beauty tips Image credit - pixabay
அழகு / ஃபேஷன்

சரும ஆரோக்கியத்திற்கு அழகு தரும் இயற்கை உணவுகள்!

இந்திரா கோபாலன்

வறட்சியான சருமம் நீங்க:

பிஞ்சு வெண்டைக்காய் காரட் சமமாக எடுத்து தேங்காய் பால் விட்டு அரைத்து முகத்தில் தடவ முக வறட்சி நீங்கும்.இதையே உடல் முழுதும் தடவிக் குளிக்க மேனி அழகாகும்.

அகத்திக் கீரையைத் தேங்காய்ப் பால் விட்டு‌ அரைத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்க  முகம் வசீகரம் ஆகும்.  கண் கருவளையங்கள் தீரும். தோலில் படை, அரிப்பு போன்றவை குணமாகும்.

செம்பருத்தியிலை, பச்சைப்பயறு சமமாய் எடுத்து விழுதாக அரைத்து முகத்தில் பூசி வர முகம் ஜொலிக்கும்.

துத்தி இலையை பசும்பால் விட்டு  அரைத்து முகத்தில் பூச வறண்ட சருமம் நீங்கும்.

சீமை அகத்தியிலையை பச்சைப்பயறு சேர்த்து விழுதாய் அரைத்து முகத்தில் பூசி முகம் பளபளக்கும்.

எண்ணைப் பசை நீங்க…

முல்தானி மட்டியைப் பன்னீரில் குழைத்துப் பூச எண்ணை பிசுபிசுப்பு நீங்கும்.

தக்காளிச் சாற்றை முகத்தில் தேய்த்து வர எண்ணை வழியும் முகம் மாறும்.

வெள்ளரிக்காயை எலுமிச்சை சாறு சேர்த்து விழுதாக அரைத்து முகத்தில் பூச எண்ணை வழிவது நீங்கும்

சிறிய வெங்காயத்தை அரைத்து வேகவைத்து தயிருடன் சேர்த்து முகத்தில் பூச முகம் பளபளக்கும்.

சாயந்திரம் பூவை சிறு பருப்பு சேர்த்து அரைத்து முகத்தில் பூச முகம் பொலிவடையும். கன்னங்கள் ஆப்பிள் போல் செழுமையாக மாறும். 

அழகு தரும் இயற்கை பானம்

நெல்லிக்காய் சாறு __100 மி.லி

எலுமிச்சை சாறு _100 மிக.லி.

ஆரஞ்சுச்சாறு__.   100 மி.லி. 

புதினா சாறு. __100 மிக.லி

சாத்துக்குடி சாறு _100மி.லி

இவை அனைத்தையும் கலந்து பாதியாக சுண்டக் காய்ச்சவும். இதில்  அரை லிட்டர் தேனை சேர்த்து காலை மாலை ஒரு தம்பளர்  சாறு சாப்பிட்டு வர முகம் பளபளக்கும்.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT