Lip Balm 
அழகு / ஃபேஷன்

முகம் ஒரு ஓவியம் என்றால், உதடுகள் அதன் இதயம்!

கிரி கணபதி

ஒரு பெண்ணின் முக அழகில் உதடுகளுக்கு தனி இடம் உண்டு. மிருதுவான, சிவந்த உதடுகள் முகத்திற்கு அழகை சேர்க்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், பல காரணங்களால் உதடுகள் கருமையாகி, வெடிப்பு ஏற்பட்டு, மந்தமாகத் தெரிகிறது. இதற்கு தீர்வாக, விலையுயர்ந்த கெமிக்கல் கலந்த லிப் பாம்ஸை பயன்படுத்துவதற்கு பதிலாக, வீட்டிலேயே இயற்கை பொருட்களைக் கொண்டு லிப் பாம் தயாரித்து பயன்படுத்தலாம்.

ஏன் வீட்டிலேயே லிப் பாம் தயாரிக்க வேண்டும்?

வீட்டிலேயே தயாரிக்கப்படும் லிப் பாம் இயற்கை பொருட்களால் ஆனது. இதில் எந்தவித செயற்கை நிறங்கள், வாசனை திரவியங்கள் அல்லது கெமிக்கல்கள் இருக்காது. இதனால் உதடுகளுக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது.

இந்த லிப் பாம் உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு தயாரிக்கப்படுவதால், அது உங்கள் உதடுகளை மிகவும் மென்மையாகவும், ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். வீட்டிலேயே லிப் பாம் தயாரிப்பது மிகவும் எளிது மற்றும் மலிவானது. 

நீங்கள் ஏற்கனவே உங்கள் சமையலறையில் வைத்திருக்கும் பொருட்களை கொண்டு இதை தயாரிக்கலாம். மேலும், நீங்கள் விரும்பும் வாசனை மற்றும் நிறத்தை பொறுத்து லிப் பாமை தனிப்பயனாக்கிக் கொள்ளலாம்.

லிப் பாம் தயாரிக்கத் தேவையான பொருட்கள்:

  • தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி

  • கற்றாழை ஜெல் - 1 தேக்கரண்டி

  • வைட்டமின் ஈ மாத்திரை - 1

  • தேன் - ½ தேக்கரண்டி

  • தேன் மெழுகு - 1 தேக்கரண்டி

  • பீட்ரூட் சாறு - 5 தேக்கரண்டி

செய்முறை:

  1. ஒரு மீடியம் சைஸ் பீட்ரூட்டை தோல் நீக்கி, பொடியாக நறுக்கி, மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

  2. ஒரு கற்றாழை மடலின் தோலை நீக்கி, அதிலிருந்து ஜெல் பகுதியை பிரித்தெடுக்கவும்.

  3. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, குறைந்த தீயில் தேங்காய் எண்ணெய் மற்றும் பீட்ரூட் சாறு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

  4. இப்போது, அடுப்பை அணைத்து, கலவையை லேசாக ஆற வைக்கவும்.

  5. ஆறிய கலவையில் வைட்டமின் ஈ மாத்திரை, தேன் மெழுகு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.

  6. இறுதியாக, கற்றாழை ஜெல் சேர்த்து, நன்கு பேஸ்ட் பதத்திற்கு கலக்கவும்.

தயாரான கலவையை ஒரு ஈரமில்லாத டப்பாவில் மாற்றி, பிரீஸரில் 3 மணி நேரம் வைக்கவும். பிரீஸரில் இருந்து எடுத்த லிப் பாமை உங்கள் உதடுகளில் தினமும் தடவி வரவும். வீட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த இயற்கை லிப் பாம் உங்கள் உதடுகளை மிகவும் மென்மையாகவும், சிவப்பாகவும் மாற்றும். இது உங்கள் உதடுகளை வறட்சியிலிருந்து பாதுகாத்து, ஆரோக்கியமாக வைத்திருக்கும். மேலும், இது மிகவும் மலிவானது, பயன்படுத்த பாதுகாப்பானது. இன்றே இந்த லிப் பாமைத் தயாரித்து, உங்கள் உதடுகளுக்கு இயற்கையான அழகை சேர்த்துக் கொள்ளுங்கள். 

Jeff Bezos-ஐ கோடீஸ்வரன் ஆக்கிய விதி என்ன தெரியுமா? 

முகத்தை மூடித் தூங்குபவரா நீங்கள்? அச்சச்சோ போச்சு!

குளிர்காலத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள்!

மரங்களைப் பற்றி மனிதர்கள் ஏன் கவலைப்படுவதில்லை?

இத தெரிஞ்சுக்காம யாரும் ஸ்மார்ட்போன்  வாங்காதீங்க! 

SCROLL FOR NEXT