What is Dark Chocolate Facial and Its Benefits 
அழகு / ஃபேஷன்

டார்க் சாக்லேட் பேசியல் என்றால் என்ன? வாங்க தெரிஞ்சுக்கலாம்!  

கிரி கணபதி

டார்க் சாக்லேட் என்பது அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பாக இருந்தாலும் அது உங்கள் சருமத்திற்கும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதுவும் டார்க் சாக்லேட் பயன்படுத்தி பேசியல் செய்தால் சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும். இந்தப் பதிவில் டார்க் சாக்லேட் பேசியல் என்றால் என்ன? மற்றும் அதன் பல்வேறு நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம். 

டார்க் சாக்லேட் பேசியல் என்றால் என்ன? 

டார்க் சாக்லேட் பேஷியல் என்பது ஒரு ஸ்பா சிகிச்சையாகும். இதில் டார்க் சாக்லேட்டில் இருந்து தயாரிக்கப்பட்ட ஃபேஸ் மாஸ்க் அல்லது கிரீம் முகத்திற்கு பயன்படுத்தப்படும். இந்த ஃபேஸ் மாஸ்கில் இருக்கும் கோக்கோ பவுடரில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் சருமத்திற்கு நன்மை பயக்கும் பிற பொருட்கள் உள்ளன. இந்தக் கலவையை முகத்தில் தடவி குறிப்பிட்ட நேரத்திற்கு விட்டு, பின்னர் மெதுவாக நீக்குவார்கள். 

டார்க் சாக்லேட் பேசியலின் நன்மைகள்: 

டார்க் சாக்லேட்டில் பிளாவானாய்டுகள் மற்றும் பாலிப்பினால்கள் போன்ற ஆக்சிஜனேற்றங்கள் நிரம்பியுள்ளன. இந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் ஃப்ரீ ராடிகல் சேதத்திலிருந்து சருமத்தை பாதுகாக்க உதவும். மேலும் வயதான தோற்றத்தைத் தடுத்து சரும சேதத்திற்கு எதிராக பங்களிக்கும் மூலக்கூறுகளும் இதில் உள்ளன. இது ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி சிறந்த தோற்றத்திற்கு உதவும். 

டார்க் சாக்லேட்டில் இரும்பு, கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன. இது சருமத்திற்கு நீரேற்றம் மற்றும் ஊட்டச்சத்தை வழங்கும். இந்த சத்துக்கள் சருமத்தின் ஈரப்பதத்தை சமநிலையாக பராமரிக்கவும் ஆரோக்கியமான நிறத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. மேலும் இதில் உள்ள காஃபின் உள்ளடக்கம் சருமத்தில் ரத்த ஓட்டத்தைத் தூண்டி, ஊட்டச்சத்துக்களை வேகமாக உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது. 

டார்க் சாக்லேடின் வாசனை மனதையும், உடலையும் அமைதிப்படுத்தும் தன்மை கொண்டதாகும். டார்க் சாக்லேட் பேசியலின்போது சாக்லேட்டின் நறுமணம் மன அழுத்தத்தை குறைக்கவும், ஓய்வான உணர்வைக் கொடுக்கவும் உதவும். மேலும் இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் சருமத்தில் உள்ள மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை எதிர்த்து போராட உதவும். இவை கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கும் என்பதால் சருமம் நெகிழ்ச்சித்தன்மை அடைந்து என்றும் உறுதியாக இருக்கும். 

இப்படி பல நன்மைகளை டார்க் சாக்லேட் பேசியல் நமக்கு அளிக்கிறது. ஒவ்வொரு அழகு நிலையத்தில் பயன்படுத்தப்படும் தயாரிப்புகளைப் பொறுத்து அதற்கான முடிவுகள் மாறும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். சிறந்த முடிவுகளைப் பெற்று எந்த பக்க விளைவுகளும் வராமல் இருக்க டார்க் சாக்லேட் பேசியல் முயற்சிக்கும் முன்பு சரும பராமரிப்பு நிபுணரை ஆலோசிப்பது நல்லது. 

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT