Alia bhatt beauty tips 
அழகு / ஃபேஷன்

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

பாரதி

பாலிவுட் நடிகை ஆலியா பட் தனது  அழகின் ரகசியம் குறித்த தகவலை ஒருமுறை பகிர்ந்திருந்தார். அதுகுறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

பொதுவாக நாம் நடிகைகளின் அழகின் ரகசியம் குறித்து தெரிந்துக்கொள்ள மிகவும் ஆசைப்படுவோம். அந்தவகையில் பாலிவுட் நடிகை ஆலியாபட் தனது அழகை எப்படி பராமரிக்கிறார் என்பது குறித்துப் பார்ப்போம்.

ஆலியாபட் 2012ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானார். இவர் தனது திறமையின்மூலம் வேகமாக சினிமாத்துறையில் வளர்ந்து தவிர்க்க முடியாத ஒரு ஹீரோயினாக மாறினார். பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை பெரும் அளவில் ஈர்த்தார். பின் ரன்பீர் கபூரை திருமணம் செய்துக்கொண்டு ஒரு பெண் குழந்தைக்கும் தாயானார். ஆனாலும், அவரின் அழகு இன்றும் மக்களை ஆச்சர்யப்படுத்துகிறது.

ஆலியாபட் தன்னுடைய திருமண நேரத்தில் தனது அழகிற்கு என்ன ரகசியம் என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

அதில் தனது முகம் எப்போதும் புத்துண்ரச்சியாகவும் பொலிவாகவும் இருப்பதற்கு முல்தானி மிட்டிதான் காரணம் என்று கூறியிருக்கிறார்.

பலரும் வீட்டில் முகத்திற்கு பயன்படுத்தும் ஒன்றுதான் முல்தானி மிட்டி. ஆனால், அதை நாம் பயன்படுத்தும் முறை ஒன்று இருக்கிறது.

முல்தானி மிட்டியுடன் ரோஸ் வாட்டர், தேன், மஞ்சள், தயிர், சந்தன பவுடர் ஆகியவற்றை ஒன்று சேர்த்து கலக்கி முகத்தில் பயன்படுத்த வேண்டும். இந்த ஃபேஸ் மாஸ்க்கை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து சுத்தம் செய்தால், முகம் பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த மாஸ்க்கைதான் ஆலியா பட் வீட்டில் போடுவாராம்.

முல்தானி மிட்டி சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கும். மேலும் இது முகப்பரு போன்ற பிரச்சனைகளையும் நீக்கும். ஆனால் வறண்ட சருமம் உடையவர்கள் அடிக்கடி முல்தானி மிட்டியை சருமத்துக்குப் பயன்படுத்தக் கூடாது. வாரத்தில் ஒரு நாள் மட்டும் தேன் கலந்து பயன்படுத்தலாம்.

அதேபோல் ஆலியா பட் தனது ஸ்கின் மிகவும் வறண்டுப் போய்விடும் என்பதால், முகச்சருமத்தை நீரேற்றமாக வைத்துக்கொள்ள பலவகை க்ரீம்களையும் பயன்படுத்துவாராம்.

எதிரியிடம் மகிழ்ச்சியை காட்டுங்கள்!

சிறகடித்து பறக்கும் பறவையாய் சின்னச் சின்ன சந்தோஷங்கள்..!

வீட்டில் எதிர்பாராத விருந்தினரா? 'லவுக்கி காய் கோஃப்தா' செய்யலாமே!!

மனநிலையை மாற்றி வாழ்க்கையை வசந்தமாக்கிக் கொள்ளுங்கள்!

ஈரான் நாட்டுக்கதை - நெசவாளியின் மதிநுட்பம்!

SCROLL FOR NEXT