நம்முடைய அழகைக் கூட்டிக் காண்பிக்க, நாம் தினமும் பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்களெல்லாம் எப்படி தயாரிக்கப்பட்டிருக்கும் என்பதை எண்ணி பார்த்திருக்கிறீர்களா? தினமும் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் மட்டுமல்ல எப்போதாவது நாம் பயன்படுத்தும் பொருட்களுமே சில விலங்குகளை வைத்துதான் தயாரிக்கிறார்கள்.
உதாரணத்திற்கு எப்படி பட்டுப்புழுக்களிலிருந்து புடவை தயாரிக்கப்படுகிறதோ? அதேபோல்தான் இந்த அழகு சாதனப் பொருட்களும். இந்த முறைகள் முந்தைய காலத்திலிருந்து இப்போது வரை உள்ளது என்றாலும், இது வளர்ச்சியடைந்துவிட்டது என்றே கூற வேண்டும். அதாவது, அப்போது உடை சாயத்திற்காக விலங்கள், பூச்சிகளைப் பயன்படுத்தினார்கள். இப்போது கெரட்டின், கிளிசரின் போன்றவற்றை உற்பத்தி செய்யப் பயன்படுத்துகிறார்கள்.
அந்தவகையில் என்னென்ன அழகு சாதனப் பொருட்கள் விலங்குகள் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
Squalene:
நமது சருமம் ஈரப்பதமாகவும் சுருக்கங்கள் இல்லாமல் இருக்கவும் உதவும் அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தும் ஒன்றுதான் Squalene. இது Squalidae குடும்பத்தைச் சேர்ந்த சுறாவின் கல்லீரலிலிருந்து எடுக்கப்படும் ஒன்று. இதனை லிப் பாம், மாய்ஸ்ட்ரைஸர், க்ரீம்கள் ஆகியவற்றில் பயன்படுத்துவார்கள்.
Carmine:
கொச்சினல் பூச்சிகள் மூலம் கிடைக்கும் சிவப்பு சாயத்தை கண்ணங்களில் பயன்படுத்தும் ப்ளஷிலும், லிப்ஸ்டிக்கிலும் கலப்பார்கள். இதன் இயற்கையான சிவப்பு நிறமி, சில சமயங்களில் துணிகளில் நிறமேற்றவும் பயன்படுத்தப்படுகிறது.
தேன்:
தேனீக்களின் தேனைப் பயன்படுத்திதான் பாடி லோஷன், ஸ்க்ரப்ஸ், பாடி பாம்ஸ், க்ரீம்ஸ் ஆகியவை செய்யப்படுகிறது.
Lanolin:
செம்மறி ஆட்டின் கம்பளிலிருந்து தயாரிக்கப்படும் லனோலின் லிப் பாம்களிலும், கூந்தல் பராமரிப்பு சாதனங்களிலும் கலக்கப்படுகிறது. உதாரணத்திற்கு இது, Softening & Smoothening பொருட்கள், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், Body Creams ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.
Glycerine:
மாய்ஸ்ட்ரைஸர் மற்றும் சோப்களில் அதிகமாகப் பயன்படுத்தும் இந்த கிளிசரின், தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அதேபோல், விலங்குகளின் கொழுப்புகளைப் பயன்படுத்தியும் செய்யப்படுகிறது.
Collagen:
முகச்சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள உதவும் இந்த கொலாஜன் விலங்குகளின் திசுக்கள் மற்றும் எலும்புகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அதிகப்படியான கொலாஜன், மாடு மற்றும் மீன்களிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது.
Keratin:
கூந்தலை மென்மையாகவும் வலிமையாகவும் மாற்றுவதற்கு உதவும் இது, விலங்குகளின் கொம்புகள், இறகுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி செய்வதாகும்.
இந்த 7 பொருட்களைத் தவிர இன்னும் எத்தனையோ அழகு சாதனப் பொருட்கள் விலங்குகள் மூலம் செய்யப்படுகிறது. அதேபோல் இன்னும் கண்டுப்பிடிக்கப்பட்டுதான் வருகிறது.