நல்ல நிறத்தில் இருப்பவர்களுக்குக்கூட கை கால் முட்டிகளில் கருமையான நிறம் படர்ந்திருக்கும். இதுபோன்ற கருமை நம் உடலில் ஏற்பட எண்ணற்ற காரணங்கள் இருக்கின்றன. பிக்மெண்டேஷன், வறண்ட சருமம், கர்ப்பக்காலத்தால் ஏற்படுவது, சூரிய ஒளியில் அதிகமாக இருப்பது, சிலவகை மருந்துகள் காரணமாகவும் வருகிறது. இந்த பிரச்னையை சரிசெய்ய வீட்டிலேயே இருக்கும் 6 எளிமையான பொருட்கள் பொதுமானதாகும். அதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
1.தேங்காய் எண்ணெய்.
தேங்காய் எண்ணெய்யில் விட்டமின் ஈ அதிகமாக உள்ளதால், சருமத்தின் நிறத்தை இது சமன் செய்து ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்கிறது. தினமும் தேங்காய் எண்ணெய்யை 2 முதல் மூன்று முறை முட்டியில் தடவுவதன் மூலம் சருமத்தில் இருக்கும் கருமையான நிறம் மாறத்தொடக்கும்.
2.தயிர்.
தயிர் இயற்கையான Bleaching agent ஆகும். தயிரை சருமத்தில் தடவும்போது சருமப்பிரச்னைகளை போக்கி சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.
3.ஓட்ஸ்.
ஓட்ஸ் இயற்கையான எக்ஸ்பாலியேட்டராகும். இதை சருமத்தில் தேய்க்கும்போது இறந்த செல்களை சருமத்தில் இருந்து நீக்குவது மட்டுமில்லாமல் சருமத்தில் படர்ந்திருக்கும் கருமையையும் போக்கும். எக்ஸ்பாலியேட்டர் பயன்படுத்தும்போது சருமத்தில் அதிகமாக வைத்து தேய்க்காமல் மிருதுவாக அழுத்தம் தருவது நல்லது. எக்ஸ்பாலியேட் செய்த பிறகு மாய்ஸ்டரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் போடுவது நல்லதாகும்.
4.எழுமிச்சைப்பழம்.
எழுமிச்சைப்பழ சாற்றில் அதிகமாக சிட்ரிக் ஆசிட் உள்ளதால் இது சிறந்த Bleaching agent ஆக சருமத்தில் செயல்பட்டு இறந்த செல்களை நீக்க உதவுகிறது.
5. கற்றாழை.
கற்றாழையை சருமத்தில் பயன்படுத்துவதால், சருமம் மிருதுவாகும். கற்றாழையில் இருக்கும் ஜெல்லை சருமத்தில் மற்றும் முட்டிப்பகுதியில் கருமை உள்ள இடத்தில் தடவுவதன் மூலம் கருமை படிப்படியாக நீங்கும்.
6. ஆலிவ் ஆயில்.
ஆலிவ் ஆயிலை சர்க்கரையுடன் சேர்த்து ஸ்க்ரப் போன்று சருமத்தில் பயன்படுத்தும்போது இறந்த செல்களை நீக்கி சருமத்தின் நிறத்தை மாற்றும். அதுமட்டுமில்லாமல் சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும். இந்த 6 இயற்கையான பொருட்களைக் கொண்டு கை கால் முட்டிப்பகுதியிலிருக்கும் கருமையை நீக்கிப் பயன்பெறுங்கள்.