Artificial coral Reef. 
பசுமை / சுற்றுச்சூழல்

கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க செயற்கை பவளப்பாறை!

க.இப்ராகிம்

மன்னார் வளைகுடா பரப்பளவைப் பாதுகாக்க செயற்கை பவளப்பாறைகளை நடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய கடற்பரப்பில் பல்வேறு வளங்களை கொண்ட களஞ்சியமாக உள்ளது மன்னார் வளைகுடா கடல் பரப்பு. இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவு முதல் கன்னியாகுமரி வரை பறந்து விருந்து காணப்படும் மன்னார் வளைகுடா பகுதியில் பல்வேறு அரிய வகை உயிரினங்கள், பவளப்பாறைகள், மாட்டுரோவ் காடு, 109 வகை பவளப்பாறைகள், 147 வகை கடற் பாசிகள், 160 வகை பறவையினங்கள், 450 வகை மீன் இனங்கள், 3600 வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. இவ்வாறு பல்வேறு சிறப்புகளைக் கொண்ட மன்னார் வளைகுடா தற்போது அழிந்து வருகிறது.

காலநிலை மாற்றம், கடலில் கலக்கும் கழிவுநீர்கள், அளவுக்கு அதிகமான வெப்பம், கடலில் சட்ட விரோதமாக கலக்கப்படும் ரசாயனங்கள் போன்றவை காரணமாக 65 சதவீத பவள திட்டுக்கள் அழிந்து இருக்கின்றன. இதன் மூலம் பல்வேறு வகையான கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

மன்னார் வளைகுடா பகுதியை பாதுகாக்கும் பொருட்டும். உயிரினங்களை பாதுகாக்கும் பொருட்டும். ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நிதி உதவியோடு 2022 ஆம் ஆண்டு 20 லட்சம் ரூபாய் செலவில் இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவு முதல் தூத்துக்குடி மாவட்டம் வரையில் மன்னார் வளைகுடா கடல் பரப்பில் 560 சதுர கிலோமீட்டர் தொலைவிற்கு செயற்கையாக பவளப்பாறைகள் வளர்ப்பது, கடல் புற்களை நடுவது ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது இது விரிவடைந்து 4500 சதுர மீட்டர் பரப்பளவில் இப்பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 1500 சதுர மீட்டர் பரப்பளவு வரை பவளப்பாறைகள் நடப்பட்டு முதல் கட்ட பணி முடிவடைந்துள்ளது. இவை வருங்காலத்தில் மேலும் விரிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT