Donkey milk 
அழகு / ஃபேஷன்

இளமை காக்கும் இயற்கை அமுதம் இதுதாங்க!

மணிமேகலை பெரியசாமி

பண்டைய காலத்தில் இருந்தே கழுதைப் பால் இயற்கை மருத்துவம் மற்றும் சரும பராமரிப்பு பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எகிப்திய மற்றும் கொரியர்களின் சரும பராமரிப்பு பொருள்களில் கழுதைப் பாலும் முக்கியத்துவம் வாய்ந்த மூலப்பொருளாக உள்ளது. எகிப்திய ராணியான கிளியோபாட்ரா தன் சரும அழகை தக்கவைத்துக் கொள்ள கழுதைப்பாலில் குளித்ததாக சொல்லப்படுகிறது. 'மருத்துவத்தின் தந்தை' என்று அழைக்கப்படும் ஹிப்போக்ரேட்டிஸ் காய்ச்சல் மற்றும் பல சரும நோய்களுக்கு கழுத்தைப் பாலை மருந்தாக பரிந்துரைத்ததாக கருதப்படுகிறது. தற்போது, கழுதைப் பாலை மூலப் பொருளாக வைத்து தயாரிக்கப்படும் அழகு மற்றும் சரும பராமரிப்புப் பொருள்களும் கூட பரவலாக கடைகளில் விற்கப்படுகின்றன. அப்படி இந்த கழுதைப் பால் சருமத்திற்கு என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்று இந்தப் பதிவில் காணலாம்.

கழுதைப் பாலில்  வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் டி, வைட்டமின் பி6, மற்றும்  ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள், லாக்டிக் அமிலம், அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள், புரதங்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள்  போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து ஒட்டுமொத்த சருமப் பாதுகாப்புக்கு வழிவகுக்கின்றன.

சருமம் தன்னைத் தானே குணப்படுத்தி, அதன் இயற்கையான பளபளப்பை மீட்டெடுக்க கழுதைப் பால் உதவி புரிகிறது. இது சிறந்த சரும சுத்தப்படுத்தியாக பயன்படுகிறது.

கழுதைப் பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்திற்கு மென்மையான தோற்றத்தை அளிக்கிறது.

இதில் உள்ள அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் சருமத்தில் எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி அதனால் ஏற்படும் சருமப் பிரச்னைகளையும் தடுக்கின்றன.

இதில் நிறைந்துள்ள வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள், சரும கட்டமைப்புக்கு துணை புரியும் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் போன்ற புரோட்டீன்களை  உருவாக்குகின்றன.

இதில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுவதால் சருமத்தில் ஏற்படும் வயதான அறிகுறிகளைக் குறைக்க கழுதைப் பால் உதவுகிறது.

சேதமடைந்த மற்றும் இறந்த சரும  செல்களை மீண்டும் உருவாக்க கழுதைப் பால் உதவுகிறது. அதோடு நீரிழப்பு, மந்தமான மற்றும் வறண்ட நிலையில் உள்ள சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடனும், மென்மையாகவும் மாய்சுரைசராகவும் வைத்திருக்க உதவுகிறது.

கழுதைப் பாலை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் ஏற்படும் சொரியாஸிஸ், சரும அழற்சி, எரிச்சல், சருமம் சிவப்பாதல், கரும்புள்ளி, முகப்பரு மற்றும் முகச் சுருக்கங்கள் போன்ற பிரச்னைகளை சரி செய்ய முடியும்.

இவ்வளவு நன்மைகளைத் தருகின்ற  கழுதை பாலை, ‘இளமையாக வைத்திருக்கும் இயற்கை அமுதம்’ என்றால் அது மிகையாகாது.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT