற்றிருக்கிறது.

இங்கிருக்கும் அருங்காட்சியகப் பெயர்களின் மேல் சொடுக்கினால், குறிப்பிட்ட அருங்காட்சியகத்தின் இணையதளத்திற்கு இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன்வழியாகக் குறிப்பிட்ட அருங்காட்சியகத்தின் முழுமையான தகவல்களையும் தெரிந்துகொள்ள முடிகிறது. 

இணைப்புகள் (Links) எனுமிடத்தில் சொடுக்கினால், பொது நுண்கலை இணைப்புகள் (General Fine Art links) எனும் தலைப்பின் கீழ் ஓவியம் தொடர்புடைய தகவல்களைக் கொண்டிருக்கும் பல்வேறு இணையதளங்களின் பெயர்கள் மற்றும் அத்தளம் குறித்த குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. இங்கிருக்கும் இணையதளத்தின் பெயரில் சொடுக்கி, அந்தத்தளத்திற்குச் சென்று மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. 

சொல்லடைவுகள் எனும் தலைப்பில் சொடுக்கினால், அங்கு நுண்கலைக் குறிச்சொற்கள் (Fine Art Terms), கிரேக்க மற்றும் ரோமானியத் தொன்மவியல் (Greek and Roman Mythology), கிறித்தவப் புனிதர்கள் (Christian Saints) எனும் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. இங்கு சொடுக்கினால், தலைப்புடன் தொடர்புடைய சொற்கள் ஆங்கில எழுத்துகளின் அகரவரிசையில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. குறிப்பிட்ட சொற்களின் மேல் சொடுக்கினால், அந்தச் சொற்கள் தொடர்புடைய கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கான இணைப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

சொடுக்கித்தான் பாருங்களேன்!

ஓவியர்கள் மட்டுமல்லாமல், சிறந்த ஓவியங்களைக் கண்டு ரசிக்க விரும்புபவர்கள், ஓவிய அருங்காட்சியகங்களுக்குச் செல்ல விரும்புபவர்கள் என்று ஓவியக்கலை மீது ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் இத்தளத்தை பார்வையிட்டு பயன் பெறலாம்.

பார்வையிட விரும்புபவர்கள்  http://www.artcyclopedia.com/ எனும் இணைய முகவரிக்குப் பயணிக்கலாம்.

காலங்கள் பல கடந்தும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் தொட்டி பாலம்!

செத்துவிட்டதுபோல் நடிக்கும் ‘கோட்டி’ – அது என்ன?

வீட்டு உபயோகப் பொருட்கள் நீண்ட நாட்கள் பயன் தர சில எளிய ஆலோசனைகள்!

The History and Making of the Doraemon Cartoon!

திரையில் கல்லா கட்டும் மகாராஜா... ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?

SCROLL FOR NEXT