Perfumes Image credit - pixabay
அழகு / ஃபேஷன்

வாசனை திரவியங்களும், அவற்றின் வகைகளும்!

மகாலெட்சுமி சுப்ரமணியன்

வாசனை திரவியங்களை விரும்பாதோர் நம்மில் யாரும்  இருக்க முடியாது. சிலருக்கு மைல்ட் ஆக, சிலருக்கோ ஸ்ட்ராங்காக வாசனை வேண்டுமென விரும்புவார்கள். பொதுவாக பெர்ஃப்யூம்கள் மூன்று வகைகளாக தயாரிக்கப்படுகின்றன.

பேஸ் நோட்ஸ், மிடில் நோட்ஸ், டாப் நோட்ஸ் என்று அவை அழைக்கப்படும். ஸ்ட்ராங்கான பேஸ்  நோட்ஸ் நம் உடலையும், சுற்றுப்புறத்தையும் பாதிக்கும். இவற்றின் அடர்த்தியான வாசனையால் சருமத்தில் அலர்ஜி, டெர்மடைட்டிஸ், மங்கு விழுதல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

டியோடரண்ட் என்பவை கிருமிகளின் வளர்ச்சியை தடுப்பதுடன், நறுமணத்தின் மூலம் துர்நாற்றத்தை போக்குவதோடு, புத்துணர்வை யும் தரும். பாடி ஸ்ப்ரே தயாரிப்பில் பெர்ஃப்யூம்கள்போல அடர்த்தியான எசன்ஷியல் ஆயில்கள் சேர்க்கப்படுகின்றன. இதில் வாசனை நீண்ட நேரம் உடலில் தங்காது. வியர்வை சுரப்பிகளை கட்டுப்படுத்தாது. கழுத்து, நெஞ்சுப் பகுதி, மணிகட்டின் உள்புறம், காதுகளுக்கு பின்னால் மற்றும் முழங்கை உட்புறம் உபயோகிக்கலாம். வியர்வை ஸ்மெலை குறைக்க வேண்டுமென்பதால் பெர்ஃப்யூம், பாடி ஸ்பிரேயை விட டியோடரண்ட்தான் சிறந்தது எனலாம்.

நறுமண பாட்டில்களில் சில வகை பெயர்கள் இருக்கும்‌. அவை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஈவ் டி  கொலோன். (Eau de cologne).

மற்ற வாசனை திரவியங்களை விட விலை குறைவு. இதை அதிகம் உபயோகித்தால்தான் இதன் வாசனை தெரியும். எனவேதான் இவற்றை பெரிய பாட்டில்களில் விற்கிறார்கள். சில மணி நேரம் இதன் வாசனை இருக்கும்.

ப்யூர் பர்ஃப்யூம் எக்ஸ்ட்ரைட் டீ பார்ஃபம். (pure perfume Extrait de parfum).

இந்த வகை வாசனை திரவியம் அடர்ந்த மணம் உள்ள உயர்ந்த வகை வாசனை திரவியம் ஆகும். இதில் ஆல்கஹால் அளவு குறைவாக இருக்கும். இதன் மணம் குறைந்தது பத்து மணி நேரம் நீடிக்கும். இதன் மணம் உபயோகிப்பவரையும், சுற்றிலும் இருப்பவர்களையும் உணரச் செய்யும்.

ஈவ் டி பர்ஃப்யூம். (Eau de parfum).

இந்த வகை வாசனை திரவியம் குறைவான ஆல்கஹால் கொண்டது.சி றிய அளவில் உபயோகித்தாலே  நீடித்த வாசனையைக் கொடுக்கும். எட்டு மணி நேரம்போல இதன் நறுமணம் வீசும்.

ஈவ் டி டாய்லெடே. (Eau de Toilette).

இது உலகில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படுவது. விலை குறைவானது. தினசரி உபயோகிக்கலாம். நறுமணத்தை கொடுத்து புத்துணர்வை தரும். இதன் நறுமணம் 4-6மணி நேரம் இருக்கும். கோடைக் காலத்திற்கேற்ற வாசனை திரவியமாகும்.

ஈவ் ஃப்ரைச். (Eau fraiche).

இது மற்ற வாசனை திரவியங்களிலிருந்து மிகவும் மென்மையான, நுட்பமான வாசனை திரவியமாகும். இதுவும் விலை குறைவானது தான். இதில் ஆல்கஹாலுக்கு பதில் வாசனை திரவியமும், தண்ணீரும் சேர்ந்த கலவையாகும். குறைந்த நேரமே நீடிக்கும்.

இவ்வாறு பலவித நறுமண திரவியங்கள் நம்மை புத்துணர்ச்சியாக்கி உணர்வுகளை மேம்படுத்துகின்றன.

வரலாற்றுச் சின்னம் நாமக்கல் கோட்டை பற்றி தெரியுமா?

இது மட்டும் உங்களுக்குத் தெரிஞ்சா தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயத்தை டன் கணக்கில் சாப்பிடுவீங்க! 

'Whale fall' என்றால் என்ன தெரியுமா?

Chewing gum Vs Bubble gum: எது அதிக நேரம் புத்துணர்ச்சி தரும் தெரியுமா?

Mouni Roy Beauty Secrets: மௌனி ராய் அழகின் ரகசியம்!

SCROLL FOR NEXT