முடி உதிர்வு பிரச்சனை என்பது பல ஆண்களுக்கு கவலை தரும் ஒன்றாகவே உள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான இயற்கையான வழிகள் பற்றிய ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்தப் பதிவில் முடி வளர்ச்சிக்கு உதவும் என்று நம்பப்படும் விட்டமின் பி7 அல்லது பயோட்டின் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
பயோட்டின் என்றால் என்ன?
பயோட்டின் என்பது நீரில் கரையும் வைட்டமின் பி வகையை சேர்ந்தது. இது உடலில் பல முக்கிய செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. பயோட்டின், கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகள் ஆகியவற்றை உடைத்து உடலுக்கு ஆற்றல் வழங்க உதவுகிறது. மேலும், செல்கள் வளர்ச்சி, செல்பிரிவு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பயோட்டின் முடி, சருமம் மற்றும் நகங்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இது முடியின் முக்கிய கட்டமைப்பு புரதமான கெரட்டின் உற்பத்தியை அதிகரிக்கிறது. கெரட்டின் குறைபாடு ஏற்பட்டால் முடி உடைதல், உடையக்கூடிய நகங்கள் மற்றும் சரும பிரச்சனைகள் போன்றவை ஏற்படக்கூடும்.
ஆண்களின் முடி வளர்ச்சிக்கு பயோட்டின் எவ்வாறு உதவுகிறது?
போதுமான அளவு பயோட்டின் எடுத்துக்கொள்வது முடி உதிர்வைகா குறைத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும், இது முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி, அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பயோட்டின் தலைமுடியின் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை தூண்டிவிடும். மேலும் இது கெராட்டின் உற்பத்தியை அதிகரிப்பதால், முடி வலுவானதாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
பயோட்டின் குறைபாட்டின் அறிகுறிகள்:
பயோட்டின் குறைபாடு கொண்டவர்களுக்கு முடி உதிர்வு, சரும பிரச்சனைகள், நகங்கள் எளிதில் உடைந்து போதல், களைப்பு, மனச்சோர்வு, தசைவ வலி போன்ற அறிகுறிகள் தென்படும். எனவே, இத்தகைய அறிகுறிகள் தென்படுபவர்கள் மருத்துவரை ஆலோசித்து பயோட்டின் சப்லிமென்ட்கள் எடுத்துக் கொள்ளலாம்.
பயோட்டின் ஆண்களின் முடி வளர்ச்சிக்கு உதவும் ஒரு சக்தி வாய்ந்த ஊட்டச்சத்து. இது முடி உதிர்வைகா குறைத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். இருப்பினும், முடி உதிர்வுக்கு பல காரணங்கள் இருப்பதால், பயோட்டின் குறைபாடு மட்டுமே முடி உதிர்வை ஏற்படுத்தும் என சொல்ல முடியாது. ஒருவேளை உங்களுக்கு அதிக முடி உதிர்வு பிரச்சனை இருந்தால், தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசிக்கவும்.