Face Mist 
அழகு / ஃபேஷன்

உங்கள் முகத்திற்கான Mist-ஐ இனி வீட்டிலேயே தயாரிக்கலாம்!

பாரதி

முகத்தின் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளவும், சருமத்தின் பிஹச் அளவைப் பராமரிக்கவும் உதவும் ஒன்றுதான் மிஸ்ட். மேக்கப் போடுவதற்கு முன்னர் இதனை சருமத்தில் பயன்படுத்தினால், முகம் புத்துணர்வுடன் இருக்கும்.

மேக்கப் போடும்போது முகம் ஃப்ரெஷாக இருந்தால் மேக்கப் வெகுநேரம் நிலைக்கும். மேக்கப் நிலைத்தால் தான் முகம் பிரகாசமாகவும், அழகாகவும் இருக்கும். முகத்தை நீண்ட நேரம் ஃப்ரெஷாக வைக்க இந்த ஃபேஸ் மிஸ்ட் (Face mist) சிறந்ததாகும். இதிலுள்ள மாய்ஸ்சரைஸ் தன்மை, முகத்தை அதிக நேரம் ஃப்ரெஷாகவும், மேக்கப் கலையாமலும் வைக்கிறது. இது சருமத்திற்கு தேவையான வைட்டமின் சத்துக்களை வழங்குகிறது. எனவே, முகத்தை எந்தவொரு சரும பிரச்சனைகள் வராமலும் பாதுகாக்கிறது.

முகத்தின் சோர்வைப் போக்கும் இந்த மிஸ்ட்டை இனி கடைகளில் வாங்க அவசியமே இல்லை. வீட்டிலேயே இதனை எப்படித் தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.

கற்றாழை பேஸ் மிஸ்ட்:

தேவையானப் பொருட்கள்:

1.  வெள்ளரி – 1

2.  கற்றாழை ஜெல் – 1 டீஸ்பூன்

3.  Witch Hazel – ½ டீஸ்பூன்

4.  தண்ணீர் – ¼ கப்

செய்முறை:

இதில் வெள்ளரியை மட்டும் அரைத்து, அதன் சாறை எடுத்துக்கொள்ளுங்கள். பின் மற்ற அனைத்துப் பொருட்களையும் அதனுடன் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ரோஸ் வாட்டர் மிஸ்ட்:

தேவையானப் பொருட்கள்:

1.  வெள்ளரி – 1

2.  எலுமிச்சை சாறு – ½ டீஸ்பூன்

3.  ரோஸ் வாட்டர் – 60 ML

4.  கிளிசரின் – 2 டீஸ்பூன்

செய்முறை:

வெள்ளரியை நன்றாக அரைத்து அதன் சாறை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பின்னர் அதனுடன் எலுமிச்சை சாறு, ரோஸ் வாட்டர், கிளிசரின் ஆகியவற்றை சேர்த்து கலக்கி ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துப் பயன்படுத்தலாம்.

தேங்காய் தண்ணீர் மிஸ்ட்:

தேவையானப் பொருட்கள்:

1.  தேங்காய் தண்ணீர்

2.  Witch Hazel

இந்த இரண்டு பொருட்கள் இருந்தால் மட்டுமே போதும், மிஸ்ட் செய்துவிடலாம். இவை இரண்டையும் ஒன்றாக சமநிலையில் கலக்கி ஸ்ப்ரே பாட்டிலில் வைத்துக்கொள்ள வேண்டும்.

கிரீன் டீ மிஸ்ட்:

தேவையானப் பொருட்கள்:

1.  வெள்ளரிக்காய்

2.  க்ரீன் டீ

அரைத்த வெள்ளரிக்காயின் சாறைப் பிளிந்து, அதனை க்ரீன் டீயில் சேர்த்து கலக்கினால் க்ரீன் டீ மிஸ்ட் தயார்.

மிக எளிய முறையில் மிஸ்ட்டை வீட்டிலேயே செய்வதை விட்டுவிட்டு, எதற்காக கடையில் வாங்கி காசை வீணாக்கிக்கொண்டு...?

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT