Magical Face Pack
Magical Face Pack 
அழகு / ஃபேஷன்

இளமையான தோற்றத்தைப் பெற உதவும் Magical Face Pack!

கிரி கணபதி

பொதுவாகவே பெண்களுக்கு தங்களை எப்போதும் அழகாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதனால் அவர்களின் அழகைப் பராமரிக்க விதவிதமான அழகு சாதன பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். ஒரு சிலர் அடுத்த கட்டத்திற்கு போய், அடிக்கடி அழகு நிலையம் சென்று, தங்கள் முகத்தை அழகு படுத்திக் கொள்வார்கள். 

ஆனால் இப்படி எப்போதும் பியூட்டி பார்லர் சென்று நம்மை அழகாக வைத்திருக்க முடியாது. இத்தகைய நிலையை சந்திப்பவரில் நீங்களும் ஒருவராக இருந்தால், இயற்கையாகவே உங்கள் முகத்தை பராமரிக்கும் மேஜிக்கல் ஃபேஸ் மாஸ்க் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 

சில பெண்களுக்கு முகத்தில் எந்த பிரச்சனைகளும் இல்லை என்றாலும் கலை இழந்து காணப்படும். இந்நேரத்தில் உங்கள் முகத்தை உடனடியாக பிரகாசமாக மாற்ற வேண்டும் என நினைத்தால், நான் சொல்லப் போகும் ஃபேஸ் மாஸ்கை உபயோகித்துப் பாருங்கள். 

மேஜிக்கல் ஃபேஸ் மாஸ்க் செய்முறை: 

இதற்கு முதலில் பத்து பாதாம் பருப்புகளை எடுத்துக்கொண்டு முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதன் தோலை உரித்து கொஞ்சமாக பால் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்தக் கலவையை ஒரு சிறு கிண்ணத்திற்கு மாற்றி, அதில் சிறிதளவு தேன் சேர்த்துக் கொண்டால் முகத்தை உடனடியாக பளபளப்பாக மாற்றும் மேஜிக்கல் ஃபேஸ் மாஸ்க் தயார்.

இதை மேலே சொன்னது போல வீட்டிலேயே தயாரித்து கை, கால், முகம், கழுத்து போன்ற பகுதிகளில் தேய்த்துக் கொள்ளுங்கள். இது 15 நிமிடங்களில் காய்ந்துவிடும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் போதும் நீங்கள் இந்த மாஸ்க் தடவிய இடமெல்லாம் பிரகாசமாக மின்னும். 

ஏதேனும் விசேஷங்களுக்கு நீங்கள் செல்கிறீர்கள் என்றால் உடனடியாக இதைத் தயாரித்து பயன்படுத்தினால், அனைவருமே உங்களைத்தான் பார்ப்பார்கள். இதை வாரத்திற்கு ஒரு முறையாவது முயற்சி செய்யுங்கள். நிச்சயம் உங்கள் முகத்திற்கு பளபளப்பையும் இளமையான தோற்றத்தையும் இந்த மேஜிக்கல் ஃபேஸ் மாஸ்க் கொடுக்கும். 

நீங்க சீக்கிரமா உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? ப்ளீஸ், இது மட்டும் வேண்டாமே! 

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

SCROLL FOR NEXT