Garlic oila 
அழகு / ஃபேஷன்

கூந்தலின் அழகை மெருகூட்ட இது போதுமே!

சுடர்லெட்சுமி மாரியப்பன்

சமையல் பொருளான பூண்டு, நம் ஆரோக்கியத்திற்கு மிக அவசியமான ஒன்று. பொதுவாகவே 'வீட்டில் பூண்டு இல்லாமல் இருக்க கூடாது' என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஏனெனில், அந்த அளவிற்கு நம் உடலை பாதுகாப்பதில் பூண்டு முக்கிய பங்களிக்கிறது. இத்தகைய பூண்டு நம் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதோடு, நமது கூந்தலின் அழகை மெருகூட்டவும் உதவுகிறது என்று உங்களுக்கு தெரியுமா?

நம் கூந்தலை பராமரிக்க பூண்டு எண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும். அனைவருக்குமே கூந்தலை பராமரிப்பதில் சிறிது அக்கறை அதிகம்தான். கண்ணாடியில் தலைமுடியை அத்தனை முறை பார்த்து அதில் ஆயிரம் குறைகளை நாமே கண்டறிவதுண்டு இல்லையா? இனி அந்த கவலையே வேண்டாம். பூண்டு எண்ணெய் அந்த கவலையை உங்களிடம் இருந்து விலக்கிவிடும். பூண்டு எண்ணெயில் நமது கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

தலைமுடிக்கு பயனளிக்கும் பூண்டு எண்ணெய்!

1. பூண்டு எண்ணெயை தலையில் நேரடியாக பயன்படுத்துவதன் மூலம் உச்சந்தலையில், இரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர்ச்சியும் அதிகரிக்கும். மேலும் மயிர்கால்களை வலுப்படுத்தி முடி உதிர்வை தடுக்கிறது.

2. இந்த எண்ணெயில் இருக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு போன்ற பாதிப்புகளை தடுக்கிறது.

3. பூண்டு எண்ணெயில் இயற்கையாகவே நீர்ச்சத்து நிரம்பியுள்ளதால் இவை உச்சந்தலையில் வறட்சி ஏற்படுவதை தடுக்க உதவுகிறது. மேலும் கூந்தலில் ஈரப்பதத்தையும் தக்க வைக்கிறது.

4. இந்த எண்ணையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கூந்தலில் பளபளப்பு தன்மையை தக்க வைக்க பெரிதும் உதவுகிறது.

பூண்டு எண்ணையை பயன்படுத்தும் முறை!

தேனுடன் பூண்டு எண்ணெய்

வாரத்திற்கு ஒருமுறை, சிறிது பூண்டு எண்ணெயுடன் தேனை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அந்தக் கலவையை கூந்தலில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து பின்னர் மிதமான ஷாம்பு கொண்டு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வர, கூந்தல் வறட்சி மற்றும் முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும்.

ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் பூண்டு எண்ணெய்

பூண்டு எண்ணெயுடன் சிறிதளவு ரோஸ்மேரி எண்ணெயை சேர்த்து நன்றாக கலந்து, உச்சந்தலையில் தடவி சிறிது நேரம் ஊற விட வேண்டும். பின்னர் ஷாம்புப் போட்டு நன்றாக குளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை இவ்வாறு செய்து வர, கூந்தலில் வறட்சி ஏற்படாமல் முடி உதிர்வை தடுப்பதோடு, கூந்தலின்  ஆரோக்கியமும் மேம்படும்.

கற்றாழை ஜெல்லுடன் பூண்டு எண்ணெய்

சிறிதளவு கழுவிய (கற்றாழை ஜெல்லை சுத்தம் செய்யாமல் தலையில் பயன்படுத்தக் கூடாது) கற்றாழை ஜெல்லுடன், பூண்டு எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து உச்சந்தலை முதல் நுனி முடி வரை நன்றாக தடவிக் கொள்ளவும். பின்னர் அரை மணி நேரம் ஊற விட்டு ஷாம்பு பயன்படுத்தி குளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை இவ்வாறு செய்தால், கூந்தலில் ஈரப்பதத்தை தக்க வைத்து முடி உதிர்வை தடுக்க முடியும்.

இந்த உணவுகளை பச்சையாக சாப்பிடுவதுதான் பெஸ்ட்! 

அழியும் தருவாயில் உள்ள அழித்து அழித்து எழுதிய சிலேட்டுகள்!

திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் அதிக ஆரோக்கிய நன்மைகள்!

தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் 7 ஆரோக்கிய நன்மைகள்!

வாழை இலை விருந்தின் நாகரிகம் தெரியுமா?

SCROLL FOR NEXT