Trisha 
அழகு / ஃபேஷன்

Trisha's Beauty secrets: நடிகை த்ரிஷா அழகின் ரகசியம்!

பாரதி

நடிகை த்ரிஷா தனது 44 வயதிலும் இவ்வளவு அழகாக இருக்கிறார் என்றால், அதற்கு அவரது பராமரிப்பே காரணம். அந்தவகையில் அவரின் அழகின் ரகசியம் குறித்துப் பார்ப்போம்.

த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தின்மூலம் மீண்டும் சினிமாவில் தனக்கான இடத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். த்ரிஷா என்றால் விஜய்தான் பலருக்கும் ஞாபகம் வருவார். இவர்கள் ஜோடியாக நடித்து வெளியான லியோ படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் கோட் படத்திலும் மட்ட பாடலில் கேமியோ ரோல் செய்திருப்பார்.

தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஹீரோயினாக நடித்து கொண்டிருக்கும் த்ரிஷாவின் அழகு ரகசியம், சரும பராமரிப்பு, ஃபிட்டன்ஸ் இவை அனைத்தையும் குறித்து இப்போது பார்ப்போம்.

ஏனெனில், முகம் அழகாக இருக்க இந்த மூன்றுமே மிகவும் முக்கியமானவை!

ஃபிட்னஸ்

த்ரிஷா தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள  சைக்கிளிங், ஸ்விம்மிங் மற்றும் யோகா பயிற்சி மேற்கொள்கிறார். இந்த பயிற்சிகளை ஒருநாளும் மிஸ் செய்யாமல் அன்றாடம் செய்கிறார். இதுவே அவரின் அழகுக்கான காரணங்களில் ஒன்றாகும்.

பராமரிப்பு:

அதேபோல் காலை எழுந்ததும் எப்போதும் வெந்நீர் எடுத்துக்கொள்கிறாராம். த்ரிஷாவின் இளமையான முகத்திற்கு முக்கிய காரணம் சுக்கு பொடியாம். இதுவே அவரின் அழகுக்கான காரணம். அதேபோல், மாலை நேரத்தில் மாதுளை ஜூஸ். மதிய நேரத்தில் உணவுக்கு பிறகு ஃபிரஷ் ஆரஞ்சு ஜுஸ் குடிப்பாராம் த்ரிஷா. 

இது அவரின் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்கிறது. மேலும் பொலிவாக்குகிறது.

த்ரிஷா அதிக உப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவே மாட்டாராம். அதேபோல் ஷூட்டிங் உணவுகள் உட்பட வெளி உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிடுவாராம். ஷூட்டிங் நேரத்தில் வீட்டில் செய்த உணவுகளை பேக் செய்து எடுத்துச் செல்வாராம். உணவில த்ரிஷா அதிகளவு சேர்த்து கொள்வது எண்ணெய் சேர்க்காத ஆம்லெட், பராத்தா. காலை உணவாக பழங்கள் மற்றும் ஜூஸ்களை எடுத்து கொள்கிறார். அரிசி உணவுகளை அளவுடன் தான் சேர்த்து கொள்வாரம்.

இவையே த்ரிஷா அழகின் ரகசியம்... இந்த வழிகள் உங்களை அழகாக்குவதோடு ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும்.

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

SCROLL FOR NEXT