பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரின் லூவர் மியூசியத்தில் கண்ணாடி சட்டகத்துக்குள் அடைக்கப்பட்டுக் காக்கப்படும், உலகமே உற்று நோக்கிக் களித்துக் கொண்டிருக்கும் மோனாலிசாவின் புன்னகையைக் காண ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் மில்லியன் கணக்கான மக்கள் பாரிஸ் நகருக்கு வந்து செல்கிறார்கள்.
யார் இந்த மோனாலிசா? அழகான புன்னகையுடன் ஒரு பெண் உருவத்தின் படம் மோனாலிசா என அழைக்கப்படுகிறது.பல இடங்களில் மோனாலிசாவின் படத்தைப் பார்க்கிறோம். அவள் படத்தைப் பார்த்தால் ஒரு படம் போல் தெரிகிறது. சில சமயம் புன்னகை, சில சமயம் சோகம். ஆனால், யார் இந்த மோனாலிசா? பல நூறு ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்களால் விடை காணப்படாத கேள்வி இது.
மோனாலிசாவை இத்தாலிய விஞ்ஞானி லியானார்டோ டா வின்சி வரைந்தார். அந்த படத்தில் இருக்கும் அசல் மோனாலிசா யார்? பல நூற்றாண்டுகளாக ஆராய்ச்சியாளர்களை குழப்பிய கேள்வியாக இது உள்ளது. டா வின்சி அதை கற்பனை செய்தாரா? உண்மையில் அவள் தோன்றிய பெண்ணா? சில ஆராய்ச்சியாளர்கள் டா வின்சி தன்னை ஒரு பெண்ணாக கற்பனை செய்ததாகக் கூட நம்புகிறார்கள். ஆனால் உண்மை தெரியவில்லை.
இன்னொரு விளக்கம் மோனாலிசாவின் உண்மையான பெயர் லிசா டெல் ஜியோகோண்டோ. அவர் இத்தாலியின் புளோரன்ஸ் நகரைச் சேர்ந்த பட்டு வியாபாரியான கெரார்டியை மணந்தார். அப்போது அவருக்கு வயது 15. தனது இரண்டாவது மகன் பிறந்ததையொட்டி புதிய வீட்டிற்கு ஓவியம் வரைந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், இதற்கும் சரியான அடிப்படை சான்றுகள் இல்லை.
மோனாலிசா உலகின் மிகவும் பிரபலமான படம். டா வின்சி 1503 - 1506க்கு இடையில் இந்த ஓவியத்தை வரைந்ததாகக் கூறப்படுகிறது. இது பாப்லர் பேனலில் ஒரு எண்ணெய் ஓவியம். இந்த ஓவியத்திற்காகவும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பிரான்சின் மன்னர் பிரான்சிஸ் அந்த ஓவியத்தை வாங்கி பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் நிரந்தரக் காட்சிக்கு வைத்தார்.
1950களின் பிற்பகுதியில் சில காழ்ப்புணர்ச்சிகாரர்களால் ஓவியம் சிறிது சேதமடைந்தது. அதனால் அவரது ஓவியம் தற்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் வைக்கப்பட்டுள்ளது. மோனாலிசாவின் உதடுகளில் புன்னகையைக் காண ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் பாரிஸ் நகரத்திற்கு வருகிறார்கள்.
மோனாலிசாவுக்கு ஏன் புருவம் இல்லை என்று பலர் ஆச்சரியப்படுகிறார்கள். பாஸ்கல் காட் என்ற பொறியாளர் இந்த மர்மத்தைத் தீர்த்தார். டாவின்சியின் ஓவியம் மோனாலிசாவின் புருவங்களைக் கொண்டுள்ளது. காலப்போக்கில் படத்தை சுத்தம் செய்ததால் அவை மறைந்துவிட்டன. மோனாலிசா கண்ணை கூர்ந்து கவனித்தால், கண்ணைச் சுற்றியுள்ள வெடிப்புகள் லேசாக மறைந்தது போல் தோன்றும் என்று கூறுகிறார்.
மோனாலிசா ஓவியத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? இந்த ஓவியம் ஏலத்தில் விடப்பட்டால் $700 மில்லியனுக்கும் அதிகமாக (இந்திய பண மதிப்பில் ரூபாய் 60,000 கோடி) கிடைக்கும்.
இது மிகவும் விலைமதிப்பற்றது. மோனாலிசா யார்? அது எங்கிருந்தது? உறுதியான ஆதாரம் இல்லையென்றாலும், இருப்பினும் ஆராச்சியாளர்கள் விடுவதாக இல்லை. மோனாலிசா ஓவியத்தை ஆராய்ந்து கொண்டேதான் இருக்கிறார்கள். அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை இது.
ஓவியத்தில் வெறுங்கண்களால் பார்க்கத் தெரியாத அளவில், மனித முடியின் விட்டத்தைவிடக் குறைவான தடிமனில் தீட்டப்பட்டுள்ள இந்த அடிப்படை வண்ணத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். எக்ஸ் ரே கதிர்களின் உதவியுடன் இந்த வண்ணத் தீட்டலின் அணுக் கட்டமைப்பை ஆய்வு செய்ததில் புதிய முடிவுக்கு வந்துள்ளனர். அதன்படி, காரிய ஆக்ஸைடின் துணைப் பொருளான ப்ளம்போனாக்ரைட் வேதியியல்ரீதியாக இந்தப் பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது முதல்முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
பல நூற்றாண்டுகள் கடந்தும் நிலைத்திருக்கும் இந்த நெய் வண்ணக் கலவை மிகச் சிறப்பானவொன்று. ஆளி விதை அல்லது வால்நட் எண்ணெய்யில் ஆரஞ்சு வண்ணம் கொண்ட காரீய ஆக்ஸைடு தூளைக் கலந்து அதைச் சூடாக்குவதன் மூலம் அடர்த்தியை அதிகரிக்கவும் விரைவில் உலரக்கூடிய கலவையாகவும் டா வின்சி செய்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. நிச்சயமாக, இன்னமும் நிறைய, நிறைய கண்டுபிடிக்கப்பட வேண்டும். இப்போது வெறுமனே மேற்பரப்பைத்தான் சுரண்டிக் கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிடுகிறார் இதன் ஆராய்ச்சியாளர் விக்டர் கோன்சாலே.
மோனாலிசாவின் புன்னகைக்குப் பின் இன்னும் என்னவெல்லாம்தான் இருக்கப் போகின்றனவோ? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.