Bananas are enough to cure dry hair. 
அழகு / ஃபேஷன்

வாழைப்பழம் இருந்தால் போதும் தலைமுடியின் வறட்சியை சரி செய்யலாம்!

கிரி கணபதி

தலைமுடி வறட்சி என்பது பெரும்பாலான நபர்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இது சூடான நீரில் குளித்தல், அடிக்கடி ஹேர் ஸ்டைலிங் செய்வது மற்றும் கடுமையான ஷாம்புக்களை பயன்படுத்துவது போன்ற பல காரணங்களால் ஏற்படலாம். ஆனால் இந்தப் பிரச்சனையை வாழைப்பழத்தை வைத்து நீங்கள் சரி செய்ய முடியும். இந்தப் பதிவில் வாழைப்பழத்தைப் பயன்படுத்தி தலைமுடியின் வறட்சியை எவ்வாறு சரி செய்வது என்பதைப் பற்றி பார்க்கலாம். 

வாழைப்பழத்தைப் பயன்படுத்தி தலைமுடியின் வறச்சியை சரி செய்ய சில எளிய வழிமுறைகள்: 

பொதுவாகவே வாழைப்பழத்தில் பல முக்கியமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை தலைமுடியை ஈரப்பதமாக்கி ஊட்டத்துடன் வைத்திருக்க உதவும்.

வாழைப்பழம் ஹேர் மாஸ்க்: ஒரு வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் இரண்டு தேக்கரண்டி தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த கலவையை உங்கள் தலைமுடி மற்றும் தலைமுடியின் வேர்களில் தடவி, 30 நிமிடங்கள் அப்படியே ஊற வைக்கவும். பின்னர் அதிக ரசாயனங்கள் இல்லாத மிதமான ஷாம்பு பயன்படுத்தி குளிர்ந்த நீரில் கழுவினால், தலைமுடியின் வறட்சி நீங்கி பளபளப்பாக மாறிவிடும். 

வாழைப்பழம் ஹேர் ரிஞ்ச்: ஒரு வாழைப்பழத்தை நன்றாக மசித்து ஒரு கப் தண்ணீரில் அதை சேர்த்து கலக்கவும். பின்னர் அந்த கலவையை வடிகட்டி உங்கள் தலைமுடியை நன்கு கழுவி அப்படியே காய விடுங்கள். இது உங்கள் தலைமுடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவும். 

வாழைப்பழம் ஹேர் ஸ்ப்ரே: இதை செய்வதற்கு ஒரு வாழைப்பழத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து அதில் ஒரு கப் தண்ணீர் மற்றும் ஒரு ஸ்பூன் வினிகர் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் இந்த கலவையை வடிகட்டி ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி, உங்கள் தலைமுடியில் அவ்வப்போது ஸ்ப்ரே செய்து வந்தால், தலைமுடியின் வறண்ட தோற்றம் மாறி எப்போதும் இயற்கையான ஈரப்பதத்துடன் இருக்க உதவும். 

உங்களுக்கு சிறந்த முடிவுகள் கிடைக்க வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேலே குறிப்பிட்ட சிகிச்சைகளை செய்யுங்கள். ஒருவேளை, உங்கள் தலையில் ஒவ்வாமை பாதிப்பு இருந்தால் இவற்றை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும். அல்லது பயன்படுத்துவதற்கு முன்பு சிறிய இடத்தில் சோதித்துப் பார்த்து பயன்படுத்தவும். வாழைப்பழத்தை தவிர, தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில் மற்றும் தேன் போன்ற பிற இயற்கை பொருட்களையும் உங்கள் தலைமுடியின் வறட்சியை சரி செய்ய பயன்படுத்தலாம். 

தலைமுடி வறச்சி என்பது அனைவருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனையாகும் ஆனால், சரியான சிகிச்சை மற்றும் பராமரிப்பு முறைகளைப் பின்பற்றுவதால் அதை எளிதாக சரி செய்ய முடியும். எனவே உங்கள் வீட்டில் வாழைப்பழங்கள் அதிகமாக இருந்தால், அவற்றை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மட்டுமின்றி, தலையில் பயன்படுத்தி தலைமுடியையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். 

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT