Trans-siberian railway Tour https://en.wikipedia.org
கலை / கலாச்சாரம்

இரண்டு கண்டங்களை இணைக்கும் உலகின் மிக நீளமான ரயில் பயணம்!

ஆர்.ஜெயலட்சுமி

யில் பயணங்கள் எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. நாடு முழுக்க சுற்ற வேண்டும் என்றாலும் குறைந்த விலையில் அதை முடிக்க ஏற்றது ரயில் பயணங்கள்தான். சில ரயில்கள் நாட்டின் எல்லைகளைக் கடந்து மக்களை அழைத்துச் செல்லும். ஆனால், மூன்று நாடுகளில் ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து ஒரு ரயில் உங்களை அழைத்துச் செல்கிறது என்றால் அது சுவாரஸ்யமானதுதானே.

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் இருந்து கிழக்கில் இருக்கும் விளாடிவோஸ்டாக் நகரம் வரை செல்கிறது இந்த ரயில் பாதை. இதுவே உலகின் மிக நீளமான ரயில் பாதையாக அறியப்படுகிறது. இந்த டிரான்ஸ் - சைபீரியன் ரயில் பாதை  9289 கிலோ மீட்டர் தொலை தூரம் வரை நீண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரே பாதையில் அமைந்த இந்த ரயில் பாதை ஐரோப்பிய ஆசிய கண்டங்களை இணைப்பது விசேஷம்.

டிரான்ஸ் -சைபீரியன் ரயில் ரஷ்யாவின் மேற்கே தொடங்கி, சீனாவின் எல்லை மற்றும் ஜப்பானின் எல்லையை தொடுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்தால் உலக வரைபடத்தில் பாதியைக் கடக்கலாம். வருடம் முழுவதும் இந்த ரயில் செயல்படுகிறது. கோடை விடுமுறையில் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் பயணம் செய்ய இந்த ரயில் பாதை பிரபலமாக இருக்கிறது. உலகப் போக்குவரத்து வரலாற்றில் இந்த ரயிலின் பங்கு முக்கியமானது. இதனைக் கட்டும் பணி 1891ம் ஆண்டு தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து 1916ல் முடிவடைந்தது. மாஸ்கோவில் தொடங்கி, இந்த முழு பயணத்தை முடிக்க ஏழு நாட்கள் ஆகின்றது.

மாஸ்கோ விளாடிவோஸ்டாக், மாஸ்கோ - உலன்படோர், மாஸ்கோ - பெய்ஜிங் என்ற மூன்று பிரிவுகளை இணைக்கிறது. அதில் நீங்கள் எந்த வழியில் பயணம் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். பின்பு அதற்கான விசாவை பெற வேண்டும். இந்த ரயிலில் ரஷ்யாவில்  தொடங்கி சீனா செல்ல வேண்டும் என்றால் ரஷ்யா மற்றும் சீன நாட்டுக்கான விசாவை வாங்க வேண்டும். இதற்கான பயணச்சீட்டை மாஸ்கோவில் உள்ள ரயில் நிலையத்தில் எடுத்துக் கொள்ளலாம். மேலும், இணையம் வழியாகவும் பெற்றுக் கொள்ள முடியும். குறைந்த கட்டணத்தில் இந்தப் பயணத்தை மேற்கொள்ளலாம்.

மாஸ்கோவில் இருந்து விளாடிவோஸ்டாக் வரை செல்ல மூன்று வகுப்பு பயணச்சீட்டின் விலை 175 டாலர். அதாவது தற்போது இந்திய மதிப்பின்படி 13,982 ரூபாய். இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டின் விலை 213 டாலர். தற்போதைய இந்திய மதிப்பின்படி 17,018 ரூபாய் ஆகும். குளிரூட்டி வசதி, உணவகம், படுக்கை, மின்சாரம், பார், இருக்கையில் தனியாக ஒலி அமைப்பு போன்றவை உள்ளது. தனிப்பட்ட ஆடம்பர அறை போன்ற வசதியும் உள்ளது .

டிரான்ஸ் - சைபீரியன் ரயில் 18 நிலையங்களைக் கடந்து செல்கிறது. அதனால் பல்வேறு இயற்கை அழகை இந்தப் பயணத்தில் காண முடிகிறது. இப்பாதையில் செர்பியின் பகுதியில் உள்ள பைக்கால் ஏரி மற்றும் மிக உயரப் புள்ளியான 1070 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள யப்லோனோவி  பாஸ் போன்ற இடங்களைக் கடந்து செல்கிறது. குறைந்த விலையில் பெரிய பயணமாக உலகம் சுற்ற விரும்புவோருக்கு இந்தப் பயணம் வாழ்வில் செல்ல வேண்டிய கனவாகவே இருக்கிறது. பல முக்கிய இணைப்புடன் மூன்று நாட்களை இணைத்து பல கலாசாரத்தையும் உணவையும் மொழியையும் இயற்கை அழகையும் இந்தப் பயணம் இணைக்கிறது.

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

SCROLL FOR NEXT