Methane Bubbles Image Credits: Reddit
பசுமை / சுற்றுச்சூழல்

பூமியில் நடக்கக்கூடிய 3 இயற்கையான அழகிய நிகழ்வுகள்!

நான்சி மலர்

பூமியில் இயற்கையாகவே நடக்கக்கூடிய சில அழகிய நிகழ்வுகளைப் பார்க்கும்போது அதிசயம் கலந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். அத்தகைய 3 இயற்கை நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

1. Methane Bubbles: பனிக்காலங்களில் ஏரியின் நீர்ப்பரப்பு உறைந்திருப்பதால், ஏரியின் மேற்பகுதி கண்ணாடி போலக் காட்சி தரும். அப்போது ஏரியின் அடிப்பகுதியில் இருந்து வரும் மீத்தேன் வாயுக்கள் பனியில் உறைந்து Bubbles போல காட்சி தருவதை பார்ப்பதற்கு மிகவும் அழகாக ஒரு Artwork போல இருக்குமாம். சைபீரியாவில் இருக்கும் Lake Baikal இந்த இயற்கை நிகழ்வுக்கு பெயர் போனதாகும். இந்த நிகழ்வை பார்ப்பதற்காகவே எண்ணற்ற சுற்றுலா பயணிகள் இந்த ஏரிக்கு வருகைத் தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Bioluminescence Beach

2. Bioluminescence: தண்ணீரில் வாழக்கூடிய ஒரு வகை ஆல்கே போன்ற நுண்ணுயிர்கள் ஏற்படுத்தக்கூடிய அழகான நிகழ்வுதான் Bioluminescence ஆகும். பொதுவாக, கடல் தண்ணீரில் இருக்கும் இந்த நுண்ணுயிர்களுக்கு ஏதாவது தொந்தரவு ஏற்படும்போது இது போல ஒளியை ஏற்படுத்தும். அச்சமயம் அதைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இது பெரும்பாலும் நீல நிறத்திலேயே இருக்கும். இந்தியாவில் Bangaram Island, Havelock Island, Thiruvanmiyur beach, Mattu beach ஆகிய கடற்கரைகளில் இந்த அழகிய நிகழ்வைக் கண்டு ரசிக்கலாம்.

Aurora Borealis

3. Aurora Borealis: பூமியின் துருவப் பகுதியில் நடக்கும் மிகவும் அழகான நிகழ்வுதான் Aurora borealis ஆகும். Northern lights என்று அழைக்கப்படும் Aurora borealis பார்ப்பதற்கு ரிப்பன் போன்ற அமைப்பில் வண்ணமயமாக ஆடும் காட்சியைக் காண்பதற்காகவே எண்ணற்ற புகைப்படக் கலைஞர்களும், இயற்கையை ரசிக்கக்கூடிய சுற்றுலா பயணிகளும் தவம் கிடப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரியனில் இருந்து வெளிவரும் சூரியத் துகள்கள் பூமியின் காந்தப்புலத்தில் உரசுவதால் இப்படிப்பட்ட அழகான நிகழ்வு நடக்கிறது. இதை பார்ப்பதற்கு மிகவும் வண்ணமயமாகவும், அழகாகவும் இருக்குமாம். Aurora borealis பெரும்பாலும் பச்சை நிறத்தில் காட்சி தந்தாலும் சில அரிதான சமயங்களில் சிவப்பு, வயலட் நிறங்களில் தோன்றுமாம். இந்த 3 இயற்கையான நிகழ்வில் உங்களை மிகவும் கவர்ந்தது எதுவென்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT