Manju Warrier 
அழகு / ஃபேஷன்

Manju Warrier Beauty tips: மஞ்சு வாரியர் அழகின் ரகசியம்!

பாரதி

46 வயதிலும் நடிகை மஞ்சு வாரியர் இவ்வளவு அழகாக இருப்பதற்கான காரணம் அவரின் சரும பராமரிப்பே ஆகும்.

மலையாள உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். தனது வயதுக்கு சம்பந்தமே இல்லாமல், அழகையும் , ஃபிட்னஸையும் பராமரித்து வருகிறார். துணிவு படத்தில் மஞ்சு வாரியர் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே சற்று பிரபலமானார். இதனையடுத்து சமீபத்தில் வெளியான வேட்டையன் படத்தின்மூலம் தற்போது தமிழக ரசிகர்களின் ஃபேவரட் ஆகிவிட்டார். அந்தவகையில் அவரின் அழகின் ரகசியம் குறித்துப் பார்ப்போம்.

அழகு குறித்து மஞ்சு வாரியார் பேசியதாவது, “அழகு என்பது தனியான ஒரு விஷயம் இல்ல. நமது செயல்கள்தான் நம்மை அழகாக்குகின்றன. பிறருடைய கஷ்டங்களையும் துயரங்களையும் காது கொடுத்துக் கேளுங்கள். இதுபோன்ற செயல்களே நம்மை அழகாக்கும்.” என்று பேசினார்.

மஞ்சு வாரியார் தனது முகத்திற்கு செய்யும் விஷயங்களைப் பார்ப்போம்.

க்ளென்சிங்: இவர் ஃபோர்ம் க்ளன்சர் பயன்படுத்தி க்ளன்சிங் செய்கிறார். ஒரு நாளைக்கு 3-4 முறையாவது முகத்தை கழுவிக் கொண்டே இருப்பது அவசியம்.

எக்ஸ்ஃபோலியேட்: மஞ்சு வாரியார் வாரத்தில் 1-2 முறையாவது நல்ல மென்மையான ஸ்கிரப் பயன்படுத்தி எக்ஸ்ஃபோலியேட் செய்து இறந்த செல்களை நீக்குவது நல்லது என்கிறார்.

மாய்ஸ்ச்சரைஸர்: இவர் தனது சருமத்தை எப்போதும் ட்ரையாகவே விடமாட்டார். தனது சருமத்தை நன்கு மாய்ஸ்ச்சரைஸ் செய்வதாக தெரிவித்தார்.

சன் ஸ்க்ரீன்: ஹைபர் பிக்மண்டேஷன் உள்ளிட்ட பல சருமப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருப்பதுதான் சன் ஸ்க்ரீன்.  மஞ்சு வாரியார் சன் ஸ்க்ரீன் அப்ளை செய்யாமல் வீட்டை விட்டு வெளியே வரமாட்டாராம்.

டயட் டிப்ஸ்:

1.  நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.  நாள் முழுக்க நிறைய தண்ணீர் மற்றும் திரவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

2.  அதேபோல் கார்பனேட்டட் பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து நிறைய காய்கறிகளையும் பழங்களையும் உணவில் சேர்த்துக் கொள்கிறார்.

3.   நேரம் இல்லாதபோது வீட்டிலேயே யோகா மற்றும் உடற்பயிற்சி செய்கிறார். மற்ற நேரங்களில் தவறாமல் ஜிம் செல்கிறார்.

4.  மனதை ஒருமுகப்படுத்துதவதில் நிறைய விஷயங்கள் செய்கிறார். குறிப்பாக தனக்கு பிடித்த வேலைகளை செய்கிறார். புத்தகங்கள் படிப்பது, நடனம் ஆடுவது போன்றவற்றை செய்கிறார்.

இவைதான் மஞ்சு வாரியரின் அழகின் ரகசியங்கள்.

பகவானுக்கும் அவனது திருநாமத்துக்கும் வேறுபாடும் இல்லை என்பதை உணர்த்தும் கிருஷ்ண துலாபாரம்!

Egg Vs Paneer: புரதச் சத்திற்கு சிறந்தது எது தெரியுமா?

ஒரு நாளில் நாம் உண்ணும் உணவுக்கும் நமது தூக்க முறைமைக்கும் என்ன சம்பந்தம்?

துலா ஸ்நானத்துக்கு மட்டும் ஏன் இத்தனை மகிமை?

சிறுகதை: கலியுகம் பிறந்த கதை - சித்ரகுப்தரின் கணக்கருக்கேவா?

SCROLL FOR NEXT