ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மோசமான உணவு முறை இவற்றின் காரணமாக முடி பிரச்னை அதிகமாக காணப்படுகிறது. போதிய ஊட்டச்சத்து இல்லாத காரணத்தினால் முடி உதிர்தல், முடி பிளவு ஆகியவை முதன்மையாக உள்ளன. முடி ஆரோக்கியத்திற்கு உதவும் தாவரங்கள் குறித்து காண்போம்.
1.ரோஸ்மேரி
ரோஸ்மேரி தாவரமானது ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் வைட்டமின்களைக் கொண்டுள்ளதால், முடி வளர்ச்சிக்கான மூலிகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ரோஸ்மேரி இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் இது உச்சந்தலையை ஈரப்பதமாக வைக்கவும், முன் கூட்டிய முடி உதிர்வைக் குறைக்கவும் உதவுகிறது.
ரோஸ்மேரி எண்ணெயை நேரடியாகவோ அல்லது பாதாம், தேங்காய் எண்ணெயுடன் கலந்து உச்சந்தலையில் மசாஜ் செய்து ஒரு மணி நேரம் அல்லது இரவில் தடவி நல்ல ஷாம்பு மற்றும் கண்டிஷனரின் உதவியுடன் கழுவ முடி வளர்ச்சி அடையும்.
2.கற்றாழை
கற்றாழையை நேரடியாக பிரித்தெடுத்த புதிய ஜெல்லை வேறு சில இயற்கை பொருள்களுடன் கலந்து பயன்படுத்தலாம். இதில் pH அளவு மிகக் குறைவாக இருப்பதால், இது உச்சந்தலைக்கு சிறந்ததாகும். கற்றாழை ஜெல்லில் தாதுக்கள், தாமிரம் மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளதால் பொடுகைக் குறைக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
இயற்கை கற்றாழை ஜெல்லை, இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து தலையில் தடவி, அரைமணி நேரம் நன்கு மசாஜ் செய்து கற்றாழை கலந்த ஷாம்பு கொண்டு கழுவவேண்டும். பிறகு ஒரு நல்ல கண்டிஷனரின் உதவியுடன் முடியைக் கழுவுவதன் மூலம் முடி வளர்ச்சியை கண்கூடாக பார்க்கலாம்.
3.நெல்லிக்காய்
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் புரதத்தை ஊக்குவித்து முடியின் வளர்ச்சியின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. தலைமுடிக்கு நெல்லிக்காயை எண்ணெய், ஷாம்பு அல்லது பச்சையாகப் பயன்படுத்தப்படலாம். இது இயற்கையான கண்டிஷனராக செயல்பட்டு, இறந்த செல்களை வெளியேற்றி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
நெல்லிக்காய் சாற்றை உச்சந்தலையில் நேரடியாக பிழிந்து 5 நிமிடங்கள் மசாஜ் செய்து 10 நிமிடங்கள் வைத்து, பிறகு வெதுவெதுப்பான நீர் மற்றும் ஒரு நல்ல ஆம்லா ஷாம்பு கொண்டு கழுவ முடி கட்டுக்கடங்காமல் வளர ஆரம்பிக்கும்.
4.செம்பருத்தி
செம்பருத்தியில் அமினோ அமிலங்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ள, இதன் பூக்கள், இலைகள் என அனைத்தும் முடியின் மயிர்க்கால்களுக்கு இரத்த ஓட்டத்தைத் தூண்டவும், புதிய முடி உருவாவதை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இது தவிர, பொடுகு, பிளவு முனை பிரச்னைக்கும், உச்சந்தலையில் உள்ள எண்ணெய்த் தன்மையை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
முதலில் மூன்று முதல் நான்கு செம்பருத்தி பூக்களைத் தண்ணீரில் கொதிக்க வைத்து, பிறகு தண்ணீரை வடிகட்டி தினமும் உச்சந்தலையைச் சுற்றி ஒரு மூடுபனியாகப் பயன்படுத்தவேண்டும். இந்த மூடுபனியை எண்ணெயில் சேர்த்து வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.
மேற்கூறிய நான்கு தாவரங்களுமே முடி வளர்ச்சியைத் தூண்டவும், முடி ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது.