குளிர்காலத்தில் உங்கள் தலைமுடியை பராமரிக்க உதவும் சமையலறை பொருட்கள் சிலவற்றை பார்ப்போம்.
குளிர்காலத்தில் சருமம் மட்டுமல்ல, தலை முடியின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக வறண்ட முடிவு உள்ளவர்கள் குளிர்காலத்தில் இன்னும் கூடுதலான பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தலை முடி வறண்டு மோசமாக மாறுவதைக் கண்டு பதற்றம் அடைந்து தலைமுடி பராமரிப்பு பொருட்களை கண்ட கண்டதை வாங்கி பயன்படுத்துவார்கள். அதற்கு பதில் நமது வீட்டில் சமையலறையில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி தலை முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
பால்
குளிர்காலத்தில் தலைமுடியில் பால் தடவுவதால் பல நன்மைகள் உண்டு. பாலில் அதிக பரதம் உள்ளது. இதில் கேசீன் என்ற புரதம் உள்ளது. இது முடியை மென்மையாக்குவதோடு வலுவாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகிறது. மறுபுறம் பாலில் கால்சியத்தின் அளவு மிக அதிகமாக உள்ளது. இது முடி வளர்ச்சியை மேம்படுத்தி முடி உதிர்வதை தடுக்கிறது. பாலில் வைட்டமின் டி உள்ளது. இது புதிய மயிர் கால்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதனால் புதிய முடி உற்பத்தியாகிறது.
பாலில் வைட்டமின் ஏ பி 6 மற்றும் பொட்டாசியம் உள்ளதால் முடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது. நீங்கள் நேரடியாக தலைக்கு, தலைமுடிக்கு பால் பயன்படுத்தலாம். உங்கள் தலைமுடி எண்ணெய் பசையாக இருந்தால் காய்ச்சாத பாலுக்கு பதிலாக காய்ச்சிய பாலை பயன்படுத்த வேண்டும். தேன் சோற்றுக்கற்றாழை போன்றவற்றை பாலில் சேர்த்து பயன்படுத்தி வந்தால் அது கூந்தலுக்கு மேலும் பலன் தரும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தின் பாரம்பரிய மற்றும் மருத்துவ பயன்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வாழைப்பழம் ஒரு இயற்கையான மாய்ஸ்ரைசர் இதுவும் தலைமுடிக்கு பொலிவை தருவதாக தெரிகிறது இதை கண்டிஷனராகவும் பயன்படுத்தலாம். குறிப்பாக பொடுகு பிரச்சனை இருந்தால் வாழைப்பழம் அதனை குறைத்து முடியும் மென்மையாக்குகிறது. அது மட்டுமின்றி மேலும் தலைமுடி உடைவதையும் வாழைப்பழம் தருகிறது. சிறந்த விஷயம் என்னவென்றால் வாழைப்பழம் முடியின் நீளும் தன்மையை அதிகரிக்கிறது. குளிர்காலத்தில் உங்கள் தலைமுடி வறண்டு இருந்தால் மதிய நேரத்தில் வாழைப்பழத்தை மசித்து தயிருடன் கலந்து தலைமுடியில் தடவி 30 நிமிடங்களுக்கு பிறகு ஷாம்புவால் தலையை அலச வேண்டும்.
நெய்
வீட்டின் சமையலறையில் நெய் எளிதில் கிடைக்கும். நெய்யை முடிக்கு தடவுவதால் பல நன்மைகள் கிடைக்கிறது. நெய்யில் விட்டமின் ஈ மற்றும் விட்டமின் ஏ உள்ளது. இது முடியை சீராக்குகிறது. உங்கள் தலைமுடி வறண்டு போயிருந்தால் குளிர்காலத்தில் உங்கள் தலைமுடிக்கு நெய் தடவுவது சிறந்த தேர்வாகும். மிக மெல்லிய தலைமுடிக்கு நெய் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். இதை பயன்படுத்தினால் தலைமுடி அடர்த்தியாக மாறும் உச்சந்தலை பராமரிப்புக்கும் நெய் மிகவும் நன்மை பயக்கும். நீங்கள் அதை நேரடியாக கூந்தலுக்கு தடவலாம் அல்லது கற்றாழை ரோஸ் வாட்டருடன் கலந்து முடியில் தடவலாம். இதுவும் தலைமுடியை பளபளப்பாக மாற்றுகிறது. மேலும் முடி மென்மையாகவும் மாறும். ஆனால் எண்ணெய் பிசுக்கான தலையில் நெய் பயன்படுத்த வேண்டாம்.