Natural Shampoo
Natural Shampoo 
அழகு / ஃபேஷன்

வீண் செலவு எதற்கு? வீட்டிலேயே பண்ணலாம் இயற்கை ஷாம்பு!

கல்கி டெஸ்க்

வேப்பிலை ஷாம்பு

Karuvepilai Shampoo

தேவையான பொருட்கள்:

  • சந்தனப் பவுடர் - 125 கிராம்

  • சீக்காய்ப் பவுடர் - 500 கிராம்

  • வேப்பிலைத் தூள் - 2 கப்

  • கடலை மாவு பவுடர் - 500 கிராம்

செய்முறை:

இவை அனைத்தையும் நன்றாக சலித்து அரைத்து ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதற்குப் பிறகு தேவைப்படும் பொழுது எடுத்து உபயோகப்படுத்தலாம். இதை அனைத்து விதமான முடிக்கும் உபயோகிக்கலாம்.

சந்தன ஷாம்பூ

Sandal Shampoo

தேவையான பொருட்கள்:

  • சீக்காய் -100 கி

  • சந்தன எண்ணெய் - 4 டீ ஸ்பூன்

  • தண்ணீர் - 1250 மிலி

  • ரிதா - 100 கி

  • ஆம்லா நெல்லிக்காய்த் தூள் - 50 கி

  • கசகசா - 50 கி

  • பூங்காகாய் - 50 கி


செய்முறை:

சந்தன எண்ணெய் தவிர்த்து மற்ற அனைத்தையும் பாதியாக ஆகும் வரை காய்ச்ச வேண்டும். பிறகு இதை வடிகட்டி விட்டு இதில் சற்று சந்தனத்தையும் சேர்த்துத் தலையில் தேய்த்துக் குளிக்க வேண்டும். இது முக்கியமாக எண்ணெய்ப் பசை அதிகமுள்ள முடிக்கு தேய்த்துக் குளிக்க வேண்டும்.

லாவண்டர் ஷாம்பூ

Lavender shampoo

தேவையான பொருட்கள்:

  • சீக்காய் - 100 கி

  • ஆம்லா 50 கி

  • மருதோன்றி (மருதாணி) -50

  • கசகசா - 50 கி

  • ரீத்தா 100 கி

  • தண்ணீர் 1250 மி.லி

  • லாவண்டர் எண்ணெய் - 4 டீ ஸ்பூன்


செய்முறை:

முதலில் உள்ள 5 வரை அனைத்தையும் இரவில் ஊற வைக்க வேண்டும். பிறகு காலையில் இதை பாதியாக காய்ச்ச வேண்டும். அதன் பிறகு இதில் சற்று லாவண்டர் ஆயில் சேர்த்து உபயோகிக்கலாம்.

இது தவிர்த்து இன்னும் மேன்மேலும் கூந்தலுக்கு மெருகூட்ட நல்ல கீரை வகைகளை உணவாக உண்டு வர வேண்டும் மற்றும் ஒரு நல்ல இயற்கை கண்டிஷனரை உபயோகப்படுத்தலாம்.

இயற்கை கண்டிஷனர்

Natural Conditioner

தேவையான பொருட்கள்:

  • வீட் ஜெர்ம் ஆயில் - 1 டீ ஸ்பூன்

  • கிளிசரீன் - 1 டீ ஸ்பூன்

  • பசும்பால் - 1 டீ ஸ்பூன்

  • தேங்காய்ப்பால் - 1 டீ ஸ்பூன்

  • முட்டை (மஞ்சள் கரு) - 1


செய்முறை:

இவை அனைத்தையும் கலந்து தலையில் நன்கு தேய்த்துக் குளிக்க வேண்டும். பிறகு மிதமான சூடுள்ள தண்ணீரில் தலைமுடியை அலச வேண்டும். இது இயற்கையாகவே கூந்தலுக்கு நல்ல மெருகூட்டும்.

இது போல் ஆயுர்வேதிக் மற்றும் அக்குபிரஷர் மூலம், வாத, பித்த, கப தன்மைகளுக்கேற்ற எண்ணையைத் தேர்ந்தெடுத்து மஸாஜ் செய்வதன் மூலம் கீழ்கண்ட நன்மைகளை அடையலாம்.

1. மிக முக்கியமான Cerebro Spinal Fluid சுரப்பது அதிகமாகும்.

2. ஞாபக சக்தி அதிகரிக்கும்.

3. கை கால்கள் நல்ல வலிமை பெறும்.

4. கண் பார்வை மற்றும் இருதயம் நன்கு வலிமை பெறும்.

5. வாயு சீரடையும்.

6. மூளை மற்றும் நரம்பு மண்டலம் நன்கு சீரமையும். இப்படி இதன் பலன்கள் எண்ணில் அடங்காது.

செல்வங்களையும் நற்கதியையும் அளிக்கும் கருட சேவை தரிசனம்!

Second-Hand பைக் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

மனிதநேய ஒளிப்படங்களுக்கான பன்னாட்டுப் பரிசுப் போட்டி!

உங்கள் வீட்டில் திருமணமா? இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்!

SRH Vs KKR: ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன்னேறப்போவது யார்?

SCROLL FOR NEXT