கருப்பாக இருக்கும் அனைவருக்குமே வெள்ளையாக மாற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஏனெனில் வெள்ளையாக இருப்பதுதான் உண்மையான அழகு என்ற மனப்பான்மை பலருக்கு உள்ளது. இதற்காக பல ரசாயன க்ரீம்களை முகத்தில் பூசி வெள்ளையாக மாற முயற்சிப்பார்கள். அது தற்காலிகமான ரிசல்ட்டை மட்டுமே கொடுப்பதால், அவ்வப்போது அந்த க்ரீம் வாங்குவதற்காக பணத்தை அதிகமாக செலவு செய்கின்றனர்.
ஆனால் முற்றிலும் இயற்கையான முறையில், கருப்பான முகத்தை வெண்மையாக்குவதற்கான க்ரீமை, நாமே தயாரிக்க முடியும். இந்தப் பதிவில் அது எப்படி எனப் பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய் - 5 ஸ்பூன்
கற்றாழை ஜெல் - ½ கப்
அரிசி மாவு - ¼ கப்
பீட்ரூட் - 1 கப்
செய்முறை: முதலில் பீட்ரூட்டை நன்கு கழுவி அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். பின்னர் அதை ஒரு மிக்ஸியில் சேர்த்து மைய அரைத்து, பீட்ரூட் சாறு மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அந்த சாரில் அரிசி மாவு, தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு, அதில் கற்றாழை ஜெல்லையும் சேர்த்து, நன்றாக பேஸ்ட் போல அரைக்கவும். நன்கு கிரீம் பழத்திற்கு வரும் வரை அரைத்துக் கொண்டே இருங்கள்.
இறுதியில் இந்த க்ரீமை காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்து, தொடர்ச்சியாக முகத்திற்கு பயன்படுத்தி வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி இயற்கையான சிவப்பழகைப் பெறலாம்.
இது செய்வது முற்றிலும் எளிது. இதில் பயன்படுத்தும் பொருட்களும் நமது வீட்டிலேயே கிடைக்கும் என்பதால், அதிக பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதிகமாக ஒரே சமயத்தில் செய்து சேமித்து வைக்காமல், வாரம் ஒரு முறை பயன்படுத்தும் படி கொஞ்சமாக க்ரீம் தயாரித்து பயன்படுத்தினால், ஆரோக்கியமாக இருக்கும். இதை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.