Beauty tips 
அழகு / ஃபேஷன்

பண்டிகை நாட்களில் முகம் ஜொலிக்க சில டிப்ஸ்!

பாரதி

ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி என பண்டிகைகள் தொடர்ந்து வருகின்றன. ஆகையால், நாமும் ஜொலிக்க வேண்டுமல்லவா?

பொதுவாக ஒரு பெரிய பண்டிகை எதுவும் வந்தால் சில நாட்களுக்கு முன்னரே தயாராக ஆரம்பித்துவிட வேண்டும். அதற்கும் சில காலங்களுக்கு முன்னரே என்ன செய்ய வேண்டும் என்பதைத் தேடி பார்த்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது தீபாவளிக்கு சரியாக இப்போதே அழகு குறிப்புகள் பார்த்தால் சரியாக இருக்கும். அந்தவகையில் பண்டிகை தினமன்று ஜொலிக்க சில டிப்ஸ் பார்ப்போம்.

முதலில் டோனிங், மாய்சுரைசிங் ஆகியவை மிகவும் முக்கியமானவை. இவற்றை தினமும் பயன்படுத்துதல் வேண்டும். மேலும்:

க்ளென்சிங்:

முகச்சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் மேக்கப்களை நீக்குவது அவசியம். இதன்மூலம் சருமத்தை சுத்தம் செய்வதோடு ஈரப்பதமாகவும் வைத்துக்கொள்ளலாம். உங்கள் சருமத்திற்கு ஏற்ற க்ளென்சரைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.

எக்ஸ்ஃபோலியேட்டிங்:

தீபாவளி அன்று அதிகப்படியான மேக்கப் போடுபவராக இருந்தால், கட்டாயம் எக்ஸ்ஃபோலியேட் செய்வது அவசியம். எக்ஸ்ஃபோலியேட் வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறையாவது செய்யலாம். உங்கள் சருமத்திற்கு ஏற்ற மென்மையான எக்ஸ்ஃபோலியேட்டரை தேர்வு செய்யலாம்.

ஃபேஸ் மாஸ்க்:

நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஃபேஸ் பேக் போடலாம். பால் மற்றும் மஞ்சள், கற்றாழை, தயிர் மற்றும் வெள்ளரிக்காய், பப்பாளி, தேன் மற்றும் ஓட்ஸ், தக்காளி, ரோஸ் வாட்டர், சந்தனம், புதினா இலைகள் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி பேஸ் பேக் போடலாம்.

ஃபேஸ் ஷீட் மாஸ்க்:

 நாம் கடைகளில் வாங்கி பயன்படுத்தும் ஷீட் மாஸ்க்கும் நல்ல ரிசல்ட் தரும். சருமத்தை நீரேற்றமாக வைத்துக்கொள்ளும். முகப்பரு போன்ற பிரச்சனைகளை நீக்கி பொலிவாகவும் புத்துணர்ச்சியாகவும் பிரகாசமாகவும் வைத்துக்கொள்ளும்.

ஃபேஸ் மசாஜ் செய்ய வேண்டும்:

ஃபேஸ் மசாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், சருமம் சுத்தமாக இருப்பதோடு, வலிமையாகவும் மாறும்.

காட்டன் துணியில் ஐஸ் க்யூப் வைத்து மசாஜ் செய்வதால், சருமம் மென்மையாகும். இது சருமத்துளைகளை இறுக்கி, வீக்கத்தை குறைத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

எண்ணெய்களை மசாஜ் செய்ய பயன்படுத்தலாம். உள்ளங்கை அளவு எண்ணெய்யை சூடுபடுத்தி முகத்தில் தடவி மசாஜ் செய்து வரலாம்.

இவையனைத்தையும் விட உள்ளிருந்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது அவசியம். அதாவது சரியான தூக்கம், ஆரோக்கியமான உணவு, உடல் நச்சுகளை நீக்கும் பானங்கள் ஆகியவற்றை குடித்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

50 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதிக்கும் சர்கோபீனியா பிரச்னையை சமாளிப்பது எப்படி?

அது என்னது One Pot ரசம்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

Sanitary Pad Vs Tampon: எதைப் பயன்படுத்துவது ஆரோக்கியம் தெரியுமா?

உள்ளத்து உணர்ச்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் உதடு மொழி பற்றி தெரியுமா?

சிறுகதை: அம்மாவும் தம்பியும்!

SCROLL FOR NEXT