உலகில் உள்ள பெரும்பாலான சமூகங்கள் இறந்தவரின் உடலை மண்ணில் புதைத்தோ அல்லது தகனம் செய்தோ இறுதிச்சடங்குகள் நடத்துகின்றன. உலகின் சில பகுதிகளில் இறுதிச்சடங்குகள் வித்தியாசனமான முறைகளிலும் நிகழ்த்தப்படுகின்றன. அவ்வாறு, வினோதமாக நடத்தப்படும் இறுதிச்சடங்குகள் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
பார்சி இனத்தவர்களால் இறந்தவர்களின் உடல்கள் அசுத்தமானதாவையாகக் கருதப்படுகின்றன. இறந்த உடலை மண்ணில் புதைப்பது மற்றும் நெருப்பில் இருப்பதனால் மண்ணும் நெருப்பும் அசுத்தமடையும் என அவர்கள் நம்புகிறார்கள். எனவே, இறந்தவர்களின் இறுதிச்சடங்கை செய்வதற்கு அமைதி கோபுரம் எனும் இடத்தைப் பயன்படுத்துகிறார்கள். இங்கு இறந்தவர்களின் உடலானது பறவைகள் உண்பதற்காக வைக்கப்படுகிறது. பின்பு, மீதமுள்ள எலும்புகள் சேகரிக்கப்பட்டு, அந்தக் கோபுரத்தில் உள்ள குழியில் தள்ளப்படுகின்றன.
இந்த நடைமுறையானது, திபெத் மற்றும் சீனர்களால் கடைபிடிக்கப்படுகிறது. ஸ்கை பரியல் என்பதற்கு ‘ஆகாய புதைப்பு’ என்று பொருள். இந்த முறையில், துணியால் முழுவதும் மறைக்கப்பட்ட இறந்தவரின் உடலை துண்டு துண்டாக கூறு போட்டு கழுகுகளுக்கு உணவாக படைக்கப்படுகிறது. பின், மீதான எலும்புகளை அரைத்து காகங்களுக்கு உணவளிக்கின்றர். உடலை எரிக்க மரங்கள் கிடைக்காததாலும், அங்குள்ள மலைப்பாங்கான பகுதிகளில் புதைப்பதற்காக நிலத்தை தோண்டுவது கடினம் என்பதாலும் ‘ஆகாய புதைப்பு’ முறையை பல ஆண்டுகளாக பின்பற்றி வருகின்றனர்.
எகிப்தியர்களின் பிரபலமான இறுதிச்சடங்கு முறையாக ‘உடல் பதப்படுத்துதல்’ முறை உள்ளது. இந்த முறை, சுமார் 9,400 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த உடல் பதப்படுத்துதல் முறை ‘மம்மிஃபிகேஷன்’ என்றும் அழைக்கப்படுகிறது. இதில், இறந்தவரின் உடல் கெட்டுப்போகாமல் இருக்கவும், உடலில் இருந்து துர்நாற்றம் வராமல் இருக்கும் வகையிலும் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
அமேசான் மலைக்காடுகளில் வசிக்கும் ‘யானோமாமி’ பழங்குடியினர்கள் பின்பற்றும் இறுதிச்சடங்கு முறையாகும். இந்த நடைமுறையில், இறந்தவரின் உடல் துக்கப்படுபவர்களால் உண்ணப்படுகிறது. இதை, இரக்கத்தின் செயலாக அவர்கள் கருதுகின்றனர். இறந்தவர்களை தகனம் செய்து அதன் சாம்பலை வாழைப்பழத்தில் கலந்து விடுவார்களாம்.
இந்த நடைமுறையில், ஒரு சவப்பெட்டியில் இறந்தவரின் உடலை வைத்து அதனை யாரும் அடைய முடியாத மலையோரங்களில் மறைந்திருக்கும் உயரமான இடங்களில் தொங்கவிடுவார்கள். பிலிப்பைன்ஸில் உள்ள ‘சகடா' மக்கள் இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம், இறந்தவர்களின் உடல் வானத்திற்கு நெருக்கமாக இருக்கும் என்று அவர்களால் நம்பப்படுகிறது.
மங்கோலியர்களால் இம்மாதிரியான இறுதிச்சடங்கு கடைபிடிக்கப்படுகிறது. ஏர் சேக்ரிபைஸில் ஸ்கை பரியல் இறுதிச்சடங்கில் செய்வது போலவே, பசியுள்ள நாய்கள் மற்றும் பறவைகளால் இறந்தவரின் உடலை உண்ண வைத்து இறுதிச்சடங்கு நிகழ்த்தப்படுகிறது.
இந்த முறையில் அடக்கம் செய்யப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, இறந்தவரின் உடலை தோண்டி மண்டை ஓடு எடுக்கப்படுகிறது. இந்த மண்டை ஓடு எண்ணெய் வைத்து பாலிஷ் செய்து இறந்தவரின் குடும்பத்தினரால் பாதுகாக்கப்படுகிறது.
இந்த நடைமுறையில், இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்து, அவற்றின் சாம்பலை மணிகளாக மாற்றி பின்னர் நகைகள் போன்று உருவாக்கப்படுகின்றன. தென்கொரியாவில் அடக்கம் செய்வதற்கு போதிய அளவு இடம் இல்லாததால் இந்த நடைமுறையை அவர்கள் பின்பற்றுகிறார்களாம். இவ்வாறு உருவாக்கப்படும் நகைகள் வண்ணமயமான கலசம் அல்லது பாட்டில்களில் வைக்கப்படுகின்றன.
இந்த வகையான இறுதிச்சடங்கில் இறந்தவரின் வாள்கள், கவசம், நகைகள் மற்றும் விலைமதிப்பற்ற உடைமைகள் போன்றவைகளுடன் இறந்த உடலை படகில் வைத்து கடலுக்குள் செலுத்தப்படுகின்றன. படக்கானது எரித்தும் அல்லது எரிக்காமலும் கடலுக்குள் செலுத்தப்படுமாம்.