Hair Lose Image
Hair Lose Image 
அழகு / ஃபேஷன்

முடி வேர் வேரா கொட்டுதா? இந்த 5 உணவு பொருட்களை தினமும் சாப்பிடுங்க போதும்!

விஜி

ன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய தலையாய பிரச்னை முடி கொட்டுவதுதான். பல மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தால் முடி கொட்டும் பிரச்னை தற்போது அதிகரித்துவிட்டது. இந்தப் பதிவில் முடி கொட்டாமல் இருக்க நாம் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய உலர் பழவகைகள் பற்றிப் பார்க்கலாம்.

முடி உதிர்வைத் தடுப்பதற்கு நாமும் பல வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்து எதுவும் பலனளிக்காமல் சோர்ந்திருப்போம். ஆனால், முடி உதிர்வைத் தடுப்பதற்கு நாம் மேற்கொள்ளும் வைத்தியங்கள் அனைத்துமே முடியின் மேற்புறத்தில் செயல்படுபவையாகவே இருக்கின்றன.

ஆனால் முடிக்கு, உடலின் உள்ளிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்து என்பதுதான் முடிக்கு மிகவும் அவசியமாகும். முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க சில உணவுகளை நாம் சாப்பிட வேண்டும். அதேபோல் உணவுகளை தினசரி நாம் எடுத்துக்கொள்ள மறக்கக் கூடாது.

அப்படி நமக்கு இருக்கும் ஒரு பெஸ்ட் மருந்து தான் உலர் பழங்கள். சில உணவுகள் உலர்ந்த பிறகு சாப்பிடுவதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். அதிலும் இந்த 5 உணவு பொருட்களை நீங்கள் தினமும் சாப்பிட்டால் முடி உதிர்வு கட்டாயம் நின்று விடும். மேலும் முடி அடர்த்தியும் அடையும்.

உலர் திராட்சை:

உலர் திராட்சை இரும்பின் இயற்கை மூலமாகும். இது உச்சந்தலையில் ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தை பராமரிக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

முந்திரி:

துத்தநாகம் நிரம்பியுள்ள முந்திரியில் ஆரோக்கியமான உச்சந்தலையை பராமரிப்பதிலும், முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

வால்நட்:

அக்ரூட் பருப்பில் ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ மற்றும் பயோட்டின் உள்ளது. இது முடியை வலுப்படுத்தவும் முடி உதிர்தலை தடுக்கவும் உதவுகிறது.

பேரீச்சம்பழம்:

பேரீச்சம்பழத்தில் இரும்பு சத்து, வைட்டமின் பி இருப்பதால் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும். மேலும் அதில், பிற அத்தியாவசிய ஊட்டசத்துக்கள் அதிகமாக உள்ளது உடலுக்கு மிகவும் நல்லது.

பாதாம்:

பயோட்டின், வைட்டமின் ஈ மற்றும் கொழுப்பு அமிலங்கள் ஆகியவை பாதாமில் இருப்பதால் முடிக்கு தேவையான சத்துக்கள் அதிலிருந்து கிடைக்கும்.

கொன்றை பூவின் ஆரோக்கிய மகத்துவம் தெரியுமா?

உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?

Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

18 முறை படையெடுத்தும் 6 முறை தரைமட்டமாகியும் மீண்டெழுந்த ஆலயம்!

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

SCROLL FOR NEXT