8 coldest countries 
பசுமை / சுற்றுச்சூழல்

உலகில் அதிகமாக குளிர் நிலவும் 8 நாடுகள்!

ராதா ரமேஷ்

அண்டார்டிகா

Antarctica

ஆண்டு முழுவதும் பனியால் சூழப்பட்டு மனிதர்கள் வாழ முடியாத சூழலில் உள்ள ஒரு இடம் தான் அண்டார்டிகா. இங்கு பெரும்பாலும் மக்கள் வசிப்பதில்லை. இந்த இடத்தில் ஆறு மாதம் சூரியனையே பார்க்க முடியாது. சுமார் 300 கிலோ மீட்டர் வேகத்தில் பனிப்புயல் வீசிக்கொண்டே இருக்கும். கோடைகாலத்தில் வெப்பநிலை -89 டிகிரிக்கும் குறைவாகவே உள்ளது. உலகில் உள்ள நன்னீரில் 70% இங்கு பனிக்கட்டிகளாக உறைந்துள்ளது.

ரஷ்யா

Russia

கடுமையான குளிர் நிலவும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் இருப்பது ரஷ்யா. இங்கு கோடைகாலத்திலும் வெப்பநிலை 3 டிகிரிக்கும் குறைவாக உள்ளது. குளிர்காலத்தில் வெப்பநிலை -40 டிகிரிக்கும் குறைவாக உள்ளது. இரண்டு மாதங்கள் மட்டுமே இங்கு சூரியனை பார்க்க முடியும்.

கஜகஸ்தான்

Kazakhstan

இந்த நாட்டின் பல இடங்களில் ஆண்டு முழுவதும் பனிப்பொழிவும், மழைப்  பொழிவும் தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கிறது. குளிர்காலத்தில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸிற்கும் குறைவாக உள்ளது. மக்கள் வாழ்வதற்கு மிகவும் கடினமான சூழலை கொண்டுள்ள நாடுகளில்  இதுவும் ஒன்று.

கிரீன்லாந்து

Greenland

ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு கிரீன்லாந்து. உலகில் மிகக் குளிரான நாடுகளில் இதுவும் ஒன்று. அனைத்து பக்கங்களிலும் கடலால் சூழப்பட்டு மிக நீண்ட கடற்கரையை கொண்டுள்ளது இந்த நாடு. இங்கு குளிர்காலத்தில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக உள்ளது. இங்கு நிலவும் பருவ நிலைக்கேற்ப மிக நீண்ட பகலையும் நீண்ட இரவையும் கொண்டுள்ளது. 

கனடா

Canada

பச்சை பசேல் என  காட்சியளிக்கும் அதிகமான நிலப்பரப்புகளையும்  அதிக ஏரிகளையும் கொண்டது கனடா. இங்கு பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். கனடாவின் மேற்கு பகுதியில் வெப்பநிலை 15 டிகிரி முதல் -40 டிகிரி வரை இருக்கும். மேலும் வடக்கு பகுதியில் சில இடங்களில் 11 மாதங்கள் வரை குளிராகவும், மேற்கு பகுதியில் சில இடங்களில் 5 மாதம் வரை குளிராகவும்  இருக்கிறது.

ஐஸ்லாந்து

Iceland

வட ஐரோப்பாவில் அமைந்துள்ள ஒரு நாடு ஐஸ்லாந்து. கோடைகாலத்தில் பச்சை பசேல் என பசுமையாக காட்சியளிக்கும் நிலப்பரப்புகள் குளிர்காலத்தில் பனியால் மூடப்பட்டு காணப்படுகின்றன. இங்கு குளிர்காலத்தில் வெப்பநிலை -10 டிகிரிக்கும் குறைவாக உள்ளது. நாட்டின் வடக்கு பகுதியில் ஆண்டு முழுவதும் 0 டிகிரி வெப்பநிலையே நிலவுகிறது. இங்குள்ள பனிப்பாறைகள் மற்றும் பனி குகைகளை பார்வையிட அதிகமான  சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.

பின்லாந்து

Finland

ஐரோப்பாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள நாடு பின்லாந்து. இங்கு குளிர்காலத்தில் நாடு முழுவதும் பனிப்பொழிவு இருந்து கொண்டே இருக்கும். சூரிய ஒளியை காண்பதே அரிதாக இருக்கும் இந்நாட்டில் வெப்பநிலை -45 டிகிரிக்கும் குறைவாகவே உள்ளது. குளிர்காலத்தில் நடத்தப்படும் விளையாட்டுக்கள் (winter sports) இங்கு  மிகவும் பிரபலமானவை.

எஸ்டோனியா

Estonia

வட ஐரோப்பாவில் அமைந்துள்ள இந்த நாடு மிகவும் ஈரப்பதத்துடன் கூடிய காலநிலையை கொண்டது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் வெப்பநிலை -36 டிகிரிக்கும் குறைவாகவே உள்ளது. இந்நாட்டில் நிலவும் குளிர்காலம் மிகவும் நீளமானது. அதிகமாக பைன் மர காடுகளைக் கொண்டுள்ள எஸ்டோனியா சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக காணப்படுகிறது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT