நம்மில் பலருக்கும் இந்த பிரச்சனை இருக்கும். எவ்வளவு ஸ்டைலாக ஆடை அணிந்திருந்தாலும், பார்பதற்கு டீசெண்டாக இருந்தாலும், நம்மை பார்த்து மற்றவர்கள் சுலபமாக முகம் சுளிக்க வைத்துவிடும் இந்த வியர்வை நாற்றம். நாமும் எவ்வளவோ விலையுர்ந்த பெர்ஃப்யூம் பயன்படுத்தி வந்தாலும் இந்த வியர்வை நாற்றம் மட்டும் நம்மை விட்டு நீங்காது. மேலும் ஒரு சிலர் வியர்வை வரமால் தடுக்க சந்தைகளில் விற்கும் பல விதமான செயற்கை பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இதனால் பக்கவிளைவுகள் வருவது தான் மிச்சம்.
அதிலும் ஒரு சிலருக்கு உடல் முழுவதும் வியர்க்கும், ஒரு சிலருக்கு மூக்கு, உதடு, நெற்றி மட்டும் வியர்க்கும். ஆனால் எப்படி வியர்த்தாலும் நமக்கு இருக்கும் ஒரு பிரச்சனை இந்த வியர்வை நாற்றம். அதனால் நம்மால் மற்றவர்களிடம் சகஜமாக உரையாடவோ, நெருங்கி பழகவோ முடியாது. இனி வியர்வை நாற்றம் வரமால் இருக்க இதை ட்ரை பண்ணுங்க.
வியர்வை நாற்றம் வருவதற்கான காரணம்:
பொதுவாக வியர்வையில் எந்த ஒரு துர்நாற்றமும் வருவது இல்லை. ஒருவருக்கு வியர்வை வருவதற்கான பல்வேறு காரணங்கள் இருக்கலாம். வெப்பநிலை, உடற்பயிற்சி, மன அழுத்தம், மாதவிடாய், ஹார்மோன் மாறுபடுதல், உணவுப் பழக்க வழக்கங்கள், மருந்து உட்கொள்ளுதல், போன்ற காரணங்களால் இந்த வியர்வை நாற்றம் உண்டாகிறது.
மேலும் வியர்வை நாற்றம் வரக்கூடிய இடம் அக்குள். ஏனெனில் அக்குளில் முடி இருப்பதால் வியர்க்கும் போது அங்கு பாக்டீரியாக்கள் உருவாகி நாற்றம் உருவாகிறது.
வியர்வை நாற்றம் வராமல் தடுக்க இதை ட்ரை பண்ணுங்க:
குளிக்கும் நீரில் மாசி பச்சை இலையை கலந்து குளித்து வந்தால் வியர்வை நாற்றம் வராமல் தடுக்கலாம். இந்த மாசி பச்சை இலை, மாலைகளில் வைத்து கட்டுவார்கள். கடைகளில் கிடைக்க கூடிய இந்த மாசி பச்சை இலை, இயற்கையான நறுமணம் கொண்ட இலை.
ராேஸ் வாட்டர், பச்சை பயிறு மாவு, தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து அக்குளில் அப்ளை செய்ய வேண்டும். பிறகு அதனை 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் வியர்வை துர்நாற்றம் வராது.
தினமும் குளிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு குளிக்கலாம். இது உடலில் உள்ள பாக்டீரியாகளை அழிக்கும்.
குளிக்கும் நீரில் எலுமிச்சை பழம் பிழிந்து குளிக்கலாம். அல்லது குளித்து வந்த பிறகு வியர்வை நாற்றம் வரும் பகுதியில் எலுமிச்சையை இரண்டாக வெட்டி தேய்த்துக்கொள்ளலாம்.
இரவு உறங்க செல்லும் முன் நீரில் வெட்டி வேர், சந்தன கட்டை, வேப்பிலை ஆகியவற்றை சேர்த்து ஊறவைத்த பிறகு மறுநாள் காலையில் அந்த நீரில் குளித்து வந்தால் வியர்வை நாற்றம் வராமல் தடுக்கலாம்.
முதல் நாள் இரவு உறங்க செல்லும் முன்பு எலுமிச்சை பழ சாறுடன், சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து அதனை அக்குளில் தேய்த்து மறுநாள் நன்றாக தேய்த்து குளித்து வந்தால் வியர்வை துர்நாற்றம் நீங்கும்.
நாம் உட்கொள்ளும் உணவில் உப்பின் அளவு கட்டுபாட்டுடன் இருக்க வேண்டும். வெங்காயம், பூண்டு போன்ற உணவுப்பொருட்களை உணவில் குறைந்த அளவு பயன்படுத்தி உட்கொள்ள வேண்டும்.
இறுக்கமான உடைகளை அணிவதை தடுக்க வேண்டும்.