Hair care... Image credit - pixabay.com
அழகு / ஃபேஷன்

அழகான கூந்தலை இயற்கையான முறையில் வளர்க்க சிறந்த அழகு குறிப்புகள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

மென்மையான வலுவான நீண்ட கூந்தலைத்தான் அனைவரும் விரும்புவோம். ஆரோக்கியமான கூந்தலின் ரகசியம் நம் உச்சந்தலையில்தான் உள்ளது. ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதுடன் உச்சந்தலையில் தினமும் உடல் சூடு ஏறாமல் இருக்க தேங்காய் எண்ணெய் சிறிது வைத்து நன்கு மசாஜ் செய்வது சிறந்தது. 

ஸ்கல்ப் எனப்படும் மண்டை பகுதி காய்ந்து விடாமல் சிறிது எண்ணெய் பசையுடன் இருப்பது பொடுகு தொல்லையை தூர நிறுத்தும். வாரம் இரு முறை தலைக்கு சிறிது நல்லெண்ணெய் வைத்து தரமான ஷாம்பு அல்லது சீயக்காய் வைத்து அலச முடி நன்கு வளரும்.

தலையை முடிந்த அளவு ரசாயன கலப்பு இல்லாத இயற்கையான பொருட்களான வெந்தயம், தயிர், செம்பருத்தி இலை, செம்பருத்திப் பூ போன்றவற்றை கொண்டு முடியை அலச ஆரோக்கியமாக வளரும்.

நல்லெண்ணையை இளம் சூடாக்கி உச்சந்தலையில் வைத்து மசாஜ் செய்ய ரத்த ஓட்டத்தை தூண்டி முடி உதிர்வதை தடுத்து செழித்து வளர உதவும்.

முடி உடைவதையும், நுனியில் பிளவு படுவதையும் தடுக்க மென்மையான அதிக ரசாயன கலவை இல்லாத ஷாம்புகளை உபயோகிப்பதும், கூந்தல் ஈரமாக இருக்கும் போது சீப்பு கொண்டு வாருவதை தவிர்ப்பதும் நல்லது.

அடிக்கடி முடிக்கு டை போடுவதும், இறுக்கமான கிளிப்புகளை பயன்படுத்துவதும் முடியின் வேர்கள் வலுவிழந்து முடி உடைவதற்கும் உதிர்வதற்கும் வழிவகுக்கும்.

தலைக்கு குளிக்கும் பொழுது சூடான வெந்நீரை உபயோகிப்பதை விட வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது.

ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங், கலரிங், அயர்னிங் போன்ற வற்றை செய்வதை தவிர்ப்பது நல்லது. இவை முடி உதிர்வதற்கு வழிவகைக்கும்.

முடி ஆரோக்கியத்திற்கு தேவையான புரதங்கள், விட்டமின்கள் நிறைந்த முட்டையுடன் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து தலையில் தடவி 20 நிமிடங்கள் கழித்து மென்மையான ஷாம்பூ கொண்டு குளிர்ந்த நீரில் அலசவும்.

கிரீன் டீ முடி வளர்ச்சி அதிகரிக்க உதவும். ஒரு கப் சூடான நீரில் இரண்டு கிரீன் டீ பைகளை போட்டு 5 நிமிடங்கள் நன்கு கொதிக்க விட்டு குளிர்விக்கவும். கிரீன் டீயை கற்றாழை ஜெல்லுடன் கலந்து முடியில் தடவி மசாஜ் செய்து விடவும். 15 நிமிடங்கள் கழித்து நன்கு அலச முடி உதிர்வது நிற்பதுடன் முடி வளர்ச்சியும் அதிகரிக்கும்.

ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு கரண்டி தயிர் விட்டு இரவே ஊற வைத்து விடவும். மறுநாள் காலையில் அதனை முழுதாக அரைத்து கால் கப் தயிருடன் கலந்து தலையில் தடவி 20 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு குளிர்ந்த நீரில் அலச கூந்தலுக்கு ஊட்டமளிப்பதுடன் பொடுகை போக்கவும் சிறந்த ஹேர் மாஸ்க் இது.

கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றுடன் சிறிது தயிர் கலந்து ஹேர் மாஸ்க் செய்யபட்டு போன்ற கூந்தல் செழித்து வளரும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT