Romans in Gallic War 
கலை / கலாச்சாரம்

ஜூலியஸ் சீஸர் நடத்திய போரில் இறந்தவரின் மண்டை ஓடு… சுவாரசிய தகவல்!

பாரதி

52வது BC காலக்கட்டத்தில் போரில் இறந்த ரோமானிய வீரர் ஒருவரின் மண்டை ஓடு, ரோமானிய நாணயங்கள் மற்றும் ஆயுதங்களுடன் ஃப்ரான்ஸ் நாட்டில் கிடைத்துள்ளது. சரியாக 2020ம் ஆண்டு நடந்த ஆய்வில் கிடைத்த இவை, ஜூலியஸ் சீஸர் நடத்திய Gallic போரின் ஆதாரங்களாக விளங்குகின்றன.

உலகின் ஏராளமான விஷயங்கள் தினமும் கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவின் பழமை பற்றி படிப்பது ஒரு சுவாரசியம் என்றால், உலகின் பழமை பற்றி படிப்பது அதே அளவு சுவாரசியமானது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆட்சிப் புரிந்த பல்லவ வீரர்களின் எலும்புகள் கிடைத்தால், நாம் எவ்வளவு ஆச்சர்யப்படுவோம்?  

அதேபோல், மிக மிக பழமையான ரோமானியர்களின் ஆட்சி காலத்தின் ஆதாரம் ஒன்று கிடைப்பது எவ்வளவு சுவாரசியமான விஷயம். கிட்டத்தட்ட இந்தியாவை விக்ரமாதித்தன் ஆட்சிப் புரிந்த சமையத்தில், ரோமில் படைத் தளபதி ஜூலியஸ் சீஸர் வாழ்ந்திருப்பார். அவர் 58 மற்றும் 50 பிசிக்கு இடைப்பட்ட காலத்தில் கவுல் மக்களை எதிர்த்து Gallic War நடத்தினார். ரோமில் காலிக், ஜெர்மானியர்கள், பிரிட்டோனிக் ( பிரிட்டன் மொழி பேசுபவர்கள்) ஆகியோர் தங்கள் நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறி இந்தப் போர் நடத்தப்பட்டது.

அந்த காலிக் போரில் இறந்த ரோமானிய வீரர் ஒருவரின் மண்டை ஓடுதான் கடந்த 2020ம் ஆண்டு ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்திருக்கிறது. அதுவும் ஈட்டியோடு இருந்த மண்டை ஓடு. ஆம்! போரின்போது தலையில் ஈட்டியால் குத்தப்பட்டு இறந்த அவரின் மண்டை ஓடு இத்தனை காலங்களுக்கு பின்னர் கிடைத்தது ஆச்சர்யம்தானே?

Roman soldier Skull

இப்போது ஃபரான்ஸ், வட இத்தாலி, பெல்ஜியம், லக்ஸம்பர்க் மற்றும் ஸ்விட்ஸர்லாந்தின் பாதி பகுதியில்தான், அப்போது ரைன் ஆறு, தி ஆல்ப்ஸ், தி மெடிட்டெர்ரியன் சி, அட்லாண்டிக் கடல் ஆகியவை இருந்தன. காலிக் போரின் இறுதிநாட்களில்  இந்த இடங்களில்தான் போர் செய்ததாக ஜூலியஸ் சீசர் ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் போரில் மூன்று மில்லியன் காலிக் வீரர்களை எதிர்த்து வெறும் 1 லட்சத்து இருபதாயிரம் ரோமன் வீரர்கள் போர் செய்தனர். அந்த ஒரு லட்சம் பேரில் இறந்த வீரர்களில், அதுவும் ஈட்டியால் தாக்கப்பட்ட வீரர்களில் ஒருவரின் மண்டை ஓடுதான் கிடைத்துள்ளது. தற்போது இந்த மண்டை ஓடு அர்ஜென்டினாவில் உள்ள Rocsen அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT