சருமத்தை ஆரோக்கியமாகவும் நீரற்றத்துடனும் பராமரிப்பதற்கு மாய்ஸ்சரைசர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றை தவறாகப் பயன்படுத்தினால், அதனால் கிடைக்கும் பலன்கள் பாதிக்கப்படலாம். எனவே இந்த பதிவில் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தும்போது தவிர்க்க வேண்டிய சில பொதுவான தவறுகளைப் பற்றி பார்க்கலாம்.
மக்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்று அவர்களின் சரும வகைக்கு பொருந்தாத தவறான மாய்ஸ்சரைசரைத் தேர்ந்தெடுப்பதாகும். ஒவ்வொரு தோல் வகைகளுக்கும் ஒவ்வொரு தேவைகள் இருக்கும். எனவே பொருந்தாத மாய்ஸ்ரைசரை பயன்படுத்துவது சருமத்திற்கு சில பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உதாரணத்திற்கு எண்ணெய் சருமம் உள்ளவர்கள் எண்ணெய் இல்லாத லேசான மாய்ஸ்சரைசர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
மற்றொரு மிகப்பெரிய தவறு என்னவென்றால், குறைந்த அளவு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது. அதாவது கொஞ்சமாக எடுத்து முகத்தில் தடவினால், உங்கள் சருமத்திற்கு போதுமான நீரேற்றம் மற்றும் பாதுகாப்பை வழங்காது. அதன் முழு பலன்களைப் பெற உங்கள் முகம் மற்றும் கழுத்து போன்ற பகுதிகளில் தாராளமாக பயன்படுத்த வேண்டும்.
சற்று ஈரமான சருமத்தில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தும்போது அது சிறப்பாக வேலை செய்யும். உங்கள் முகத்தை சுத்தம் செய்த பிறகு சிறிது ஈரப்பதத்துடன் அப்படியே மாய்ச்சலை சரி பயன்படுத்தினால், முகத்தில் இருக்கும் ஈரப்பதம் ஆவியாவதைத் தடுத்து முகத்தின் உள்ளே உறிஞ்சுவதற்கு உந்தப்படும்.
மாய்ஸ்சரைசரில் சூரிய பாதுகாப்பு காரணியான SPF இருக்கும்படி வாங்குவது நல்லது. ஏனெனில் அவை ஈரப்பதத்தை வழங்குவது மட்டுமின்றி, தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களில் இருந்தும் உங்கள் சருமத்தை பாதுகாக்கின்றன. மேலும் இப்படி இரண்டும் கலந்தபடி இருக்கும் மாய்ஸ்ரைசரை முழுமையாக நம்பக்கூடாது. மாய்ஸ்சரைசர் பயன்படுத்திய பிறகு சன் ஸ்கிரீனை பயன்படுத்துவது அவசியம். குறிப்பாக நீங்கள் வெயிலில் நேரத்தை செலவிடுகிறீர்கள் என்றால், சன் ஸ்கிரீனை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
நீங்கள் பல சருமப் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துகிறீர்கள் என்றால், மாய்ஸ்சரைசரை எந்த நிலையில் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். பொதுவாகவே சீரம்கள் பயன்படுத்திய பிறகு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும். எனவே சரும பராமரிப்பு பொருட்கள் அனைத்தையும் பயன்படுத்திய பிறகு மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது நல்லது.
மாய்ஸ்சரைசர் பயன்படுத்தும்போது இப்படி பல விஷயங்களை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இந்தத் தவறுகளை தவிர்த்து சரியானபடி மாய்ஸ்சரைசர் பயன்படுத்தினால், அதன் முழு பலன்களையும் நீங்கள் பெற்று சருமத்தை ஆரோக்கியமாகவும் அழகாகவும் பராமரிக்க முடியும்.