கலை / கலாச்சாரம்

பண்டைய காலத்தில் போரில் வென்ற மன்னர்கள் வாகை மலர்களை சூடிக்கொண்டது ஏன்?

எஸ்.விஜயலட்சுமி

ண்டைய தமிழ் வீரர்கள் மற்றும் மன்னர்கள் தாங்கள் போரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் வாகை மலர்களை சூடிக்கொண்டனர். ‘போரில் வெற்றிவாகை சூடினார்கள்’ என்ற சொற்றொடர் மிகவும் பிரபலம். அதற்கான காரணத்தைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

பண்டைய தமிழகம்: சங்கத் தமிழ் இலக்கியங்களில் வாகை மலர்கள் வெற்றியின் சின்னமாகக் கருதப்பட்டது. பண்டைய தமிழகம், கேரளா, ஆந்திர பிரதேசம் மற்றும் இலங்கையின் சில பகுதிகளைக் கொண்டிருந்தது. அங்கு வெற்றி பெற்ற மன்னர்களும் வீரர்களும் வாகை மலர்களை சூடிக்கொள்ளும் வழக்கம் இருந்தது.

ஐந்து நிலப்பரப்புகள்: சங்க இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ள ஐந்து நிலப்பரப்புகள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியனவாகும். ஒவ்வொரு நிலப்பரப்பும் குறிப்பிட்ட தெய்வங்கள், தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் மனித செயல்பாடுகளுடன் தொடர்புடையது. நிலம் மற்றும் நிலத்தைச் சார்ந்த பகுதி மருதம் என்று அழைக்கப்பட்டது.

மருதமும், வாகையும்: இந்த நிலப்பரப்பிற்கு சொந்தமான மலர் வாகை மலராகும். மருதம் விவசாயம் மற்றும் மேய்ச்சல் நிலப்பரப்பை குறிக்கிறது. தமிழர்கள் விவசாயத்தில் சிறந்து விளங்கினர். ஆகவே, மருத நிலம் போரின் சூழலில் வெற்றியைக் குறித்தது. அந்த  நிலப்பரப்பிற்கு சொந்தமான வாகை மலரை வெற்றியின் அடையாளமாகக் கருதி, அதை சூடியிருக்கலாம்.

சங்க இலக்கியக் குறிப்புகள்: பழந்தமிழ் இலக்கிய மரபின் குறிப்பிடத்தக்க பகுதியாக விளங்கும் சங்க இலக்கியங்களில் வாகை மலர் அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. இவை பெரும்பாலும் வெற்றி மற்றும் வீரத்தின் பின்னணியில் வாகை மலர்களை முன்னிலைப்படுத்துகின்றன. போர் வீரர்கள் வெற்றியுடன் போர் முனையில் இருந்து திரும்புவதையும், வாகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெற்றிகளைக் கொண்டாடுவதையும்  இலக்கியங்கள் விவரிக்கின்றன.

சின்னம்: தமிழ் கலாசாரத்தில் மரியாதை, வீரம் மற்றும் வெற்றி போன்றவற்றை வெளிப்படுத்துவதில் சின்னங்கள் முக்கியப் பங்கு ஆற்றின. வாகை மலர் ஒரு மதிப்புமிக்க சின்னமாக மாறியது. இது போர்க்களத்தில் வெற்றியைக் குறிப்பது மட்டுமல்லாமல், தனி நபரின் சமூக மற்றும் அரசியல் நிலையை மேம்படுத்தியது. பூவை அணிவது என்பது ஒருவரின் சாதனைகளை பகிரங்கமாக அறிவிப்பதற்கும் சமூக படிநிலையில் ஒருவரின் இடத்தை உறுதிப்படுத்துவதற்கும் ஒரு வழியாகும்.

அடையாளம்: வாகை பூக்கள் பிரகாசமான மஞ்சள் நிறம் கொண்டவை. இவற்றை சூடிக்கொள்ளும்போது அவை பார்ப்பதற்கு கண்களுக்கு அழகாகவும் கூட்டத்தில் இருந்தாலும் உடனடியாக அடையாளம் காணக்கூடியதாகவும் இருந்தது. பொது கொண்டாட்டங்களில் இந்த தெரிவுநிலை சாதகமாக இருந்திருக்கும். அங்கு மலரின் தனித்துவமான தோற்றம் சாமானியர்கள் முதல் பிரபுக்கள் வரை அனைத்து பார்வையாளர்களுக்கும் வெற்றியின் செய்தியை எளிதில் தெரிவிக்கும்.

உத்வேகம்: வாகை மலர்களால் தன்னை அலங்கரிக்கும் பாரம்பரியம் எதிர்கால சந்ததி வீரர்களுக்கு உத்வேகமாக அமையும். அவர்களின் முன்னோடிகளுக்கு இந்த சின்னங்கள் மூலம் கௌரவிக்கப்படுவதை பார்க்கும்போது இளைய போர் வீரர்கள் வீரம் மற்றும் வெற்றி போன்ற சாதனைகளை பெற தூண்டும். இது மலரின் கலாசார முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுகிறது.

தெய்வீக அருள்: பண்டைய தமிழ் கலாசாரத்தில் பூக்கள் பெரும்பாலும் இறைவழிபாட்டில் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தன. அவை தெய்வங்களை அலங்கரிக்கப் பயன்படுத்தப்பட்டன. வெற்றியின் பின்னணியில் வாகை மலரின் பயன்பாடு அருளைப் பெற்றுத் தரும் தெய்வத்தின் ஆசிர்வாதத்தை குறிக்கும் ஒரு விதமான பரிமாணத்தையும் கொண்டிருக்கலாம்.

ஆழமான தொடர்பு: இந்தப் பாரம்பரியம் பண்டைய தமிழ் சமூகத்தில் இயற்கைக்கும் கலாசார நடைமுறைகளுக்கும் இடையே உள்ள ஆழமான தொடர்பை பிரதிபலிக்கிறது. அங்கு இயற்கை உலகம் குறியீட்டு அர்த்தங்களால் நிறைந்திருந்தது. இது அன்றாட வாழ்க்கை மற்றும் போர் மற்றும் வெற்றி உட்பட எல்லாவிதமான நிகழ்வுகளிலும் ஊடுருவி இருந்தது என்பதைக் குறிக்கிறது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT