Different types of shrugs Image Credits: ebrclerkofcourt.org
அழகு / ஃபேஷன்

லேட்டஸ்ட் டிசைன்களில் பெண்களுக்கான ‘ஸ்ரக்’ வகைகளைப் பற்றிப் பார்க்கலாம்!

நான்சி மலர்

ஸ்ரக் என்பது நம் ஆடையின் மீது எக்ஸ்டாவாக ஓவர் கோட் போன்று போடப்படும் ஜாக்கெட் ஆகும். சிலர் இதை ஸ்டைலுக்காகவும், இன்னும் சிலர் உடை அணிவது வசதியாக இருப்பதற்காகவும் போடுகிறார்கள். இதை அணியும்போது மேலே துப்பட்டா போன்றவை அணிய தேவையில்லை என்பதால் இளம்பெண்கள் மத்தியில் இந்த ஸ்ரக் மிகவும் பிரபலமாகி வருகிறது. ஸ்ரக்கில் பலவகைகள் உள்ளன, அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

நீளமான ஸ்ரக் (Long shrug)

இந்த ஸ்ரக் முட்டியை தாண்டி நீளமாக இருக்க கூடியதாகும். இதை ஜீன்ஸூடன் சேர்த்து அணிவது மிகவும் ஸ்டைலிஷ் ஆக இருக்கும். இதை அணியும்போது பெண்களுக்கு அழகையும், நலினத்தையும் தருகிறது. இதை ஸ்நீக்கர்ஸ் அல்லது ஹீல்ஸூடன் சேர்த்து அணிந்து கொள்வது மேலும் ஸ்டைலை கூட்டும்.

க்ராப்டு ஸ்ரக் (Cropped shrug)

க்ராப்டு ஸ்ரக் என்பது ஸ்ரக் வகையில் ‘மினி வெர்ஷன்’ என்று சொல்லலாம். இது சின்னதாகவும், ஸ்டைலாகவும் அணிவதற்கு க்யூட்டாகவும் இருக்கும். இந்த வகை ஸ்ரக்கின் அளவு இடுப்புக்கு மேல் வரையே இருக்கும். இதை மேக்ஸி கவுன்னுடன் அணிந்து கொள்வது சிறப்பாக இருக்கும்.

ப்ரிஞ்சுடு ஸ்ரக் (Fringed shrug)

ஸ்ரக்கை எதனுடன் சேர்த்து அணிந்தால் நன்றாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டால் இந்த வகை ஸ்ரக்கை ஈசியாக கையாளலாம். ப்ரிஞ்சுடு ஸ்ரக்கினுடைய ஓரங்களிலிருந்து நிறைய நூல்கள் தொங்கிக்கொண்டிருக்கும். இதை அணிவதால் மிகவும் ஸ்டைலிஷ்ஷான லூக்கை கொடுக்கும். இதில் விதவிதமான வெரைட்டிகளும், டிசைன்களும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லேசி ஸ்ரக் (Lacy shrug)

லேசி ஸ்ரக்கள் அழகான நூல்களை கொண்டு நெய்யப்பட்ட துணியாகும். இது பூ, இலை போன்ற டிசைன்களில் வருகிறது. இந்த ஸ்ரக்கை அணியும் போது அது நம் உடையின் லூக்கையே மாற்றி அமைத்துவிடும். சம்மர் டிரஸ் மற்றும் ஜம்சூட்டுடன் இதை சேர்த்து அணியலாம்.

ப்ளோரல் ஸ்ரக் (Floral shrugs)

ப்ளோரல் ஸ்ரக் சம்மரில் அணிந்து கொள்வதற்கு ஏற்றதாக இருக்கும். மற்ற ஸ்ரக்ஸை விட ப்ளோரல் ஸ்ரக் டிரெண்டியாகவும், புதுமையாகவும் இருக்கும். இதை டீ சர்ட்டுடன் அல்லது சம்மர் டிரஸூடன் அணிவது எடுப்பாக இருக்கும்.

குர்த்தி ஸ்ரக் (Kurtis shrug)

இதை ஸ்லீவ்லெஸ் குர்த்தியுடன் சேர்த்து அணிவார்கள். இதுவும் குர்த்தி போன்றே முட்டியளவு வரக்கூடியதாகும். குர்த்தியை விட ஸ்ரக்கில் டிசைன்கள் அதிகமாக கொண்டிருக்கும். இது அந்த ஆடையின் லுக்கை மேலும் உயர்த்திக்காட்டும். இந்த வகை ஆடையை ஆபிஸ் போன்ற இடங்களுக்கு அணிந்து செல்லலாம் ப்ரபொஷனல் லுக்கை கொடுக்கும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT