2024 Beauty Trends Image Credits: Hindustan Times
அழகு / ஃபேஷன்

2024 ன் பியூட்டி டிரெண்ட் என்னென்ன இருக்கு... தெரிஞ்சிக்கலாம் வாங்க!

நான்சி மலர்

ம்முடைய அழகை பராமரிப்பது, நம்மை அழகாக வைத்து கொள்வது என்பது நமக்கு தன்னம்பிக்கையை கொடுக்க கூடியது. எனினும் ப்யூட்டி டிரெண்ட்ஸ் வருடா வருடம் மாறிக்கொண்டேயிருக்கும். அதற்கு ஏற்றார் போல நாமும் அவற்றை தெரிந்து வைத்து கொள்வது டிரெண்டுடன் ஒத்து போக நமக்கு உதவுகிறது. 2024ல் வந்த ப்யூட்டி டிரெண்ட் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம் வாங்க.

பளபளப்பான பிளஷ் (Glazed blush)

சிவந்த கண்ணங்களை பெறுவதற்காக பெண்கள் பிளஷ் மேக்கப் செய்து கொள்வார்கள். அது பெண்களுக்கு மேலும் வெட்கப்பட்டது போல முகத்தில் ஒரு அழகை கொடுக்கும். 2024ல் அத்தகைய பிளஷ்ஷை சற்று பளபளப்பு மற்றும் மினுமினுப்புடன் சேர்த்து போட்டு கொள்வது ஃபேஷனாக ஆகிவிட்டது.

சிவந்த உதடுகள் (Red lips)

இந்த வருடம் சிவந்த உதடுகளே மறுபடியும் டிரெண்டிங்கில் வந்துள்ளது. சிவப்பு நிற லிப்ஸ்டிக் அணிந்து கொள்வது மறுபடியும் ஃபேஷனாகி விட்டது. சிவப்பு நிறம் எடுப்பாக தெரிய கருப்பு, வெள்ளை நிறத்தில் உடை அணிவது சிறந்ததாகும்.

மெட்டாலிக் ஐ மேக்கப் (Metallic eye makeup)

கண்களுக்கு மேலே போடப்படும் ஐ மேக்கப்பில் பளபளக்கும் மெட்டல் நிறங்களை பயன்படுத்துவது டிரெண்டாகி விட்டது. மினுமினுப்பான காப்பர், கோல்ட், சில்வர் போன்ற போல்டான நிறங்களை பெண்கள் விரும்பி அணிகிறார்கள்.

Aurora nails

அரோரா நெல்ஸ் (Aurora nails)

‘நார்த்தன் லைட்’ என்று சொல்லப்படும் அரோரா போரியாலிஸ் (Aurora borealis) ஐ கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த டிரெண்ட் தென்கொரியாவில் பெரிய ஹிட். இதை ‘ஐஸ் நெல்ஸ்’ என்றும் அழைக்கிறார்கள். நார்த்தன் லைட்டை போன்ற பலவண்ணம் மின்னும் அழகை நகங்களில் கொண்டு வருவதே இந்த டிரெண்டாகும்.

 லைன்ட் லிப்(Lined lips)

உதட்டில் கோட்டிங்காக கொடுக்கப்படும் லைன் அதிக அடர்த்தி நிறத்தை கொண்டிருக்கும். உதட்டுச்சாயம் சற்று குறைவான நிறத்திலிருப்பதே இந்த டிரெண்ட். இது பார்ப்பதற்கு பெண்களுக்கு போல்டான லுக்கை கொடுக்கும்.

மோனோக்ரோம் மேக்கப் (Monochrome makeup) இந்த மேக்கப் டெக்னிக் என்னவென்றால், கண்கள், உதடு, கண்ணம் ஆகியவற்றிற்கு மேக்கப் செய்ய ஒரே நிறத்தை பயன்படுத்துவது. இது 2024 இன் பிரபலமான டிரெண்டாக உள்ளது. மினிமலிசத்தை விரும்பும் பெண்களுக்கு ஏற்றது.

ஸ்கினிமலிசம் (Skinimalism)

'இருப்பதே போதுமானது' என்ற தாரக மந்திரத்தை கொண்டதுதான் ஸ்கினிமலிசம் (Skinimalism) அதிக மேக்கப்களை பயன்படுத்தாமல் அவர்களுடைய குறை, நிறைகளை ஏற்று எளிமையான மேக்கப் செய்து கொள்வது. இதன் முக்கிய நோக்கம் ஆரோக்கியமான, வசீகரமான சருமத்தை பெறுவதேயாகும்.

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

SCROLL FOR NEXT