கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணையை கொதிக்க வைத்து தலையில் நன்றாக தேய்க்க வேண்டும்.
சிறிது சாதம் வடித்த கஞ்சியில் ஷாம்புவை ஊற்றி கலந்து தலையில் தேய்த்து குளித்து பாருங்கள் எண்ணெய் பசை மற்றும் அழுக்கு நீங்கி கூந்தல் பட்டு போல் பளபளக்கும்.
தலைமுடி வறண்டு சீராக இல்லாமல் இருந்தால் முகத்தின் தோற்றப் பொலிவு குறையும். ஆகவே மறுநாள் காலையில் விழா நாள் என்றால் முதல் நாள் இரவில் கூந்தலை சீராக்குவது அவசியம். முதல் நாள் மாலையில் கூந்தலை எப்போதும் போல ஷாம்பூ மற்றும் சீயக்காய் வைத்து அலசி விட வேண்டும். அடுத்த நாள் கூந்தலை அலசி துடைத்துவிட்டு அலங்காரம் செய்தால் கூந்தல் பளிச்சென இருக்கும். முகமும் தோற்ற பொலிவுடன் அனைவரையும் கவரும்.
இளநரை நீங்க வேண்டுமா?
நெல்லிமுள்ளியுடன் கரிசலாங்கண்ணி அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்து சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து ஊற வைத்து குளித்து வரவேண்டும். கடுக்காய்க்கு நரையை அகற்றி கருமையாக்கும் தன்மை உண்டு.
கரிசலாங்கண்ணி சாற்றையும் கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையும் தேய்த்து சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். சீரகம் வெந்தயம் வால் மிளகு ஆகியவற்றை சமஅளவு எடுத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வந்தாலும் இளநரை நீங்கும்.
பொடுகு இருக்கிறதா?
வால் மிளகை ஊறவைத்து பால் விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பின் குளிக்கலாம்.
வேப்பம்பூ 50 கிராம் எடுத்துக்கொண்டு அதனுடன் 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு கலந்து காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும் வேப்பம்பூடன் சேர்த்து எண்ணையை தலையில் நன்றாக தேய்த்து அரை மணி நேரம் ஊறி குளித்தால் பொடுகு பிரச்சனை தீரும். அதிகம் பொடுகு உள்ளவர்கள் வாரத்திற்கு ஒரு முறையோ இரண்டு முறையோ இவ்வாறு குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கிவிடும்.
நரைமுடி கருப்பாக வேண்டுமா?
சிறிது கருவேப்பிலையை எடுத்து காலையில் தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும்.
மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, மூன்றையும் சம அளவில் எடுத்து மையாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் நரைமுடி கருப்பாகி விடும்.
பேன் தொல்லை நீங்க வேண்டுமா?
வசம்பை தண்ணீர் விட்டு அரைத்து தலையில் நன்றாக தேய்த்து ஊறவைக்க வேண்டும். பிறகு சாதாரண தண்ணீரில் தலையை நன்றாக அலசி விட வேண்டும்.
துளசி இலையை நன்றாக மையாக அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். நீரில் தலையை கழுவினால் பேன் எல்லாம் செத்துப் விழுந்து விடும் முடியும் நன்றாக வளரும்.
கூந்தல் உதிர்கிறதா?
தேங்காய் பாலை தலையில் அரை மணி நேரம் ஊற வைத்து குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது வரை செய்ய வேண்டும்.
அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் நல்ல முன்னேற்றம் தெரியும்.