Face care tips 
அழகு / ஃபேஷன்

கற்றாழை ஜெல் முகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள்!

ம.வசந்தி

ஆண் பெண் அனைவருக்கும் முகப்பரு பெரிய பிரச்னையாக இருக்கிறது. அதனால் ஏற்படும் வடுக்களையும் தழும்புகளையும் போக்கும் ஃபேஸ் பேக்குகள் குறித்துதான் இப்பதிவில் காணப் போகிறோம்.

கற்றாழை மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்

முகப்பரு புள்ளிகளை நீக்க,  2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன்  ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்த  பேஸ்ட்டை  முகத்தில் நன்றாக தடவி ,20-25 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும் இரவில் தூங்கும் முன் இந்த ஃபேஸ் பேக்கை தடவ முகப்பருக்கள் எளிதில் மறையும்.

கற்றாழை மற்றும் அரிசி தண்ணீர் ஃபேஸ் பேக்

 2-3 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் அரிசி நீருடன்  தினமும் ஒரு தடவை பேஸ் பேக்காக போட   முகப்பரு அடையாளங்கள் அல்லது தழும்புகள் இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் . 

கற்றாழை மற்றும் தக்காளி சாறுஃபேஸ் பேக்

தக்காளி சாற்றில் 2-3 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை கலக்கி இந்த ஃபேஸ் பேக்கை முகப்பருக்கள் உள்ள இடங்களில் தடவி. அரை மணி நேரம் கழித்து கழுவ நல்ல மாற்றம் தென்படும். உணர் திறன் சருமம் வாய்ந்தவர்கள் இதை தவிர்க்கவும்.

கற்றாழை ஜெல் மற்றும் டீ ட்ரீ ஆயில்

கற்றாழை ஜெல்லை இரண்டு சொட்டு டீ ட்ரீ ஆயிலுடன் கலந்து நேரடியாக சருமத்தில் தடவ தழும்புகள் தானாக காணாமல் போகும்.

அலோ வேரா ஜெல் மற்றும் எலுமிச்சை சாறு

கற்றாழையை சில துளிகள் எலுமிச்சை சாறுடன் கலந்து ஒரே இரவில் முகமூடியாக பயன்படுத்த  சருமம் ஒளிர ஆரம்பிக்கும்.

கற்றாழை ஜெல் மற்றும் தேன்

ஒரு தேக்கரண்டி சுத்தமான கற்றாழையுடன் இரண்டு தேக்கரண்டி சுத்தமான தேனை கலக்கி அரை தேக்கரண்டி இலவங்கப்பட்டை சேர்த்து, முகத்தில் 5-10 நிமிடங்கள் தடவ முகப்பரு வடுக்களும் தழும்புகளும் நாளடைவில் மறைந்துவிடும்.

கற்றாழை ஜெல்லை மேற்கண்ட பொருட்கள் உடன் கலந்து பயன்படுத்த நல்ல மாறுதல் கிடைத்து முகம் பளபளப்பாக மாறும்.

நமக்கான வாய்ப்பை எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் தெரியுமா?

Bloody Beggar ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

15 வருட காதலரை கரம் பிடிக்கும் கீர்த்தி சுரேஷ்… விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நாம் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. ஏன் தெரியுமா?

இந்தியாவை எங்களிடம் வந்து பேச சொல்லுங்கள் – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

SCROLL FOR NEXT