facial for face... Image credit - pixabay
அழகு / ஃபேஷன்

பளபளப்பான முக அழகிற்கு பழ ஃபேசியல்!

ம.வசந்தி

பேஷியல் என்பது முகத்தை அழகுபடுத்துவது மட்டுமின்றி மனதை அமைதியான  நிலைக்குக் கொண்டு செல்வதற்காக செய்யப்படுவதாகும். மேலும், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிட்டு புதிய  செல்களை கொண்டு வரவும் பேஷியல் உதவுகிறது. அவ்வகையில் பழ ஃபேசியல் பற்றி காண்போம்.

வாழைப்பழ ஃபேஷியல்

வாழைப்பழத்தை நன்கு மசித்து, அத்துடன் தயிர் மற்றும் தேன் முகத்திற்கு ஃபேஷியல் செய்தால் பாதிப்படைந்த செல்கள் மீட்சியுறும். சருமத்தை இறுக்கமடைய செய்து , முகப்பருக்களை அண்ட விடாது. 

மாம்பழ ஃபேஷியல்

மாம்பழத்தை மசித்து, அதில் சிறிது பால் சேர்த்து கலந்து ஃபேஷியல் செய்தால் சருமம் இறுக்கமடைவதுடன், வறட்சி நீங்கி முகம் பொலிவுறும்.

ஸ்ட்ராபெர்ரி ஃபேஷியல்

ஸ்ட்ராபெர்ரியை தயிருடன் கலந்து, வாரத்திற்கு இரண்டுமுறை ஃபேஷியல் செய்து வந்தால் பருக்கள் பஞ்சாய் பறந்துவிடும்.

ஆப்பிள் ஃபேஷியல்

ஆப்பிளை அரைத்து, அதோடு தேன் கலந்து முகத்தில் தடவி ஃபேஷியல் செய்துவர, பழுப்பு நிற சருமம் மற்றும் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

அவகேடோ ஃபேஷியல்

அவகேடோ பழத்தை தேன், முட்டை அல்லது தயிருடன் சேர்த்துக் கலந்து மசாஜ் செய்து வர சருமம் மின்னுவதுடன் கூந்தலுக்கும் ஊட்டம் கிடைக்கும்.

ஆரஞ்சு ஃபேஷியல்

சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு பழத்தை வைத்து ஃபேஷியல் செய்து பாருங்கள். வறட்சியில்லாத சருமம் வாய்ப்பதுடன், இளமையான தோற்றத்தையும் பெறலாம்.

எலுமிச்சை ஃபேஷியல்

எலுமிச்சை ஒரு சரியான கிளன்சிங் பொருள். இதனை வைத்து  முகத்திற்கு ஃபேஷியல் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, பொலிவான சருமத்தைப் பெறமுடியும்.

பப்பாளி ஃபேஷியல்

கோடை காலத்தில் சருமத்தின் நிறம் பழுப்பு நிறமாகவும் பருக்கள் நிறைந்தும் காணப்பெறும். பப்பாளி ஃபேஷியல் செய்து பாருங்கள். பலன் கைமேல் கிடைக்கும். சருமத்தை குளிர்வித்து முகம் பளபளக்க வைக்கும் திறன் உடையது பப்பாளி.

பீச் பழ ஃபேஷியல்

பீச் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகமுள்ளதால், சரும சுருக்கங்களை நீக்குவதோடு சருமத்துளைகளில் உள்ள அடைப்புகளை நீக்கி அழகு பெற வைக்கும். பீச் பழத்துடன் தேனைக் கலந்து ஃபேஷியல் போட முகம் அழகு பெறும்.

மாற்றம்… அது ஒன்றே என்றும் மாறாதது!

News 5 – (20.09.2024) த.வெ.க. முதல் மாநாடு தேதி அறிவிப்பு!

Ind Vs Bang: சேப்பாக்கத்தில் இதுதான் அஸ்வினுக்கு கடைசி போட்டியா? வெளியான தகவல்!

தங்கத்தால் சாதிக்க முடியாததை சங்கத்தால் சாதிக்க முடியும்!

வெடித்து சிதறிய பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் அதிர்ந்தது லெபனான்!

SCROLL FOR NEXT