செம்பருத்திப் பூ 
அழகு / ஃபேஷன்

நமது சருமத்தை பிரகாசமாக்கும் செம்பருத்திப் பூ!

பொ.பாலாஜிகணேஷ்

ம் வீடுகளில் சாதாரணமாக கிடைக்கிறது செம்பருத்தி பூ. ஆனால் இந்த செம்பருத்தி பூவுக்குள் எவ்வளவு அழகு ரகசியங்கள் ஒளிந்து இருக்கிறது என்று தெரிந்து கொண்டால் ஆச்சரியப்பட்டு போவீர்கள். அப்புறம் பாருங்களேன் ஒரு செம்பருத்தி பூவைக் கூட வீணடிக்க மாட்டீர்கள்.

செம்பருத்திப் பூ மற்றும் இலை சருமத்தின் அழகை அதிகரிக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், உண்மைதான். பொதுவாகவே, செம்பருத்திப் பூ மற்றும் இலைகளை தேங்காய் எண்ணெயில் போட்டு வைத்து தலையில் தடவினால் முடி பிரச்சனைகள் குறையும். ஆனால் செம்பருத்திப் பூவால் முடி பிரச்னைகள் மட்டுமல்லாது நமது சருமத்தின் அழகையும் அதிகரிக்கலாம். அது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

செம்பருத்திப் பூக்கள் வெயிலில் காயவைத்து அதை பொடியாக்கி, அவற்றுடன் தக்காளிசாறு கலந்து கால்கள், கைகள், கழுத்து மற்றும் முகத்தில் நன்கு தடவவும். 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் பொலிவாக இருக்கும்.

செம்பருத்திப் பூவை அரைத்து, அவற்றுடன் கற்றாழை ஜெல் சேர்க்கவும். இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து சாதாரண நீரில் முகத்தைக் கழுவினால் முகம் கண்ணாடி போல பிரகாசமாக இருக்கும்.

துபோல், செம்பருத்தி இலைகளை வெயிலில் காயவைத்து பொடியாக்கி, அவற்றுடன் முல்தானி மெட்டி மற்றும் தயிர் சேர்த்து முகத்தில் பூச வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் முகம் அழகாக பளபளக்கும்.

செம்பருத்திப் பூக்களைக் கொண்டும் ஸ்க்ரப் செய்யலாம் தெரியுமா? எப்படியெனில், செம்பருத்திப் பூவின் பொடியுடன் சிறிது சர்க்கரை, கடலைமாவு, பால் சேர்த்து முகத்தில் மென்மையாக ஸ்கரப் செய்யவும். இப்படி செய்தால் முகத்தில் உள்ள டான் எல்லாம் போய்விடும். முகம் தெளிவாக இருக்கும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT