Beard Growth Tips 
அழகு / ஃபேஷன்

Beard Growth Tips: இது தெரிஞ்சா தாடி வளர்ப்பது ரொம்ப ஈசி! 

கிரி கணபதி

கடந்த காலங்களில் மொழு மொழுவென சவரம் செய்த முகம்தான் அழகு என்று நிலை இப்போது மாறி, இளைஞர்கள் மத்தியில் தாடி வளர்ப்பது பேஷனாக மாறிவிட்டது. நீங்கள் நினைப்பது போல தாடி வளர்ப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான விஷயமல்ல, அதற்கு பொறுமை, கவனிப்பு மற்றும் சில அத்தியாவசிய பராமரிப்புகள் தேவை. நீங்கள் இப்போதுதான் புதிதாக தாடி வளர்க்க ஆசைப்பட்டாலும் சரி, அல்லது ஏற்கனவே இருக்கும் தாடியை முறையாக வளர்க்க முயற்சித்தாலும் சரி, இந்தக் கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்பதிவில் முறையாக தாடி வளர்ப்பதற்கான குறிப்புகள் பற்றி பார்க்கலாம். 

பொறுமையாக இருங்கள்: தாடியை வளர்ப்பதற்கு நிச்சயம் நேரம் எடுக்கும், எனவே பொறுமையாக இருங்கள். ஆரம்பகட்டத்தில் குறைந்தது ஆறு மாதத்திற்காவது, தாடியை அப்படியே வளர விடுங்கள். இந்த நிலையில் உங்கள் தாடி சீராக இல்லை என்றாலும், தொடக்கத்தில் வளர விட வேண்டியது அவசியம். 

ஆரோக்கியமான வாழ்க்கை முறை: தாடியை நல்ல முறையில் வளர்க்க ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தினசரி உடற்பயிற்சி செய்து உடலுக்குத் தேவையான விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சீரான உணவுகளை எடுத்துக் கொள்ளவும். தினசரி போதுமான அளவு தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

சருமத்தை கவனிக்கவும்: ஆரோக்கியமான தாடி வளர்ச்சிக்கு சருமப் பராமரிப்பு மிகவும் முக்கியம். உங்கள் சருமத்தை எப்போதும் சுத்தமாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருங்கள். இது சருமத்தில் தேவையில்லாத வறட்சி மற்றும் தோல் உரிதலைத் தடுக்கிறது. மயிர்க்கால்கள் தடையின்றி வளர அனுமதித்து தாடியை சீராக வளரச் செய்கிறது.  

சீக்கிரம் தாடியை ஒதுக்க வேண்டும் என்ற ஆசையை கைவிடவும்: ஆரம்பத்தில் தாடியை வளர்க்கும்போது உங்கள் தாடியை வெட்டுவதையோ அல்லது டிரிம் செய்வதையோ தவிர்க்கவும். அவசரப்பட்டு ட்ரிம் செய்துவிட்டால், உங்களது தாடி வளர்க்கும் ஆசை பாதியிலேயே போய்விடும். எனவே தாடி குறிப்பிட்ட அளவு வளர அனுமதிக்கவும். 

அடிக்கடி தாடியை பராமரிக்கவும்: தாடியில் அழுக்கு சேராமல் அவ்வப்போது கழுவி, சீப்பு வைத்து வாரி விடுங்கள். இது உங்களது மயிர் கால்களின் ரத்த ஓட்டத்தைத் தூண்டி, தாடி இன்னும் வேகமாக வளர உதவும். தாடிக்கு, மிக நெருக்கமான பற்கள் கொண்ட சீப்பு பயன்படுத்தாமல், அகலமான பற்கள் இருக்கும் சீப்புகளை பயன்படுத்தவும். உங்கள் தலைமுடியை பராமரிப்பது போலவே, தாடியையும் நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும். 

ஈரப்பதத்துடன் வைத்திருங்கள்: தாடியில் உள்ளே வரட்சி, அரிப்பு போன்றவற்றைத் தடுக்க, உங்கள் தாடியை ஈரப்பதமாக வைத்திருப்பது அவசியம். பியர்டு ஆயில் அல்லது தாடி தைலத்தைப் பயன்படுத்தி, தாடியின் முடி மற்றும் சருமத்தை ஹைட்ரெட் செய்யவும்.  

வடிவமைக்கவும்: ஆறு மாதம் கழித்து தாடி போதிய நீளத்திற்கு வந்தவுடன், உங்களது விருப்பத்திற்கு ஏற்ப அதை டிரிம் செய்து வடிவமைக்கவும். இதற்கு ஒரு தரமான ட்ரிம்மர் அல்லது கத்திரிக்கோல் பயன்படுத்துவது நல்லது. அல்லது கைதேர்ந்த முடி திருத்தும் நிபுணரிடம் சென்று, உங்களது விருப்பம் போல தாடியை ஒதுக்கிக் கொள்ளலாம். 

இறுதியாக, தாடியை ஒதுக்கியதும் அதை அப்படியே விட்டுவிடாமல், தொடர்ச்சியாக பராமரிக்க வேண்டியது முக்கியமானது. அவ்வப்போது கழுவுதல், ஈரப்பதம் ஆக்குதல் மற்றும் ட்ரிம்மிங் போன்றவற்றை வழக்கமாக கடைபிடிக்க வேண்டும். இதன் மூலமாக அழகான, ஆரோக்கியமான தாடியை உங்கள் விருப்பம் போல நீங்கள் பராமரிக்கலாம். இது உங்களது லுக்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். 

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

SCROLL FOR NEXT