வேட்டிகள்... image credit - jiomart
அழகு / ஃபேஷன்

8 வகையான இந்திய வேட்டிகள் பற்றி தெரிந்து கொள்வோம்!

ஆர்.ஐஸ்வர்யா

ந்திய வேட்டிகள் பாரம்பரியமாக பல்வேறு பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன, ஒவ்வொன்றும் வெவ்வேறு சந்தர்ப்பங்கள், காலநிலைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்றது.

1. பட்டு வேட்டி; 

பட்டு வேட்டிகள் ஆடம்பரமானவை. பெரும்பாலும் சிறப்பு சந்தர்ப்பங்களான திருமண விசேஷங்கள், ஆன்மீக வழிபாடுகள், கலாச்சார நிகழ்வுகளில் ஆண்கள் பட்டு  வேட்டி அணிகிறார்கள். இது மிருதுவாகவும் பளபளப்பாகவும் செழுமையான அமைப்பையும் கொண்டது. பொதுவாக வெள்ளை அல்லது கிரீம் கலரில் தங்க நிற அல்லது வண்ணமயமான பார்டர்களை கொண்டிருக்கும். 

பட்டு வேட்டி

தென்னிந்திய திருமணங்களில் மணமகன் பட்டு வேட்டி அணிந்து கொள்வது மிகவும் முக்கியமாக கருதப் படுகிறது. இதனுடைய ஜரிகையில் தங்கம் அல்லது வெள்ளி நூல் அமைப்பைக் கொண்டுள்ளது. இவை குறைந்த எடையில் அணிந்து கொள்ளத் தோதாக எடை குறைவாக இருக்கும்.  

2. காதி வேட்டிகள்

இவை கையால் நெய்யப்பட்ட துணியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஒரு பாரம்பரியமான உடையாகும் சுற்றுச்சூழலுக்கும் மிகவும் ஏற்றதாக இருக்கிறது. இந்திய விடுதலை இயக்கத்தின் போது மகாத்மா காந்தியால் ஆதரிக்கப்பட்ட உடை.  இவற்றை தினசரி உடுப்பாகவும் விசேஷ சந்தர்ப்பங்களிலும் கலாச்சார அல்லது அரசியல் நிகழ்வுகளிலும் அணிந்து கொள்கிறார்கள். இவை எளிமை மற்றும் தேசியத்தின் சின்னமாக கருதப்படுகிறது.

காதித் துணியின் அமைப்பு சற்று கரடுமுரடாக இருக்கும். தனித்துவமான பழமையான தோற்றத்தை கொண்டுள்ளது. அணிந்து கொள்ள வசதியானவை.  வெப்பமான கால நிலைக்கு மிகவும் ஏற்றவை.  வியர்வையை உறிஞ்சக் கூடியவை. இதை பல்வேறு வண்ணங்களிலும் வருகின்றன.

3. பருத்தி வேட்டிகள் 

இவை இந்தியாவில் மிகவும் பொதுவாக மற்றும் பரவலாக அணியப்படும் வேட்டி வகையாகும். இவை தூய பருத்தியிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை மென்மையானவை. வெப்பமான மற்றும் ஈரப்பதமான காரண நிலைக்கு ஏற்றவை. எளிதில் வியர்வையை உறிஞ்சக்கூடியவை.

பருத்தி வேட்டிகள்...

தினசரி உபயோகத்திற்கும், சடங்குகள், மதவிழாக்கள், கலாச்சார நிகழ்வுகளின் போதும் ஆண்கள் அணிந்து கொள்கிறார்கள். யோகா மற்றும் தியான பயிற்சிகளின் போது வசதியின் காரணமாகவே அவற்றை அணிகிறார்கள். பல்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் வருகின்றன. 

4. பாலியஸ்டர் வேட்டிகள்; 

இவை சற்றே விலை மலிவாக இருக்கும். நீடித்து உழைக்கும். சுருக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இதில் குறைவு மற்றும் பராமரிக்க எளிதானது. அதிக தேய்மானத்தை தாங்க வேண்டிய சூழ்நிலைகளில் இந்த வேட்டிகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. சுருக்கங்கள் அவ்வளவாக ஏற்படாது. ஆனால் வெப்பமான கால நிலையில் அணியும்போது சவுரியமாக இருக்காது. பெரும்பாலும் பல்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் வருகின்றன.

5. கைத்தறி வேட்டி 

இவை ஆளி இலைகளில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. மென்மையாகவும் நீடித்து உழைக்கக்கூடியதாகவும் வியர்வை உறிஞ்சக்கூடியதாகவும் இருக்கும். இவை தற்போது பிரபலமாக உள்ளன. இவை மிருதுவான அமைப்பைக் கொண்டுள்ளதால் வியர்வையை நன்றாக உறிஞ்சக்கூடியவை

6. சணல் வேட்டிகள் 

இவை இயற்கையான சணல் இழைகளில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. வலுவான மற்றும் நீடித்து உழைக்கக் கூடியவை இது சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது. குறிப்பிட்ட கலாச்சார நிகழ்வுகளின்போது ஆண்களால் அணியப்படுகின்றன.

இவை கடினமான அமைப்பைக் கொண்டுதிருந்தாலும், உறுதியானவை. நீண்ட காலம் உழைக்கும். மக்கும் தன்மையால் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை.

7. செயற்கைப் பட்டு வேட்டிகள் 

குறைந்த செலவில் பட்டின் தோற்றத்தையும் உணர்வையும் பிரதிபலிக்கின்றன. பண்டிகைகள் விழாக்களில் ஆண்கள் இதை அணிந்து கொள்கிறார்கள்.  பார்ப்பதற்கு பளபளப்பாக இருந்தாலும் வியர்வையை அவ்வளவாக உறிஞ்சாது. பராமரிக்க எளிதானவை.

8.. கம்பளி வேட்டிகள் 

இவை அரிதானவை. இந்தியாவின் குளிர் பிரதேசங்களில் மட்டும் கதகதப்புக்காக அணியப்படுகின்றன. மேலும் குறிப்பிட்ட கலாச்சார மத விழாக்களின்போது இவை அணியப்படுகின்றன. பெரும்பாலும் பாரம்பரிய வடிவமைப்பில் இரண்டு நிறங்களில் வருகின்றன.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT