அழகு / ஃபேஷன்

அடர் புருவம் வேண்டுமா?

ஆர்.சாந்தா

ழகுக்கு அழகு சேர்ப்பதில் அடர்த்தியான புருவத்துக்கும் பங்குண்டு. சிறிய கண்களுக்கும் அடர்த்தியான புருவம் மிகுந்த அழகைத் தரும். முகத்தில் கண்களுக்கு அடுத்தபடி சட்டென்று வசீகரிக்கும் புருவங்களை அடர்த்தியாக வளரச் செய்ய சில இயற்கை முறைகள் உள்ளன. அவற்றைத் தெரிந்துகொண்டால் பலன் பெறலாம்.

* வெங்காயச் சாறு : வெங்காயத்தை மிக்ஸியில் அடித்து சாறெடுத்து புருவத்தில் தடவி காயவைத்து, பின் அதனைத் துடைத்து, எலுமிச்சை சாற்றை புருவத்தின் மீது பூசிவிட்டுத் தூங்கவும்.

* வெந்தயம் : வெந்தயத்தை ஊற வைத்து, அதனை நைஸாக அரைத்து இரவில் புருவத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவவும். இந்த முறையைத் தினமும் செய்து வந்தால் பலன் தெரியும்.

* எலுமிச்சைத் தோல் : எலுமிச்சைத் தோலைத் துருவி வெயிலில் காய வைக்கவும். ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன், விட்டமின் ஈ கேப்ஸ்யூல் மற்றும் அரை ஸ்பூன் காய்ந்த எலுமிச்சைத் தோல் போன்றவற்றைக் கலக்கி தினமும் இரவில் மஸ்காரா பிரஷ் மூலம் புருவம் மற்றும் கண் இமைகளில் தேய்த்து வரவும்.

* விளக்கெண்ணெய் : இரவில் தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெயை சூடுபடுத்தி அதில் கறிவேப்பிலை பொடியைச் சேர்த்து குளிர வைத்து, வெதுவெதுப்பானதும் புருவங்களில் தடவி லேசாக மசாஜ் செய்து வரவும்.

* வேஸலின் : அரை ஸ்பூன் அளவு வேஸலின் எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் அளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து புருவங்கள் மீது தடவி லேசாக மசாஜ் செய்து வரவும்.

* கற்றாழை :  கற்றாழை ஜெல்லை அரை ஸ்பூன் எடுத்து, அதில் சம அளவு விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கி புருவத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்பு அரைமணி கழித்து கழுவவும்.

* தேங்காய்ப்பால் : நல்லெண்ணெய் அரை ஸ்பூன் எடுத்து அதே அளவு தேங்காய்ப்பால் கலந்து புருவத்தில் தடவி மசாஜ் செய்து காய்ந்ததும் கழுவவும். தினமும் இரவில் செய்துவந்தால் பலன் அதிகம்.

குழந்தைகளுக்கு அதிகமாக பவுடர் பூசுகிறீர்களா? தாய்மார்களே உஷார்!

மூலவர்கள் இருவர்; உத்ஸவர்கள் ஐவர்: எந்தக் கோயிலில் தெரியுமா?

வெண்டைக்காயை சுவையாக சமைக்க சில டிப்ஸ்!

ஸ்வெட்டர்களின் சுவாரஸ்யமான வரலாறு பற்றி தெரியுமா?

மாயன்களின் வரலாறு என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT