Apex Predators 
பசுமை / சுற்றுச்சூழல்

Apex Predators: உணவுச் சங்கிலியின் ராஜாக்கள்! 

கிரி கணபதி

அதிசயமிக்க இயற்கை உலகில், சில வேட்டையாடும் உயிரினங்கள் இந்த சுற்றுச்சூழல் அமைப்பின் ராஜாக்களாக திகழ்கின்றன. Apex Predators என அழைக்கப்படும் இந்த உயிரினங்கள் உணவுச் சங்கிலியில் முதல் இடத்தைப் பிடித்து, ஈடு இணையற்ற வேட்டையாடும் திறன்களைப் பெற்றிருக்கின்றன. இந்தப் பதிவின் வாயிலாக Apex Predator-கள் பற்றிய ரகசியங்களை நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். 

Apex Predators என்றால் என்ன? 

ஆல்ஃபா வேட்டையாடிகள் என அழைக்கப்படும் ஏபெக்ஸ் ப்ரிடேட்டர்கள், உணவுச் சங்கிலியின் உச்சத்தில் அமர்ந்திருக்கும் இனங்களாகும். அதாவது மனிதர்களைத் தவிர இந்த விலங்குகளை வேறு எந்த உயிரினங்களாலும் வேட்டையாட முடியாது . எனவே இந்தப்.. பரந்த உலகில் அதிக அளவிலான இரைகளை வேட்டையாடும் தன்மை இவற்றிற்கு உண்டு. இதன் மூலமாக சுற்றுச்சூழல் அமைப்பின் முழு கட்டுப்பாடு இவைகளிடமே உள்ளது. இந்த வேட்டையாடிகளால் பல உயிரினங்களின் ஆதிக்கம் தடுக்கப்பட்டு இயற்கை சமநிலை பராமரிக்கப்படுகிறது.  

அசாதாரண வேட்டைத் திறன்கள்: எப்பெக்ஸ் வேட்டையாடிகள் தங்கள் இரையை திறமையாக கைப்பற்றி கெல்லும் அசாதாரண வேட்டைத் திறன்களுக்கு பெயர் பெற்றது. ஒரு சிறுத்தையின் மின்னல் வேகம் முதல், முதலையின் பொறுமை மற்றும் திருட்டுத்தனம் வரை, ஒவ்வொரு வேட்டையாடிகளும் அதன் தனித்துவமான வேட்டையாடும் ஆற்றல்களைக் கொண்டுள்ளன. அவை தங்களின் சக்தி வாய்ந்த தாடைகள், நகங்கள், வேகம், சுறுசுறுப்பு மற்றும் உருவத்தை மறைத்துக் கொள்வது போன்ற பல நுட்பங்களால் வகைப்படுத்தப்படுகிறது. இதன் மூலமாகவே தங்களின் இரையை வெற்றிகரமாக அவை கைப்பற்றுகின்றன. 

Keystone இனங்கள்: பல Apex Predator-கள் Keystone இனங்களாகக் கருதப்படுகின்றன. அதாவது சுற்றுச்சூழல் அமைப்பின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கு அவற்றின் இருப்பு மிகவும் அவசியம். அவற்றின் செயல்பாடுகள் மற்றும் வேட்டையாடும் நடத்தைகள் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலை பாதிக்கும் ரிப்பில் விளைவுகளை உருவாக்குகின்றன. உதாரணத்திற்கு, ஓநாய் இனங்களால் தாவர உண்ணிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது. இல்லையேல் தாவர உண்ணிகள் அதிகரித்து, தாவரங்கள் அதிகமாக அழிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் அமைப்பின் நுட்பமான சமநிலை சிறுகுலைந்து, பல்லுயிர் இழப்புக்கு வழிவகுக்கும். 

எனவே இத்தகைய Apex Predator-களின் தேவை இந்த சுற்றுச்சூழலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. Apex Predator-களுக்கு உதாரணமாக நிலத்தில் வாழும் சிங்கங்கள், பனியில் வாழும் பனிக் கரடிகள், நீரில் வாழும் Orca, பறவை இனங்களில் கழுகு போன்றவற்றை சொல்லலாம். மனிதனைத் தவிர இந்த விலங்குகளை வேட்டையாட யாரும் இல்லை. இதனாலேயே இந்த விலங்குகள் உணவுச் சங்கிலியில் ஆதிக்கம் செலுத்தும் ராஜாக்களாகத் திகழ்கின்றன. 

டேஸ்டியான வாழைத்தண்டு பால் கறி மற்றும் முட்டை ஊறுகாய் செய்யலாம் வாங்க!

ஐபிஎல் எப்போது தொடக்கம்? வெளியான செய்தியால் ரசிகர்கள் குஷி!

ஃபேஷன் அழகியான மூதாட்டிக்கு ஹாலிவுட்டில் குவியும் வாய்ப்புகள்!

பிறர் சிரிப்பிற்கு பின் இருக்கும் அழுத்தத்தை எவ்வாறு உணரலாம்?

ஐயப்ப பக்தர்கள் கருப்பு ஆடை அணிவதற்கும் ஒரு காரணம் உண்டு!

SCROLL FOR NEXT