எல்லோர்க்கும் பொதுவாய்
இயங்குது இயற்கை.
இயற்கைக்கு இடையூறு
இழைக்காமல் தவிர்த்திடுக...
1. நெகிழி பயன்பாட்டை
நீக்கியே ஒழித்திடுக.
2. உயிர்வளி நல்கும்
உயர்மரத்தை வெட்டாதீர்.
3. மழைநீரைச் சேகரித்து
மண்ணிற்குள் புகவிடுவீர்.
4. வயலில் இலைதழையை
உரமாக்கி மகிழ்ந்திடுக.
5. கழிவுநீர் ஆற்றில்
கலக்காது காத்திடுவீர்.
6. ஆழ்துளைகளால் மண் நீரை
அபகரித்து வீணாக்காதீர்.
7. கனிமவளம் தேடி
கற்பாறைகள் சிதைக்காதீர்.
8. ஆகாயத்தாமரை நீர்நிலைகளில்
வளரவிடாமல் செய்திடுக.
9. தாமரைக் குளங்களைத்
தரமாய்ப் பேணிடுக.
10. நீர்நிலை யோரங்களில்
பனைதனையே வளர்த்திடுக.
11. ஆற்று வண்டல்மண்ணை
ஆழமாகக் களவாடாதீர்.
12. மரக்கன்றுகளை நடுக
மழைவளம் பேணுக
13. புள்ளினங்களைக் காத்தே
பூமியைச் செழிப்பாக்குக.