Hair Growth  
அழகு / ஃபேஷன்

தலையில் தயிரைத் தொடர்ந்து தடவி வர என்ன ஆகும் தெரியுமா?

ரா.வ.பாலகிருஷ்ணன்

விளம்பரங்களில் காட்டப்படும் பலவகையான அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்தியும் தலைமுடி வளர்ச்சியில் முன்னேற்றம் இல்லையென்று வருத்தப்படும் நபரா நீங்கள்! எந்தவித செலவும் செய்யாமல் வீட்டில் இருக்கும் ஒரு உணவுப் பொருளைக் கொண்டே தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா! ஆம் உண்மை தான். தலைமுடியைப் பலப்படுத்த தயிர் ஒன்றே போதும்.

எரிச்சல் அதிகமாக இருக்கும் உச்சந்தலையைக் குணப்படுத்தவும், தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கவும் புளித்த தயிர் மிகச் சிறந்த பொருளாகும். தயிரைத் தொடர்ந்து தலைமுடியில் தடவி வந்தால் நிகழும் மாற்றங்களைக் கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

தலைமுடி ஈரப்பதம்:

தயிரில் இயற்கையாகவே இருக்கும் ஈரப்பதமானது, தலைமுடி வேர்க்கால்களில் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. மேலும் இதில் இருக்கும் லாக்டிக் அமிலம் உலர்ந்த மற்றும் உடையக் கூடிய முடி இழைகளைக் கூட விரைவில் சரிசெய்து விடும். இதனால் முடியின் இயற்கையான பளபளப்புத் தன்மை மற்றும் மென்மையை மீட்டெடுக்கலாம்.

தலைமுடி வளர்ச்சி:

வைட்டமின் B5 அதிகம் நிரம்பியிருக்கும் தயிரை அடிக்கடி தலையில் தடவினால், உரோமக் கால்களுக்கு ஊட்டமளித்து முடி உதிர்வைத் தடுக்க முடியும். மேலும், உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்க தயிர் உதவுகிறது. இதனால் தலையில் முடி வளர்ச்சி கணிசமாக மேம்படும்.

சுத்தப்படுத்துதல்:

உச்சந்தலையில் இருக்கும் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்ய தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலம் உதவுகிறது. வறண்ட முடித் தன்மை உள்ளவர்களுக்கு தயிர் சிறந்த முடி பராமரிப்பு பொருளாக உதவுகிறது.

எரிச்சலைக் குறைக்கும்:

உச்சந்தலையில் இருக்கும் PH அளவை சமநிலைப்படுத்த தயிரில் உள்ள புரோபயாடிக் உதவுவதால், ஆபத்தை விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சி குறையும். இதனால், உச்சந்தலையில் பொடுகு, எரிச்சல், வீக்கம் மற்றும் அரிப்பைத் தடுக்கலாம்.

தலைமுடியின் வலிமை:

புரதச்சத்து குறைபாடு இருந்தாலும் தலைமுடிகள் வலுவிழக்கும். தயிரில் இருக்கும் புரதங்கள் தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவித்து முடியை வலிமையாகவும், தடிமனாகவும் மாற்றுகிறது. உடலுக்கு மட்டுமின்றி தலைமுடிக்கும் புரதச்சத்து அவசியம் என்பதால், தயிரைத் தொடர்ந்து தலையில் தடவி வரலாம்.

தயிரைத் தலையில் தடவுவதற்கு முன், தலைமுடியை தண்ணீரில் நன்றாக அலசி விட வேண்டும். அப்போது தான் தயிரில் இருக்கும் சத்துகள் தலைமுடிக்கு முழுமையாக கிடைக்கும்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT