இப்போது பல பெண்கள் தங்கள் முடியை அழகாக மாற்ற பயன்படுத்தும் ஒரு சிகிச்சை, கெரட்டின். இதனால், முடி நேர்த்தியாகவும், மென்மையாகவும் மாறுவதால், இது முடி சிக்கல் என்ற பிரச்சனையை முற்றிலுமாக போக்கிவிடுகிறது. இதனால், இப்போது பல பெண்களின் முதல் சாய்ஸ் கெரட்டின் சிகிச்சை. அந்தவகையில் கெரட்டின் செய்தால் நல்லதா? இதனால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா? போன்றவற்றைப் பார்ப்போம்.
முன்பெல்லாம், நமது உணவு முறைகளாலும், காலநிலைகளாலும் இயற்கையாகவே உடலில் கெரட்டின் சத்து இருக்கும். இதனால், முடிகள் இயற்கையாகவே மென்மையாக இருக்கும். ஆனால், இப்போது உணவு முறை மாறிவிட்டதால், உடலில் கெரட்டின் அளவும் குறைந்துவிட்டது. இது முடி வறண்டு போய், பொடுகு போன்ற தொல்லைகளையும் தருகிறது. ஆகையால்தான், இந்த கெரட்டின் சிகிச்சை அறிமுகமானது. நமது கூந்தலில் சிகிச்சை மூலம் செயற்கையாக கெரட்டின் பயன்படுத்தப்படுகிறது. இதனால், கூந்தல் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறுகிறது.
New England Journal of Medicinal இதுத்தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. அப்போது 2020 மற்றும் 2022ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் ஒரு பெண் மூன்று முறை கெரட்டின் சிகிச்சை செய்திருக்கிறார். அதன்பின்னர், அந்த பெண் சிறுநீரக செயலிழப்பு, காய்ச்சல், குமட்டல், வயிற்றுப்போக்கு, முதுகுவலி போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கிறார். இவரின் ரத்தத்தை மருத்துவர்கள் சோதித்து பார்க்கையில், அவருடைய ரத்தத்தில் அதிக அளவு கெரட்டின் இருந்தது கண்டறியப்பட்டது.
அதற்காக, கெரட்டின் எப்போதுமே செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை, சில விஷயங்களை தெரிந்துக்கொண்டு செய்துக்கொள்ளலாம்.
முதலில் இந்த கெரட்டின் சிகிச்சை உங்கள் தலை முடிக்கு ஏற்றதா? என்பதை அறிந்துக்கொண்டு செய்ய வேண்டும். சுருள் முடி மற்றும் முடி உதிர்வு அதிகம் கொண்டவர்கள் இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம். ஏற்கனவே நேரான முடி உள்ளவர்கள் கெரட்டின் செய்துக்கொள்ள தேவையில்லை. இதுபோன்ற உங்களுக்கு சந்தேகத்தை கிளப்பும் அனைத்து கேள்விகளையும் சிகையலங்கார நிபுணர்களிடம் கேட்டப்பின், பதில்கள் உங்களுக்கு திருப்தியளித்தால் மட்டுமே செய்துக்கொள்ளுங்கள். அதேபோல், உடம்பில் எதும் பிரச்சனை இருப்பவர்கள் செய்துக்கொள்ளலாமா? என்று தெளிவாக கேட்டுக்கொள்வது நல்லது.
இந்த கெரட்டின் சிகிச்சையால், முடி மிகவும் பாதுகாப்பாக இருக்கும். மேலும் முடி உதிர்வைத் தடுத்து, மிருதுவாகவும், மென்மையாகவும் வைத்துக்கொள்ளும். New England Journal of Medicinal தவிர வேறு எந்த ஆய்வுகளிலோ அல்லது அதிகாரப்பூர்வமாகவோ பக்க விளைவுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.
ஆனால், சிலருக்கு லேசாக தோல் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் போன்றவை ஏற்படுகின்றன. இந்த சிகிச்சையை ஆண்கள், பெண்கள் என அனைவருமே செய்துக்கொள்ளலாம். ஆனால், கர்ப்பிணிகள் கெரட்டின் சிகிச்சை செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது.