beauty tools...
beauty tools... 
அழகு / ஃபேஷன்

தென்கொரிய பெண்கள் பயன்படுத்தும் 5 அழகுசாதனக் கருவிகள் (beauty tools) என்னென்ன தெரியுமா?

நான்சி மலர்

‘அழகு’ என்றதும் நம் அனைவரின் நினைவிற்கும் வரும் ஒரே நாடு தென்கொரியாதான். தற்போதைய நிலவரப்படி, அழகு சம்மந்தமான எல்லா துறைகளிலும் தென்கொரியர்களே முதலாவது இடத்தில் உள்ளனர். அந்த அளவிற்குத் தென்கொரிய மக்கள் அவர்கள் வாழ்வில் அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அந்த வகையில் தென்கொரிய பெண்கள் பயன்படுத்தும் 5 அழகு சாதனக் கருவிகளைப் (Beauty tools) பற்றித்தான் இப்பதிவில் பார்க்க உள்ளோம்.

1.ஜேட் பேசியல் ரோல்லர் (Jade Facial roller)

பழங்காலம் முதலே பயன்படுத்தப்பட்டு வரும் அழகு சாதனப்பொருள் இது. இதை முகத்தில் பயன்படுத்தி மசாஜ் செய்வதால், முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், முகத்தில் ஏற்படும் வீக்கத்தையும், முகத்தில் ஏற்படும் சுருக்கங்களையும் குறைக்க உதவும். இது சருமத்தை அமைதிப்படுத்த பயன்படுகிறது. இதனால் சருமம் பளபளப்பாக மாறும். ஜேட் பேசியல் ரோலரை முகத்திலும், கழுத்திலும் மேலும் கீழுமாக 15 நிமிடம் மசாஜ் செய்யவும்.

2. ஷீட் மாஸ்க் (Sheet mask)

ஷீட் மாஸ்க் என்பது மெல்லிய முகமூடியாகும். இது நெகிழ்வான காகிதம், செல்லுலோஸ் அல்லது மூங்கிலில் விட்டமின், மினரல், ஆண்டி ஆக்ஸிடன்ட் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இதனை முகத்தில் பயன்படுத்துவதால், சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். இதை முகத்தில் குறிப்பிட்ட நேரம் உபயோகிப்பதால், அதில் இருக்கும் விட்டமின், மினரல் போன்றவை நம் சருமத்தில் இறங்கி உடனே பொலிவினைத் தரும். இது மாய்ஸ்ச்சரைசராகவும் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

3. LED லைட் தெரப்பி மாஸ்க் (LED light therapy mask.)

LED லைட் தெரப்பி மாஸ்க் சரும பராமரிப்பிற்கே அதிகம் உதவுகிறது. இது முகத்தில் தோன்றக்கூடிய முதுமையை நீக்குவதோடு, முக வீக்கத்தையும் குறைக்கிறது. முகத்தில் உள்ள கொலோஜெனை அதிகப்படுத்துவதால் சருமத்தில் ஏற்படும் சுருக்கம் நீங்கி முகப்பொலிவு ஏற்படும். இதில் இருந்து வரும் வேறுப்பட்ட கதிரலைகளின் வெப்பத்தன்மை மற்றும் வேறுப்பட்ட நிறத்தன்மை காரணமாக, பிக்மெண்டேஷன், சரும சுருக்கம், முகப்பரு போன்றவற்றை சரி செய்வது சாத்தியமாகிறது. இதை ஒரு வாரத்தில் 15 நிமிடம் என்ற கணக்கில் மூன்று முறை பயன்படுத்தலாம்.

Face mask...

4. கோன்ஜாக் ஸ்பாஞ்ச் (konjac sponge)

சருமத்தை கிளீன் செய்வதற்கு பிரஷ், ஸ்க்ரப் ஆகியவற்றை பயன்படுத்தாமல் மென்மையாக ஏதாவது வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக கோன்ஜாக் ஸ்பாஞ்சை பயன்படுத்த வேண்டும். இதை ஆசியாவை பூர்வீகமாகக்கொண்ட மரத்தின் வேரிலிருந்து எடுக்கிறார்கள். இது சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்ய உதவுகிறது. இந்த ஸ்பாஞ்சை சுடுதண்ணீரில் 15 நிமிடம் ஊற வைத்தபிறகு எடுத்து முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இதை தினமும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

5. போர் வேக்குவம் (Pore vaccum)

முக சருமத்தில் மற்றும் மூக்கின் மீது இருக்கும் சிறுத்துளைகளில் காணப்படும் பிளாக் ஹெட் (Black head) மற்றும் ஒயிட் ஹெட் (White head) நீக்குவதற்கு பயன்படுகிறது. இது அவற்றை உறிஞ்சி எடுப்பதால், சருமம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் மாறுகிறது. இதை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தலாம்.

இந்த அழகுசாதனப் பொருட்கள் அனைத்துமே ஆன்லைன்னில் கிடைக்கின்றன. இந்த வகையான அழகுசாதனக் கருவிகள் இளைய தலைமுறையினரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. அனுபவம் மிகுந்த அழகுக்கலை நிபுணர்களிடம் கலந்தாலோசித்து, மேலும் விவரங்கள் பெற்று செயல்படுவது நல்லது.

தண்ணீர் அதிகமாக அருந்துவதால் ஏற்படும் 8 விதமான பக்கவிளைவுகள் தெரியுமா?

தனிமை உணர்வை அனுபவிக்கும் பிள்ளைகள்… பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்? 

கோயில் கொடிமரம் பற்றி அறிய வேண்டிய அரிய தகவல்கள்!

வறுமையில் வாழ்பவர்கள் எதற்கெல்லாம் பணத்தை செலவழிக்கக் கூடாது தெரியுமா?  

பணம் சேர வேண்டுமா? அப்போ வீட்டின் இன்டீரியரில் இந்த மாற்றங்களை செய்யுங்கள்!

SCROLL FOR NEXT