உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை சீனா https://archive.roar.media
கலை / கலாச்சாரம்

வியப்பில் ஆழ்த்தும் விந்தைமிகு புத்தர் கோயில்கள்!

கோவீ.ராஜேந்திரன்

ன்பின் மூலம் அனைத்தையும் சாதிக்கலாம் என்று வாழ்ந்து காட்டியவர் புத்தர் பெருமான். உலகம் முழுவதும் இவருக்கு பக்தர்களும் கோயில்கள் பலவும் உள்ளன. அந்த வகையில் ஆச்சரியமூட்டும் சில புத்தர் கோயில்களை இங்கு காணலாம்.

ஆண்டுக்கு ஒருமுறை ஏணி மூலம் ஏறி தரிசிக்கப்படும் புத்தர்: மியான்மர் நாட்டின் மோன் பகுதியில் 1200 மீட்டர் உயரத்தில் உள்ள உருண்டையான பாறை ஒன்றின் மீது ‘ஹியாக்-ஹி-யூ’ என்ற புத்த ஆலயம் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் மலை விளிம்பில் அமைந்துள்ள கிரானைட் பாறையில் தங்க மூலாம் பூசி, அதன் மீது 17 ஆயிரத்து 645 கிலோ எடை கொண்ட கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. இது கீழே விழுந்து விடாமல் இருக்கக் காரணம் இப்பாறையின் அடியில் புத்தரின் முடி இருப்பதாக நம்பப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை ஏணி மூலம் ஏறி இங்குள்ள புத்த பெருமானை தரிசித்து தங்கம் காணிக்கை செலுத்தி வருகிறார்கள் பக்தர்கள்.

வித்தியாசமான சவப்பெட்டி வழிபாடு: தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரிலிருந்து 75 கி.மீ. தொலைவில் உள்ளது. ‘வாட்புரோமனீ’ என்ற பகுதி. இங்குள்ள புத்த கோயிலில் உலகில் வேறு எங்குமில்லாதபடி கோயிலின் உள்ளே சவப்பெட்டி வைத்து சடங்குகள் செய்கிறார்கள். இந்த புத்த கோயிலில் உள்ள சவப்பெட்டிக்குள் சிறிது நேரம் படுத்து எழுந்தால் மறுபிறவி எடுக்கலாம் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இந்தக் கோயிலுக்கு வந்து சவப்பெட்டி வழிபாடு செய்தால் வாழ்க்கையில் படும் கஷ்டங்கள் எல்லாம் கரைந்து மறுபிறவி எடுப்பது போன்ற புத்துணர்ச்சி பெற முடியும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

உருவகங்களாக மாறி கோயிலை வலம் பக்தர்கள்: பாங்காக்கில் உள்ள மரகத புத்தர் கோயில் ‘வாட் ப்ராக் யூ.’ புத்தர் தவம் செய்யும் கோலத்தில் உள்ள மரகத புத்தரைக் காண பக்தர்கள் இங்கு வருகிறார்கள். இந்த புத்த ஆலயத்தில் ஒரு வித்தியாசமான பிரார்த்தனையை பக்தர்கள் மேற்கொள்கிறார்கள். அதாவது, உடல் முழுவதும் பல்வேறு வகையான உருவங்களை பச்சை குத்திக்கொள்கின்றனர். இப்படிச் செய்வதால் ஆவி மற்றும் துர்தேவதைகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

நம்மூர் கோயில்களில் அலகு குத்தி வேண்டுதல் செய்வதைப்போல் இந்த கோயிலில் பச்சை குத்தும் திருவிழா நடைபெறுகிறது. அன்றைக்கு கூர்மையான மூங்கில் கம்புகளை கொண்டு பக்தர்கள் புலி, குரங்கு போன்ற பல்வேறு வகையான உருவங்களை பச்சை குத்திக்கொள்கின்றனர். பச்சை குத்திய உருவகங்களாக மாறி கோயிலை வலம் வருகிறார்கள்.

கடற்சிப்பி புத்த கோயில்: தைவான் நாட்டின் சான்சி மலையடிவாரத்தில் ஒரு புத்தர் கோயில் உள்ளது. இது முழுக்க முழுக்க கடற்சிப்பிகளைக் கொண்டே உருவாக்கப்பட்ட புத்தர் கோயில். கோபுரம், சுவர், தூண்கள், சிற்பங்கள் மற்றும் பொம்மைகள் என கோயிலில் உள்ள அனைத்தும் சிப்பிக்களைக் கொண்டே பதித்து அழகுபடுத்தி உள்ளனர். இதேபோல் தாய்லாந்தின் சிசாகேட் மாநிலத்தில் உள்ள ஒரு புத்த கோயிலில் பத்து லட்சம் காலி பாட்டில்களை கொண்டே சுவர்களை அலங்கரித்து உள்ளனர்.

ஈசாலா ஊர்வலம் இலங்கை

யானைக்கு, ராணுவ பாதுகாப்பு வழங்கும் புத்த கோயில்: இலங்கையில் உள்ள கண்டியில் உலகப்புகழ் பெற்ற புத்த கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். அப்போது கண்டியில் உள்ள மலைக்கு புத்தர் கோயிலில் இருந்து, புனிதப் பொருட்கள், ஊர்வலமாக எடுத்து செல்லப்படும். இதற்கு, ஈசாலா ஊர்வலம் என்று பெயர். மொத்தம் 90 கி.மீ. நடைபெறும் இந்த ஊர்வலத்தில் 100 யானைகள் கலந்து கொள்ளும். ஊர்வலமாக வரும் நாடுங்காமுவா ராஜா என்ற யானைக்கு, ராணுவப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

ஒயின் பிரசாதம் தரும் புத்தர் கோயில்: ஜப்பானில் உள்ள புத்தர் கோயில் ‘டெய் சென்ஜி.’ இது டோக்கியோ நகரில் இருந்து மேற்கே 100 கி.மீ. தொலைவில் உள்ள பூஜி மலைப்பகுதியில் திராட்சை தோட்டங்கள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. எனவே, இங்கு வரும் பக்தர்கள் திராட்சை மற்றும் மது பாட்டில்களை காணிக்கையாகக் கொடுக்கிறார்கள். இதனால் இங்கு புத்தரை வழிபட வரும் பக்தர்களுக்கும் ஒயினையே பிரசாதமாகத் தருகிறார்கள்.

அதிர்ஷ்ட மரம் உள்ள புத்தர் ஆலயம்: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர் அருகே உள்ள உல்லாங்காங் நகரில், ‘நான் டியான்’ என்ற புத்தர் கோயில் உள்ளது. இக்கோயில் அருகே ஒரு உள்ளது. அதன் மீது சிவப்பு நிற ரிப்பனை எறிந்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

நான்கு முக புத்தர் சிலை: இந்தோனேசியா நாட்டின் ஜாவாவில் உள்ள சுரயாயா என்ற இடத்தில் உள்ள புத்த கோயிலில் நான்கு முக புத்தர் சிலை உள்ளது. தங்க நிறத்திலான இந்த சிலையின் உயரம் 9 மீட்டர்கள்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT