Face mask image 
அழகு / ஃபேஷன்

தீபாவளிக்கு உடனடி முகப்பொலிவு பெற இந்த 3 ஃபேஸ் பேக் ட்ரை பண்ணிப் பாருங்கள்!

நான்சி மலர்

ண்டிகை காலங்களில் முகம் பொலிவாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்று பெண்கள் ஆசைப்படுவது சகஜம்தான். இருப்பினும், சருமப்பராமரிப்பு செய்துக்கொள்ள நேரம் இல்லாதவர்கள் இந்த 3 பேஸ் பேக்கை வீட்டிலேயே முயற்சித்துப் பாருங்கள் உடனடியாக சருமப்பொலிவு மற்றும் பளபளப்பு கிடைக்கும்.

1.முகம் பளபளக்க ஃபேஸ் பேக்.

முகம் உடனடி பளபளப்புபெற கடலைமாவு மற்றும் தயிர் பயன்படுத்தவும். கடலைமாவு 1 தேக்கரண்டி, முல்தானி மிட்டி 1 தேக்கரண்டி, தயிர் 1 தேக்கரண்டி, வைட்டமின் சி எண்ணெய் 2 சொட்டுக்கள், ரோஸ் வாட்டர் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி விடவும்.

இதில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. கடலை மாவில் zinc உள்ளதால், சருமத்திற்கு உடனடி பொலிவைத் தரும். முல்தானி மிட்டி அதிகமான எண்ணெய் பசையை உறிஞ்சிக் கொள்ளும். ரோஸ் வாட்டர் சருமத்தை டோன் செய்ய உதவுகிறது.

2.ஆன்டி ஆக்னே ஃபேஸ் பேக்.

கற்றாழை மற்றும் மஞ்சள் பயன்படுத்துவதால் முகத்தில் ஆக்னேவை குறைக்கும். 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல், 5 சொட்டுக்கள் எழுமிச்சை சாறு, tea tree oil 2 சொட்டுக்கள்,  சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி விடவும்.

கற்றாழையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் பாக்டீரியாவை எதிர்ப்பது மட்டுமில்லாமல் அதிகப்படியான எண்ணெய்யை நீக்கி கண்ணாடிப் போன்ற சருமத்தை தருகிறது. எழுமிச்சையில் உள்ள வைட்டமின் சி பருக்களை நீக்கி பளபளப்பான சருமத்தை தருகிறது. Tea tree oil சரும நோயை போக்க உதவுகிறது. மஞ்சள் உடனடியான பளபளப்பை முகத்திற்கு தருகிறது.

3. சருமம் இளமையாக தெரிய ஃபேஸ் பேக்.

கொக்கோ பவுடர் மற்றும் தேனை பயன்படுத்துவதால் சருமம் இளமையான தோற்றத்தை பெறும். 1 தேக்கரண்டி கொக்கோ பவுடர், 1 தேக்கரண்டி தேன், வைட்டமின் ஈ ஆயில் 2 சொட்டுக்கள், ஆரஞ்சு தோல் பவுடர் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வைத்து கழுவிவிடவும்.

கொக்கோ பவுடரில் ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் எக்ஸ்பாலியேட் தன்மையுள்ளதால் டேன், பிக்மெண்டேஷனை போக்குகிறது. இயற்கையான மாய்ஸ்டரைசரான தேன் சருமத்திற்கு ஈரப்பதத்தை தருகிறது. வைட்டமின் ஈ முகத்தில் இருக்கும் Puffiness ஐ குறைக்கிறது. ஆரஞ்சு பவுடர் சருமத்தை உடனடியாக பளபளப்பாக்குகிறது. இந்த 3 ஃபேஸ் பேக்கையும் ட்ரை பண்ணி இந்த தீபாவளிக்கு அழகாக ஜொலியுங்கள்.

தீபாவளி திருநாளில் ஸ்ரீமகாலக்ஷ்மி அருளைப் பெற்றுத் தரும் சில பரிகாரங்கள்!

அதிகப்படியான இஞ்சி உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள்!

திருமலை திருப்பதியில் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை!

செகந்திராபாத்தில் ஸ்கந்தகிரி தலம் - முருகனுக்கு முடிப்பு கட்டு - என்னது, முருகனுக்கு முடிப்பு கட்டறதா?

சொந்த மண்ணில் ரோஹித், விராட் கோலி, அஸ்வின் மற்றும் ஜடேஜா விளையாடும் கடைசி போட்டி இதுதானா?

SCROLL FOR NEXT